தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

ஜனவரி 26, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் அரசியல் என்பது அறுவது சதவீத (60%) மக்களுக்கு தெரியாது, புரியாது. அதனால் தான், எந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கும் காசு கொடுத்தால் சென்று விடுகிறார்கள். அங்கே அவர்களுக்கு பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து, கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் வைத்துக் கொள்கிறார்கள்.இது மக்களை ஏமாற்றும் அரசியல். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மைக்கில் பேசி ,ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து தன்னை புனிதப்படுத்திக் கொள்வது அரசியல் வாடிக்கையாகி விட்டது. இது ஒரு போலி அரசியல் !இந்த போலி அரசியலுக்கு ஊரிலும் நகரிலும் இவர்களுடைய கட்டவுட்களை வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த காலத்தில் எந்த ஒரு அரசியல்வாதியும், ஒருவரைப் பற்றி, ஒருவர் விமர்சனம் செய்ததில்லை. நம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? அப்படிதான் ஒவ்வொரு எம்எல்ஏ மற்றும் எம் பி வரை லெட்டர் பேடும், சீலும், தன்னுடைய ஜிப்பா பாக்கெட்டில் வைத்திருந்தார்கள். எந்த ஒரு வேலை ஆனாலும், தங்களுடைய லெட்டர் பேட்டில் கையெழுத்து போட்டு, சீல் போட்டு மக்களுக்கு கொடுப்பார்கள். ஒரு ரூபாய் கூட அவர்கள் பணம் வாங்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இப்படி இருந்த அரசியல், எப்படி இருக்கிறது? என்பதை படித்த சமுதாயம் சிந்தியுங்கள். 

அப்போதெல்லாம், அந்த கிராமத்திற்கோ, நகரத்திற்கோ தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்கள் சொந்த பணத்தை தான் இழந்து இருக்கிறார்கள். அதனால் எத்தனையோ குடும்பங்கள், நடுத்தெருவிற்கு வந்துள்ளது. ஆனால், இன்றைய அரசியல்! வெத்து கூட்டங்களையும், வெத்துப் பேச்சுகளையும் மைக்கில் பேசிக்கொண்டு, ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு, இதுதான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளும், இதுதான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆக கூடி இரண்டு பேரும் சேர்ந்து தான் மக்களை முட்டாளாக்கும் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

தமிழ்நாட்டில் அரசியல் என்பது மைக்கின் முன்னாடி பேசி, நடிப்பது தான் அரசியல்! அதனால்தான் இன்று சினிமாவில் கேமரா முன் பேசி நடிப்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்களா?நடிகர்கள் கேமரா முன் வசனம் பேசி  நடிக்கிறார்கள். இவர்கள் மைக் இன் முன் அரசியல் வசனம் பேசி நடிக்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் அவ்வளவுதான் . அவர்கள் மேக்கப் போடுகிறார்கள். இவர்கள் மேக்கப் போடம நடிக்கிறார்கள். அவர்களாவது எவனோ எழுதி கொடுத்ததை பேசி நடிக்கிறார்கள். இவர்கள் வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் பேசிக் கொண்டு நடிக்கிறார்கள்.மேலும், 

மக்கள் எது உண்மை ?எது பொய் ?என்று தெரியாமல் பேச்சில் வல்லவனாக, நல்லவனாக, பேசுகிறானோ அவன் பின்னாடியும் முட்டாள்கள் கூட்டம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. எவன் உதார் விட்டு உடம்பை காட்டுகிறானோ, அவனும் பெரிய அரசியல்வாதி என்று அவன் பின்னாலும் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதாவது சீமான் மாதிரி, திருமாவளவன் மாதிரி, அன்புமணி மாதிரி,பிஜேபி அண்ணாமலை மாதிரி ,இங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு உடம்பு தான் கனமாக இருக்க வேண்டும். ஊரிலும் அப்படித்தான் நினைக்கிறார்கள். நகரத்திலும் அப்படித்தான் நினைக்கிறார்கள். 

இந்த மக்களுடைய சுயநலம் அதிகமாகி பொதுநலத்திற்கும், சுயநலத்திற்கும் கூட பாகுபாடு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் படித்தவர்களுக்கும், வித்தியாசம் இல்லை. படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. சில சமுதாயங்கள் அப்படித்தான் இருக்கிறது.நல்லவன், கெட்டவன் தெரியாம வாழ்ந்து கொண்டு அரசியல்வாதிகளிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். 

அந்த காலத்தில் படிக்காமல் வாழ்ந்த மக்கள் பணத்திற்காக வாக்களிக்கவில்லை. அவர்கள் தகுதியானவர்களையும், படித்தவர்களையும் மதித்து வாக்களித்தார்கள். அவர்கள் உழைப்பை, உண்மையை நம்பி வாழ்ந்தார்கள். கடவுள் நம்பிக்கையுடன் வாழ்ந்தார்கள். மனசாட்சியுடன் வந்தார்கள். மனசாட்சியுடன் பேசினார்கள். இப்போது அது எங்கே? என்று கேட்டுக்கொண்டு ,எவ்வளவு தப்பு பண்ணாலும், உண்டியலில் பணம் போட்டுவிட்டு, கடவுளை கல் என்று கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

இதுதான் அரசியல் என்று பெரிய கார்ப்பரேட் பத்திரிக்கை முதல் சிறிய பத்திரிகைகள் வரை இவர்களுடைய ஊழல் பட்டியல்களை வெளியிட்டு, தன்னைப் பெரிய பத்திரிக்கையாக மக்கள் முன் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவிர ,இதுதான் நாட்டின் நான்காவது தூண் என்று நமது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவர்கள் தான் பத்திரிகையாளர்கள்,இவர்களுக்கு தான் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர தகுதி உள்ளவர்கள். இந்த பத்திரிகைகளில் பணிவாற்றுபவர்கள் தான் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்று பொறுப்புக்களை கொடுத்திருக்கிறார்கள். 

இதில் எங்களைப் போன்ற எந்த சிறிய பத்திரிகைகள் வளர்ச்சி பெறக்கூடாது என்பதில் அவர்களும் ஒட்டு மொத்தமாக மேலே வரக்கூடாது என்பதில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம், youtube, சேனல் போன்றவற்றில் இது போன்ற முக்கிய செய்திகளை, உண்மைகளை வெளிப்படையாக கொண்டு, மக்களிடம் உண்மையை சொன்னாலும், நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் கட்சிகள் இருந்தாலும், ஒன்று கூட ,இது பற்றி வாய் திறக்கவில்லை. இன்றைய அரசியல் கட்சி,மற்றும் அரசியல் கட்சியினர் அவரவர்களை பலப்படுத்திக் கொள்ள,வளப்படுத்திக் கொள்ள அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, மக்களுக்கு சேவை செய்ய இந்த அரசியல் கட்சியும், அரசியல் கட்சியினரும் இல்லை என்பது எழுதி வைத்துக் கொள்ளலாம்.மேலும், 

பேசுவது தான் அரசியல்! செயல்படுவது அரசியல் அல்ல. ஒவ்வொருவரும் அரசியல் கட்சிக்கு வரும்போதே எத்தனை கோடி சம்பாதிக்கலாம் ?எத்தனை லட்சம் சம்பாதிக்கலாம்? எம்எல்ஏ ஆனால்? எத்தனை கோடி? மந்திரி ஆனால் எத்தனை கோடி ?மாவட்டம் ஆனால் எத்தனை கோடி?இப்படி ஒவ்வொரு கட்சியினரும், கனவுகளோடு தான் கோடிகளை எந்த வழியில்? எப்படி சம்பாதிப்பது? என்ற நோக்கத்தோடு தான் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களை எல்லாம் நல்லவர்களாக, வல்லவர்களாக எழுதிக்கொண்டு, பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சிகள்,பிழைப்புக்கு பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கும் கூட்டங்களும், மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். 

அவர்களுக்கு தான் மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்று சமூக நோக்கமுள்ள நமது செய்தித்துறை உயர் அதிகாரிகள் முதல் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் வரை இதுதான்  உயர்தர பத்திரிகை என்று சான்றளித்துக் கொண்டிருப்பார்கள். அதனால், மக்கள் இன்றைய காலகட்டத்தில் எப்படி எல்லாம் ஒருவரை ஏமாற்றி, தன்னைத் திறமை சாலியாக, புத்திசாலியாக, பிழைப்பு நடத்துவது என்பதுதான் விஞ்ஞான உலகம். இதில் வடிவேலு சொல்வது போல ரொம்ப நல்லவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,  

சமீபத்தில் கோவையை சேர்ந்த youtuber ,என்னுடைய நண்பர் ஒருவரிடம் பிரசார் பாரதியில் உங்கள் பத்திரிகையை இணைத்துக் கொண்டால், நீங்கள் பெரிய அளவில் பத்திரிகை கொண்டு வந்து விடலாம், உங்களுக்கு கோல்டன் ஆப்பர்சூனிட்டி என்று நன்றாக பேச்சுத் திறமையாளர் அவர், அவருக்கும் பேசினார், எனக்கும் பேசினார். அந்த இணையத்தை இணைக்க என்னிடமும் ,அவரிடமும் ரூ 15,000/- கேட்டார். நான் சொன்னேன். எனக்கு கால அவகாசம் தேவை என்றேன். இல்ல சார், இந்த ஆப்பர்சுனிட்டி இரண்டு நாள் தான் டைம். எனக்கு தேவையில்லை என்றேன். 

நான் உடனே மத்திய அரசு செய்தித்துறை  அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினேன். சார் அது ஒரு ஏஜென்சி அவ்வளவுதான். செய்திகளை அதில் போடுவார்கள். அதாவது யு. என். ஐ; பிடியை போன்றது தான் என்றார். உடனே நண்பருக்கும், ஃபோன் போட்டு விவரத்தை சொன்னேன் .அவர் அப்படியா? இல்ல சார் ,அவன் தொடர்ந்து போன் போட்டு டார்ச்சர் பண்ணிக்கொண்டு இருக்கிறான் என்றார். பணத்தை அனுப்பாதீர்கள். இது எல்லாம் ஏமாற்று வேலை என்றேன்.மேலும், 

அவர் ஒரு கல்லூரி தாளாளராக இருந்தவர். பத்திரிக்கை நடத்தியவர். நானும் இந்த பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறேன். இப்படி எங்களைப் போன்ற ஆட்களையே இவ்வளவு எளிதாக ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றால், எதுவும் தெரியாத அப்பாவி மக்களை எப்படி எல்லாம் பேசி அவர்கள் வழிக்கு கொண்டு வருவார்கள்? இது தவிர, சமீபத்தில் சிட்டிங் திமுக எம்எல்ஏ ஒருவர் எமது நண்பர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரை இரண்டு லட்சம் ரூபாய் பீஸ் கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார். இவர் நம்பிக்கையின் அடிப்படையில் எம்எல்ஏ ஆச்சே என்று அந்த வழக்கை நடத்தி வெற்றிகரமாக முடித்துள்ளார். பீஸ் என்று கேட்டவுடன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டாராம். இப்படி எல்லாம் ஒரு எம்எல்ஏ இருக்கிறான் என்றால், கட்சிக்காரன் எப்படி இருப்பான்?அதிகார திமிரில் வழக்கறிஞரை ஏமாற்றுகிறான்.மேலும், 

இதை ஏன் சொல்கிறேன் என்றால், எந்த ஒரு விஷயம் ஒருவருக்கு தெரியவில்லையோ, அவர்களை ஏமாற்றுவது தான் இன்றைய காலத்தின் வியாபாரம் திறமை. இது அரசியல் முதல் வாழ்க்கையில் நாம் வாங்கக்கூடிய பொருட்கள், உண்ணக் கூடிய உணவுகள், உபயோகிக்கும் பொருள்கள், அத்தனையும் இப்படி தான். அதனால்தான் மக்களின் வாழ்க்கை இன்று போராட்டமாகி விட்டது. மக்கள் விழித்துக் கொள்வதும், விழிப்புடன் வாழ்வதும் மிக மிக அவசியம். ஏமாற்றுவது திறமை! ஏமாந்தவன் முட்டாள்.

மேலும், இன்றைய விஞ்ஞான காலத்தில் விஞ்ஞானம் பூர்வமாக எப்படி ஏமாற்றுவது? ஒருவருக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், அதை எப்படி தன்னுடைய பேச்சுத் திறமையில் அவர்களை கவிழ்ப்பது? இது அரசியலாக இருந்தாலும், மக்களுடைய வாழ்க்கையில் தினம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளாக இருந்தாலும், உபயோகப்படுத்தும் பொருட்களாக இருந்தாலும், எப்படி ஒருவரை கவிழ்ப்பது? மேலும்,

இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திற்கு செல்லும் போது, அங்கே போலீசுக்கும், திருடனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் செய்யும் தவறு, மக்களிடம் தான் வந்து நிற்கிறது. மக்கள் தெரிந்தே சில தவறுகளை செய்கிறார்கள். குறிப்பிட்ட சில சமுதாயங்கள் உடம்பு பெரிதாக இருந்தால், மதிப்பார்கள். நல்லவனாக, எளியவனாக இருந்தாலும் மதிக்க மாட்டார்கள். இந்த சமுதாயம் படித்தவனையோ, தகுதியானவனையோ மதிப்பதில்லை. நல்லது பேசுவதும், நல்ல விஷயத்தை தெரிந்து கொள்வதும் பிடிக்காது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ பணத்தை எப்படி சம்பாதித்தாலும், எவ்வளவு பொய் பேசினாலும், மோசடி செய்து சொத்துக்களை சேர்த்தாலும்,அதுதான் அரசியல் என்று இன்றுவரை ஏமாறும் தமிழ்நாட்டு மக்களில் எத்தனையோ கோடிகள் உள்ளது.மேலும்,

இவர்கள் தேர்தல் நேரத்தில் யார்? பணத்தை கொடுத்தாலும், வாங்கிக் கொள்வார்கள். எல்லோரிடமும் நல்லவர்களாக இருப்பார்கள். எனக்கு எந்த பக்கம் ஆதாயமோ ,அவர்களிடம் பேரம் பேசுவார்கள். நாட்டைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ, உண்மையைப் பற்றியோ, ஒரு நியாயத்தை பற்றியோ, எதுவும் சிந்திப்பதில்லை. அதனால் தான் இயற்கை இந்த மக்களை கோபம் கொண்டு ,பல்வேறு வகையில் வெள்ளம், சுனாமி, புயல் ,வெயில்,பனி இன்று காலத்தின் கொடுமைகளாக இயற்கை இவர்களை எப்படி எல்லாம் தண்டிக்கலாம்? என்று அதுவும் ஒரு பக்கம் தண்டனை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.மேலும், 

இந்த பிரபஞ்சம் யார்? யார்?என்ன செய்கிறார்களோ ,எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அதற்குரிய தண்டனை அது நோயாகவோ அல்லது சட்டத்தின் பிரச்சினையாகவோ அல்லது ஏமாற்றமாகவோ ஏதோ ஒரு விதத்தில் அந்த தண்டனை இறைவன் எந்த ரூபத்தில் கொண்டு வந்து சேர்ப்பார் என்று தெரியாமல், அதுவும் செய்து கொண்டு தான் இருக்கிறது.மேலும், 

கடவுள் இருக்கிறார். இல்லாதவனிடம், இருப்பவனிடம் என்ற பேதம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் நின்று கொண்டு, கால சக்கரத்தை சுழற்றுகிறார். இதில் எது உண்மை? எது பொய்?என்பது அவரவர் செய்த கர்ம வினை. அவர்கள் புரிந்து கொள்வதும் ,அலட்சியம் செய்வதும்,பாவ புண்ணியத்தின் கணக்கு .மேலும்,

இந்த திறமைசாலிகள், அதி புத்திசாலிகள், அதை மேதாவிகள்,பலசாலிகள், ஒருவரை ஏமாற்றி தான் கோடிகளை பார்க்க வேண்டும். லட்சங்களை பார்க்க வேண்டும் என்று வாயால் பேசி ஏமாற்றினாலும், அது திறமை என்று நிணைத்துக் கொண்டாலும், பாதிக்கப் பட்டவன் அழுது வேதனைப் படும் போது, ஒரு பக்கம் தோல்வி அடையும் போதும்,பலசாலி அடித்து துன்புறுத்திய போதும் ,அந்த வலியின் வேதனை !ஏமாற்றியவன்,அடித்தவன், அவர்களுடைய வெற்றி, மகிழ்ச்சி என்று அவர்களே, அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள். 

இது புரியாத கணக்கு! புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு இந்த கணக்கு புரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்,ஆண்டவனின் கணக்கில் !

அங்கே ஏழை, பணக்காரனுக்கு ஒரு சட்டம், பட்டம், பதவி அதிகாரத்தில் உள்ளவனுக்கு ஒரு சட்டம்,எதுவும் கிடையாது. எல்லோருக்கும் ஒரே சட்டம் தான். அங்கே, அதாவது ஏமாந்தவன் பாவ கணக்கை ஏமாற்றியவன், வாங்கி கொள்கிறான். இதை ஏமாற்றியவர்கள் சொத்து பணமோ, பொருளோ, அவனோ, அவன் குடும்பமும் அதை சந்தோஷமாக அனுபவிக்க முடியாது. இதற்கு சிறிய லெவெலில் இருந்து, இன்று பெரிய ஆயிரம் கோடி சொத்துக்களை சட்ட மோசடி செய்து இருந்தாலும், அண்ணன், தம்பிகளை ஏமாற்றி இருந்தாலும்,ஊர் சொத்துக்களை ஏமாற்றி இருந்தாலும் ,அவர்களும் அவர்கள் குடும்பமும், சந்தோஷமாக வாழ முடியாது. சில காலம் இருக்கலாம். 

ஆனால் ,எப்போது இயற்கை அதற்கு தண்டனை கொடுக்க காத்துக் கொண்டே இருக்கும். இனியாவது இந்த உண்மைகளை புரிந்து தவறான பாதையில் இருப்பவர்கள் ,வாழ்க்கையை மாற்றிக் கொள்வது கடவுள் காட்டுகின்ற உண்மை என்று புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *