ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram

தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை போட்டுக்கொண்டு மக்களை திசை திருப்புவது அல்லது மக்களிடம் மக்களுக்காக உழைப்பது பாடுபடுவது போல பாவல காட்டுவது ,அரசியல் தெரியாத மக்களிடம் தான் இது பலிக்கும்.மேலும், அரசியல் தெரிந்தவர்கள் அல்லது ஜால்ரா ஊடகங்கள் இதை மிகப் படுத்திக் கொண்டிருக்கும்.

நேற்று நான் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது, புதிய தலைமுறைக்காக ஒரு பையன் கேமராவை தூக்கிக் கொண்டு வந்து சார்,சுயற்சி பற்றி ஒரு பேட்டி கொடுங்க சார் என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை ,தம்பி சுயற்சியா? என்ன பா சுழற்சி என்றேன்? அப்போதான் சொன்னான் சட்டமன்றத்திலே திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி சொன்ன போது, நான் சொன்னேன் தம்பி சுயற்சி வேற, சுயாட்சி வேற, நீ பேட்டி எடுக்குறியே 100க்கு ரெண்டு பேருக்கு கூட சுயாட்சி பற்றி தெரியாது.
உனக்கே சுயற்சிக்கும், சுயாட்சிக்கும் அர்த்தம் தெரியல, நீ என்னத்த பேட்டி எடுக்குற? ஆள விட்டா போதும்ன்னு ஒடியே போயிட்டான். இப்படி தான் திமுக அர்த்தம் இல்லாமல் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. பல தீர்மானங்கள் அதில் அடங்கும். முன்மொழி கொள்கை, நீட் தேர்வு இப்படி பல தீர்மானங்களை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த தீர்மானத்தினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நீங்கள் எந்த ஆட்சியை கொடுத்தாலும், அதாவது சுயாட்சியை கொடுத்தாலும், அதில் கூட திமுகவால் ஊழலற்ற ஆட்சியை உங்களால் கொடுக்க முடியாது.

அப்படி இருக்கும்போது உங்களுடைய ஊழல் பிரச்சனைகள் ,திமுகவில் உள்ள அமைச்சர்கள் மீதும், ஸ்டாலின் குடும்பத்தின் மீதும் டாஸ்மாக் ஊழல், கனிமவளத் துறை ஊழல், போன்றவற்றில் அமலக்கத்துறை நெருக்குகிறது. அதாவது விஞ்ஞான பூர்வமான ஊழல் அந்த காலத்திலேயே செய்த வரலாறு திமுகவுக்கு உண்டு. அப்போது இவ்வளவு பெரிய நெட்வொர்க் மற்றும் இணையதள வசதிகள் இல்லை. கணக்குப் புத்தகங்களை கொளுத்து விடுவார்கள். இப்போது ஒரு இடத்தில் மறைத்தாலும், அது பல இடங்களில் அந்த கணக்கு வழக்குகள் இருக்கும். இதில் மாட்டிக் கொள்கிறார்கள்.
அது மட்டுமல்ல, மணி லாண்ட்ரி ஆக்ட் (Money laundering act) என்று சொல்லக்கூடிய அந்நிய நாட்டில் முதலீடு அங்கே மறைக்க முடியாது. இப்படி ஏகப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மெகா ஊழல்கள் திமுக ஆட்சியின் சிறப்பு அம்சமாக இருந்து வரும் போது, இதை மக்களிடம் மறைப்பதற்கு போடும் திட்டங்கள், தீர்மானங்கள், வாய்ச்சவடாளர்கள், திமுகவின் ஐடி வீங்குகள், அதன் கைக்கூலிகளாக இருக்கக்கூடிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றும் கருவிகளாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.மேலும்,

இந்த ஊழல் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, போன்ற துறைகள் திமுக ஆட்சியை நிறை சுற்றி வளைத்து, ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுக்கும்போது, திமுக ஆட்சியினரின் அடாவடித்தனங்கள், அர்த்தமற்ற பேச்சுக்கள், மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகள், உச்சநீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் ஓடிக்கொண்டு,தமிழ்நாட்டு அரசியல் பரபரப்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டு, இவர்களுக்கு இதையெல்லாம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை.

நாட்டில் நாங்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், மக்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், எங்களுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பார்கள். ஆயிரத்திற்கும், 500க்கும், டாஸ்மாக் பாட்டிலுக்கும்,வாக்களிக்க தயாராக இருக்கும்போது,மக்களுக்கு இந்த ஊழலை பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களை நாங்கள் அடிமையாகவே வைத்துக் கொண்டிருப்போம். அவர்களுக்கு தேவை இலவசம், அந்த இலவசத்தை கொடுத்து, அவர்களிடம் பல மடங்கு அதாவது ஆயிரம் ரூபாய் கொடுத்து, பத்தாயிரம் மறைமுகமாக பிடுங்கி விடுவோம். இது எல்லாம் இந்த மக்களுக்கு தெரியாது.
அதனால், நாங்கள் என்ன சொன்னாலும், அதை பரப்பிக் கொண்டிருக்கிற தொலைக்காட்சிகள் ,பத்திரிகைகளுக்கு மட்டுமே நாங்கள் சலுகை, விளம்பரங்களை கொடுத்து கொண்டு இருப்போம். இதுதான் மக்களின் நான்காவது தூண். அதனால், நாங்கள் சமூக அக்கறையுடன் தான் பேசுவோம், நடிப்போம், மக்களுக்காக உயிரை விடுவது போல் காட்டிக் கொண்டிருப்போம், இது தான் திமுக ஆட்சியின் ரகசியம். மேலும், சுயாட்சிக்காக தீர்மானம் போடும் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி தேவை என்று தீர்மானம் போட தகுதி இருக்கிறதா?அதற்கு நீங்கள் தகுதியும் இல்லை.மேலும்,

மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் ,அரசு ஊழியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதியம் ,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கையாளர்களின் உரிமைகள், அதற்கு கிடைக்க வேண்டிய ஊதியம், இது எல்லாம் ஒழுங்காக செய்தாலே போதும், சுயாட்சி கொண்டு வந்து ,தமிழ்நாட்டை பெரிய அளவில் மாற்றி விடப் போகிறீர்களா? ஆளுக்கு ஆளுக்கு பேசிப் ,பேசி ஓட்டு போடக்கூடிய மக்களை முட்டாள்களாக ஆக்கி வருகிறார்கள்.
ஜனநாயகத்தின் கடமையாக ஓட்டு போடுபவன் (பணம் வாங்காத மக்கள்) இந்த கொள்ளைகளை பற்றி, இந்த ஊழல்களைப் பற்றி ,வேதனை தெரிவிக்கிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவன், எவன் வந்தாலும், நமக்கு என்ன என்று வாங்கிக் கொண்டு போட்டுக் கொண்டிருக்கிறான். இங்கே ஒரு குறிப்பிட்ட ஜெனரேஷன் தமிழ்நாட்டில் செத்தா தான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

வருங்கால படித்த இளைய தலைமுறைகள், சிந்தித்து வாக்களிக்கும் போது, இந்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதுவரை தமிழ்நாட்டிற்கு எந்த சுயாட்சி வந்தாலும், மக்களின் முன்னேற்றம், அவர்களுடைய உரிமைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, எல்லாமே கேள்விக்குறியாக தான் இருக்கும். அதனால், நிர்வாகத்தை சரிவர நடத்த தெரியாமல், கார்ப்பரேட் ஊடகங்களை வைத்து கதை சொல்லிக் கொண்டிருந்தால், நாட்டு மக்கள் அதை படித்துப் பார்த்து, தொலைக்காட்சிகளில் பார்த்து ,ஏமாந்து தான் போவார்கள். இதுதான் ஆரம்பத்திலிருந்து மக்கள் அதிகாரம் மக்களிடம் சொல்லுகின்ற உண்மை.

இந்த ஆட்சியில் எல்லாமே வீர வசனம், நடிப்பு ,திரைக்கதை வசனம், இப்படிதான் ஓடிக்கொண்டிருக்கிறது .ஆரம்பத்தில் இதனுடைய புள்ளி எங்கு ஆரம்பித்ததோ? அதாவது நாடகம், சினிமாவில் தோன்றிய வரலாறு, இது முடியும் தருவாய் வரை ,அப்படியே தான் அதற்குள்ளே சுழன்று வருகிறது. இன்று கூட நீங்கள் பார்க்கலாம். ஒருவர் ஆரம்பத்தில் என்ன பதவிக்கு வந்தாரோ, அதாவது அவர் கிளார்க் வேலைக்கு வந்து, மாவட்ட அதிகாரியாக தற்போது பதவி வகித்தாலும், அவரிடம் அந்த கிளார்க் தகுதியின் அடிப்படையிலே பணியாற்றிக் கொண்டிருப்பார். இது உண்மை.
திமுகவும் வாயிலே வடை சுட்டு காண்பித்து, காண்பித்து, அவர்கள் வாயில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இதை தான் மக்கள் பார்க்க வேண்டும். தற்போது இந்த டாஸ்மாக் இல்லை என்றால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட, ஆட்டம் தான். இப்படிப்பட்ட நிலைமையில் ஆட்சி, நிர்வாகம் இருந்து கொண்டு, சுயாட்சி ஒரு பக்கம்! கவர்னரை எதிர்த்து சட்ட போராட்டம், அதாவது கவர்னர் கோடிக்கணக்கில் ஊழல் செய்து விட்டவர் போல, அவரைப் பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருப்பது, அவர் தமிழ்நாட்டின் விரோதி போல இவர்கள் பேசிக் கொண்டிருப்பது, அடி முட்டாள் கூட இதை நம்ப மாட்டான்.
அப்படி நம்புகிறவன் யார்? என்றால்,அவன் வாக்களிக்க கூட தகுதி இல்லாதவன் தான், இதையெல்லாம் நம்புவான். அதனால், முதல்வர் ஸ்டாலின் ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் பதவிக்கு வந்து விட்டால், நல்ல ஆலோசனை சொல்லக்கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பேச்சையாவது கேட்டு செயல்பட வேண்டும். கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி ஃபைலில் கையெழுத்து போடும்போது, எந்த பிரச்சனை வந்தாலும், நீங்க தான் பாத்துக்கணும். உங்களை நம்பி தான் போடுகிறேன். இப்படி சொல்லி போடுவார் என்று கேள்விப்பட்டேன்.

நீங்கள் எல்லாம் தெரிந்த மேதை மாதிரி தான் பேசுகிறீர்கள் .அது கூட எழுதி கொடுப்பவன் சரியாக எழுதிக் கொடுக்கிறானா? என்பது கூட தெரியவில்லை. செய்தித்துறை தான் எழுதிக் கொடுக்க வேண்டும். அவர்கள் சுயநலவாதிகளாக இருப்பவர்கள். ஏனென்றால், பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாது. சமூக நலத்திற்கும் அர்த்தம் தெரியாது .அப்புறம் எப்படி நாட்டு மக்கள் நலனில் அக்கறை காட்டி, அவர்கள் உங்களுக்கு எழுதி கொடுப்பார்கள்? ஏதோ வந்த வரைக்கும் இந்த ஆட்சியை நாலு வருஷம் கடத்தி விட்டீர்கள். அது உங்க தலையெழுத்து, அனுபவிக்க வேண்டியது எங்கள் தலையெழுத்து, இப்படி தான் கடவுள் செய்த ஒரு தவறு. அதனால், எந்த ஆட்சி(சுயாட்சி) கொண்டு வந்தாலும்,தமிழ்நாட்டில் தீர்மானங்களை இயற்றி E D ரெய்டு ஊழல் மறைக்க முடியுமா?மேலும்,நேர்மையான ஊழல் அற்ற ஆட்சி உங்களால் கொடுக்க முடியுமா? – தமிழக மக்கள்.