காஞ்சிபுரம் பக்தவச்சலம் பாலிடெக்னிக்கில் நடைபெறும் ஊழலை கண்டித்து மாணவர்களின் ரகசிய போஸ்டர் போராட்டம் என்ன? தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மார்ச் 19, 2025 • Makkal Adhikaram

காஞ்சிபுரம் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி! அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியாக இது செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இக் கல்லூரியில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக மாணவர் சேர்க்கையில் ஊழல் முறைகேடுகள் நடந்து வருவதாக மாணவர்கள் காஞ்சிபுரம் நகரை சுற்றி பல்வேறு இடங்களில் போஸ்டரை அடித்து ஒட்டி உள்ளனர். மேலும்,

அந்த போஸ்டர்களை கூட நிர்வாகம் தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தெரியாமல் இருக்க, எல்லா இடங்களிலும் ஆள் வைத்து கிழித்துப் போட்டு உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.தவிர, இந்த கல்லூரியில் எத்தனை கோடி ஊழல்? முறைகேடு என்பதை கண்காணித்து அரசு தரப்பில் இருந்து ஆடிட்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இக் கல்லூரியை ஆய்வு செய்து மாணவர்களிடம் ரகசிய விசாரணை செய்தால், பல கோடி ஊழல்கள் வெளிவரும் என்று மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரியில் அரசு தரப்பில் உள்ள மாணவர் சேர்க்கையை சேர்க்காமல், சுயநிதி மாணவர் சேர்க்கையில் ஆயிரம் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு சேர்க்கிறார்கள் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு .இந்த தொகையை இக்கல்லூரி நிர்வாகம் 2017 முதல் தொடர்ந்து கட்டணத்தை நிர்ணயித்த தொகையை விட அதிகமாக வசூல் செய்வதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும்,  இக் கல்லூரியில் மாணவர்களிடம் ரூபாய் 9 ஆயிரத்தை வசூல் செய்து கொண்டு, 3000 ரூபாய் மதிப்புள்ள யூனிபார்ம் மட்டுமே தருவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு. இப்படி பல்வேறு வகைகளில் இந்த ஊழல் முறைகேடு இக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. 

அதனால், முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் நிர்வாகப் பிரதிநிதி டாக்டர் செல்வராஜ் மற்றும் முன்னாள் முதல்வர் இந்நாள் விரிவுரையாளர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோரை கல்லூரி நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு  வைத்துள்ளனர். 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இப் பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *