ஈஷாவை அரசியல்வாதிகள் முதல் அடைக்கலம் வந்தவர்கள் வரை டார்கெட் செய்வது ஏன் ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கோவை ஈஷா யோகா மையம் இந்து மதத்தின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக சேவை நிறுவனம் . இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பட்ட மக்கள் இருந்து வருகிறார்கள். தவிர, ஈஷாவின் யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவாவின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் யோகா ,தியானம் போன்ற பல்வேறு ஆன்மீக நிலைகளில் ஈர்க்கப்பட்டு இன்று வளர்ச்சி அடைந்த சமூக தொண்டு நிறுவனமாக உள்ளது .

அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள யூடியூப் பேச்சாளர்கள், சன் டிவி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் தொகையை எதிர்பார்த்தாக தகவல் வெளியாகி பொது மக்கள் மத்தியில் பேச்சு ‌.அதற்கு ஜக்கி வாசுதேவ் அந்த டீலுக்கு அப்போது அவர் உடன்படவில்லையாம்..இது தவிர அரசியல்வாதிகள் மிரட்டி பார்த்தார்கள் ,நக்கீரன் போன்ற பத்திரிகைகள் போலியான செய்திகளை வெளியிட்டு, மிரட்டி பார்த்தார்கள் ‌. அவரை பணிய வைக்க முடியவில்லை . மேலும், ஈஷா யோக மையத்தில் பிரச்சனைகள், முறைகேடுகள் நடப்பதாக கிளப்பி விட்டு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து பார்த்தார்கள் .

இப் பிரச்சனைக்கெல்லாம் ஜக்கி வாசுதேவ் உச்சநீதிமன்றத்தில் போய் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் . இப்போது அதில் ஏதாவது புதிது, புதிதாக ஒரு பிரச்சனையை கிளப்பி ஆதாயம் தேட முடியுமா? என்பதுதான் ஈஷா மையத்தின் மீது எல்லோருக்கும் ஏற்பட்டு இருக்கிற ஒரு கண் . ஒரு தவறான அணுகுமுறையை பத்திரிக்கையாக இருந்தாலும், தொலைக்காட்சிகளாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் ,ஆன்மீகத்தின் சமூக சேவை மையங்களை குறிவைப்பது தவறானது .

மேலும், இது இந்து மதத்திற்கு எதிரானது. இந்த நிலையை ஏன்? இவர்கள் அனைவரும் ஒரு கிறிஸ்துவ பாதிரியார்களையோ அல்லது முஸ்லிம்களின் முல்லாக்களையோ குறி வைப்பதில்லை . அங்கே போனால் கூட்டமாக வருவார்கள். இங்கே காட்டுமிராண்டித்தனமாக கூட்டமாக வர மாட்டார்கள் இதுதான். இது தவறானது. உதவி கேட்கலாம் தவறில்லை ஆனால் மக்களுக்கு பல்வேறு வகைகளில் சமூக நன்மைக்காக பாடுபடும் ஆன்மீக அறக்கட்டளைகளை திமுக ஆட்சியில் குறிவைப்பது தவறானது . இதை கிறிஸ்தவ முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் கை வையுங்கள் பார்ப்போம் .

மேலும், தற்போது ஈஷா யோக மையத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த யாமினி கணவர் பெயர் நரேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோக மையம் குறித்தும், ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்தும், சில கருத்துக்களை செய்தியாளர்களுக்கு பேட்டியாக அளித்துள்ளார். இதைப்பற்றி ஈஷா யோக மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் யாமினி பேசியது குறித்தும், தங்கள் தரப்பு விளக்கத்தை பதிவிட்டு இருந்தனர் . அதில் யாமினி ஒரு தன்னார்வலராக ஈஷா ஹோம் ஸ்கூலில் ஆசிரியராக பணிபுரிந்ததாகவும் ,கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கடந்த சில மாதங்கள் முன்பு வரை பணிபுரிந்தார் .

பணியின் போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவர் பணியில் இருந்து இணைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது அவர் கூறும் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரம் அற்றவை என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது . மேலும், குழந்தைகளின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். எங்கள் குழந்தைகள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை சமரசம் செய்யும் எந்த ஒரு நடத்தையும் கடுமையான சகிப்புத்தன்மை அற்ற கொள்கையை நாங்கள் பராமரிக்கிறோம் .அவர் சுமத்தி உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை.இதை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பாணையும் ஏற்கனவே ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து முழுமையான ஆய்வு செய்து பள்ளியின் பல்வேறு அம்சங்களை பாராட்டி கிளீன் ஷீட் வழங்கி உள்ளது .
மேலும், ஈஷா ஹோம் ஸ்கூல் யாமினி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பதிவிட்டு இருந்தது . மேலும், இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது திடீரென யாமினி தனது கணவருடன் கொடுத்த பேட்டி எதற்காக ? என்ற சர்ச்சை திடீரென எழுந்துள்ளது இந்த நிலையில் தான் யாமினி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது .

அதாவது யாமினி கணவர் ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .2014 ஆம் ஆண்டு தனது மூத்த மகனை இஷா பள்ளியில் ஹோம் ஸ்கூலில் சேர்த்துள்ளார் .கடந்த2022 ஆம் ஆண்டு அவர் தனது படிப்பை அங்கு முடித்துவிட்டு வெளியே சென்று விட்டார். 2020 ஆம் ஆண்டு தனது இளைய மகனுக்கு அங்கு சீட் கேட்டு உள்ளார் .அப்போது தகுதியின் அடிப்படையில் யாமினி இளைய மகனுக்கு சீட்டு கிடைக்கவில்லை . இதை தொடர்ந்து ஈஷாவில் தன்னார்வலராக இருந்த யாமினி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அவருடைய நடவடிக்கைகள் சரியில்லாததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தவிர யாமினியின் மகன் எட்டு ஆண்டுகள் ஈஷா ஓம் ஸ்கூலில் படித்து படிப்பை முழுமையாக நிறைவு செய்து சென்ற பின்பும், அவரும் ஆசிரியராக அங்கு பணிபுரிந்து அதன் பின்பு வெளியே சென்று விட்டு தற்போது இந்த குடும்பத்தினர் அவதூறு கிளப்பும் நோக்கம் என்ன? என்பது புரியவில்லை . மேலும் ஒரு வேலை பாலியல் தொந்தரவு அவரது மகனுக்கு இருந்திருந்தால், பள்ளி படிப்பை ஈசா ஹோம் ஸ்கூலில் முழுமையாக எப்படி நிறைவு செய்து இருக்க முடியும் ?அதேபோல் இது போன்ற விஷயத்தை அவர் பணியில் இருந்த போது ஒரு முறை கூட நிர்வாகத்திற்கு கூறியது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. யாமினி கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தற்போதைய ஊடகங்களின் கட்டுக் கதைகள் இருப்பதாக சமூக வலைதளத்தில் நெடிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் . மேலும் ஈசா யோக மையம் யாமினி மீது சட்டப்படி இதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *