மார்ச் 23, 2025 • Makkal Adhikaram
இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை மற்றும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, ஆன்லைன் ஓட்டு பதிவு கொண்டு வந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம்.

இந்திய தேர்தல் ஆணையம் இணையதள ஓட்டுப்பதிவு முறையை கொண்டு வந்தால், நாட்டில் ஊழலுக்கும், கருப்பு பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இது தவிர ,ஆயிரக்கணக்கான கோடிகள் நாட்டில் தேர்தல் நடத்த மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுக்க முடியும். மேலும், பல்வேறு நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும். அவை என்னவென்று ஒவ்வொன்றாக இதில் தெரிவிக்கிறோம்.

முதலில் அரசியல் கட்சிகள் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க முடியும்.வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறைந்து விடும். ஏனென்றால் அரசியல் கட்சிகளுக்கே பணம் வாங்கும் வாக்காளர்கள் மீது நம்பிக்கை வராது. அடுத்தது, கட்சிக்காரர்களை கண்காணிக்க கிராமங்கள் தோறும்,ரகசிய கேமராக்கள் மற்றும் ட்ரோன்களை பறக்க விட வேண்டும். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அவர்களை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனை கொடுக்க வேண்டும். இதனால், நாட்டில் கருப்பு பணம் ஒழிக்கப்படும்.மேலும்,

எந்த ஒரு அரசியல் கட்சியும், பொது மக்களை கூட்டி வந்து, தேர்தல் கூட்டங்கள் நடத்தக்கூடாது. உங்கள் கட்சிக்காரர்களை வேண்டுமானால், கூட்டம் கூட்டி நடத்திக் கொள்ளுங்கள். இதையும் தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.ஏனென்றால், கருப்பு பணத்தை வைத்து தான், அரசியல் கட்சிகள் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், இதற்கடுத்தது மிக முக்கியமான ஒன்று, பணத்தை கொடுப்பதை தேர்தல் ஆணையம் 100% தடுத்தால், அரசியலுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இன்று இந்த பணத்தினால் தகுதியற்றவர்கள்,சுயநலவாதிகள், அரசியல் வியாபாரிகள், ரவுடிகள் ஊழல்வாதிகள் ,சமூக அக்கறை இல்லாதவர்கள்,இவர்கள்தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர, அரசியல் வியாபாரமாக்குவதை தடுக்க முடியும் என்பது மிக முக்கியமான ஒன்று.

மேலும், என்னுடைய உரிமையை பணத்திற்காக விற்று விட்ட பிறகு, ஒரு இடத்தில் தவறு நடந்தாலோ, ஒரு நகரத்திலோ அல்லது கிராமத்திலோ உள்ள பிரச்சனைகளை தட்டி கேட்க கூட தகுதி இல்லாதவர்கள் தான் ,ஓட்டுக்கு அவரவர் உரிமையை விற்பனை செய்யக் கூடிய நபர்கள். இப்படி தகுதியற்ற கூட்டம், தகுதியற்றவர்களை தேர்வு செய்கிறது. அதுவும் தடுக்க முடியும். இது தவிர, மிக முக்கியமான ஒன்று, கள்ள ஓட்டு போடுவதை தடுக்க முடியும்.
அடுத்தது, அரசியல் கட்சிகள் !கட்சி பொதுக்கூட்டம் நடத்தும்போது, வாக்காளர்களுக்கு அங்கேயே பணம் கொடுத்து விடுகிறார்கள். அப்படி கொடுத்தால் கூட வாங்கிக் கொள்பவர்கள், அதை மறந்து விடுவார்கள். இருப்பினும், இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் பெரும்பாலும் ரவுடிசத்தை கையில் வைத்துக்கொண்டு,சத்தியம் செய்து கொடு என்று கூட கேட்பார்கள். இவர்கள் அத்தனை பேரும் தேர்தல் என்று வந்துவிட்டால், இவர்களை கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் ட்ரோன்களை பறக்கவிட்டு, கண்காணிக்க வேண்டும். இவை அத்தனையும் மாநில தேர்தல் ஆணையர் இணையதள இணைப்பு கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.மேலும்,

மிக முக்கியமாக ஒவ்வொரு அரசியல் கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்கள் வாங்கி வாக்காளர்களின் வீட்டுக்கு செல்வதோ அல்லது அவர்களை பின்தொடர்வதோ அல்லது செல்போனில் தொடர்பு கொள்வதோ இருக்கக் கூடாது. வாக்காளர்களை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். அதனால் எல்லா அரசியல் கட்சியினரையும் தேர்தல் நேரத்தில் அவர்களை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும். இதற்காக ரகசிய சமூக ஆர்வலர்களையும், சமூக நலன் பத்திரிகையாளர்களையும், சமூக அக்கறை உள்ள அதிகாரிகளையும்,NIA போன்ற உளவு அமைப்புகளையும், பயன்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும், நகரந்தோறும், கிராமம் தோறும், கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

அப்போதுதான் நாட்டில் 100% கருப்பு பணத்தையும், கள்ள ஓட்டையும் தேர்தலில் தடுக்க முடியும். கருப்பு பணம் எப்படி வருகிறது? மக்களுடைய வரிப்பணமே கருப்பு பணம். அதாவது ஊழல் செய்த பணம். ஊழல் செய்தால்தான் கருப்பு பணம் வரும் .இதைக் கொண்டுதான் தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியும்.

இது தவிர, எந்த ஒரு அரசியல் கட்சியாவது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, கள்ள போட்டு ஜெயித்தால் அங்கே ரகசிய குழுவை அனுப்பி, அரசு அதிகாரிகளையும் அந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அடுத்தது அந்தப் பகுதியிலோ ,அந்த தொகுதியிலோ, தேர்தலில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அந்தந்த மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும்,

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறை சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அடுத்தது ஒரு வருடத்திற்கு முன்னால் இருந்து தேர்தல் ஆணையம் சுய உதவிக் குழுக்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட வேண்டும். இவர்கள் மூலமாகத்தான் அதிகப்படியான பெண் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அதேபோல், அரசியல் கட்சியினரின் ஒவ்வொருவருடைய வங்கி கணக்குகளையும், கண்காணிக்கப்பட வேண்டும்.
ஏனென்றால், இந்த அரசியல்வாதிகள் நேர்மை, தகுதி, எல்லாம் கேள்விக்குறியாகி உள்ளது. தகுதியானவர்கள் யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள். இந்த தகுதியற்ற கூட்டம்தான் பணத்தை வைத்துக்கொண்டு அரசியலை வியாபாரம் ஆக்கிக் கொண்டிருக்கிறது .இது தெரியாத ஓட்டுக்கு பணம் வாங்கி தின்னும் கூட்டம், இந்த நாட்டில் ஊழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும்,
ஒரு பக்கம் அரசியல்வாதி போட்ட பணத்திற்கு நூறு மடங்கு அதிகமாக எடுக்க ஆசைப்படுகிறான். இங்கேதான் ஊழலுக்கு முக்கிய காரணம். மேலும், ஒரு நாட்டில் ஊழல் அதிகரித்தால் நிர்வாகம், சமூக நன்மைக்காக இருக்காது. இப்படிதான் திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எங்கு தொட்டாலும் ஊழல்.

இப்படிப்பட்ட ஊழல் அரசியலுக்கும், கருப்பு பண அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், தேர்தல் விதிமுறை சட்டங்களை கடுமையாக மாற்றினால், இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும், இந்த அரசியல் கட்சிகள் மிகப்பெரிய பொய்யைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது என்னவென்றால், இணையதளத்தில் ஓட்டு பதிவு கொண்டு வந்தால், மிகப்பெரிய மோசடி வேலை செய்ய முடியும் என்று சொல்வார்கள். நிச்சயம் முடியாது.

நான் சொல்ற ஒரு முறையை பின்பற்றி தேர்தல் ஆணையம் இணையதள ஓட்டு பதிவை கொண்டு வந்தால், அதில் ஒரு ஓட்டு கூட கள்ள ஓட்டோ அல்லது இணையதள மோசடி ஓட்டோ போட முடியாது. ஆதார் எண் கூட திருட முடியும். ஆனால், என்னுடைய கருவிழியும், கைரேகையும் அதை யாராலும், திருட முடியாது. ஒரு செல்போனில் பிங்கர் டிப்ஸ் வைத்து விட்டாலே, வேறு யாரு கை வைத்தாலும் அது திறக்காது.
அதே நிலைதான் என்னுடைய ஃபிங்கர் டிப்ஸ் மற்றும் கருவிழி ஸ்கேன் செய்து ஓட்டு பதிவு இணையதளத்தில் ஏற்றிவிட்டால், அதை வேறு யாராலும் அதை திறந்து ஓட்டு போட முடியாது. அப்படி வாக்குப்பதிவின்போது, ஆதார் எண், தேர்தல் ஆணைய அடையாள அட்டை எண்,ஆண்,பெண், பிறந்த தேதி, முகவரி போன்ற அனைத்து தகவல்களும் பதிவிறக்கம் செய்து, பிறகு, கருவிழியும், கைரேகையும் ஸ்கேன் செய்து அனுப்பிய பிறகு,(OTP) ஓடிபி எண் வந்த பிறகு ஒருவர் எந்த கட்சிக்கு? யாருக்கு ?வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறாரோ, அந்த சின்னத்தில் வாக்குப் பதிவு செய்யும் முறையை கொண்டு வர வேண்டும்.

அப்படி கொண்டு வந்தால் 100% வாக்குப்பதிவு நிச்சயம் தேர்தல் ஆணையத்தால் கொண்டு வர முடியும். ஏனென்றால், இந்த ஊழல்வாதிகளுக்காக, நான் ஏன் ?நான்கு மணி நேரம் வெயிலில் காத்துக் கிடந்து வாக்களிக்க வேண்டும்? என்று என்னிடமே பல பேர் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் ,அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் இணையதளத்தில் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள். அது தகுதியானவர்களுக்காக இருக்கும் இல்லையென்றால் நோட்டாவாக கூட இருக்கலாம்.

மேலும், தேர்தல் ஆணையம் இறந்தவர்களின் வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து ஸ்கேன் செய்து இணைக்கப்பட வேண்டும். மேலும், படிப்பறிவு இல்லாத மக்கள் எனக்கு இணையதளத்தில் ஓட்டு போட தெரியாது என்று தெரிவிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தற்போது அதிகபட்சமாக 30 லிருந்து 40% தான் இருக்கும். அவர்களுக்கு வேண்டுமானால், இதை கூட பயன்படுத்தி வையுங்கள். இதனால் குறைந்த வாக்கு இயந்திரம், பாதுகாப்பு செலவு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை எல்லாமே குறைந்து விடும்.
அதனால், தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் அதிகாரம், இணையதளம் மற்றும் பத்திரிகை சார்பில் இது போன்ற முக்கிய செய்திகளை பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளது. எனவே,நாட்டு மக்கள் நலனில் அக்கறை உள்ள தேர்தல் ஆணையமாக செயல்படுமானால்! இந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் கொண்டு வரும்.தவிர,தேர்தல் ஆணையம் நாட்டு மக்கள் நலனில் ,அக்கறை இல்லாமல் இருந்தால் கொண்டு வராது.