மே 25, 2024 • Makkal Adhikaram
அகில இந்திய வரி செலுத்துபவர் அமைப்பை உருவாக்கி உள்ள உச்ச நீதிமன்றம், அதில் அரசியல் கட்சியும் அல்லது அதை சார்ந்த அமைப்புகளோ இல்லாமல் இருந்தால் நல்லது என்பது சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் கருத்து.
மேலும், இந்த சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும், மக்களுக்கு இலவசங்கள், கடன் தள்ளுபடிகள் அறிவிக்க முடியாது. இது தவிர, சங்கத்தின் மூலம் நாட்டில் நடைபெறும் ஊழல் ,எம் பி, எம் எல் ஏக்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை மக்கள் கேள்வி கேட்க முடியும். ஏனென்றால் மக்கள் கொடுக்கின்ற வரிப்பணம். இந்த பணத்தை தவறான முறையில் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும், இவர்கள் கேள்வி கேட்க முடியும்.
இன்னும் மக்களுக்கு புரியும்படி சொன்னால் செய்தி துறையில் கோடிக்கணக்கில் கார்ப்பரேட் ஊடகங்களுக்கு மட்டுமே சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல ஊடகங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக பத்திரிக்கை, தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகைகளுக்கு அரசியல் தலையிட்டால் அவை கொடுப்பதில்லை. அதிலும் மக்கள் நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு செய்தித் துறை கொடுப்பதில்லை இப்படி ஒரு அவல நிலை செய்தி துறையில் தொடர்கிறது.
மேலும், ஒவ்வொரு துறையிலும் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கெல்லாம் ஒரு மாற்றத்தை இந்த அகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு ஏற்படுத்த முடியும் என்பது தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு. இதில் அரசியல் தலையிடோ அல்லது அரசியல் கட்சியினர் இல்லாமல் இருந்தால்தான் இதன் நோக்கம் நிறைவேறும். இதை ஏன் இங்கு சொல்ல வேண்டிய அவசியம்? என்றால் எல்லா அரசியல் கட்சிகளும் நாட்டில் இந்த கார்ப்பரேட் மீடியாக்களை வைத்து அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அது எப்போது ஒழிக்கப்படுமோ, அப்போதுதான் மக்களுக்கான அரசியல் உதயமாகும். இதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும், தகுதியான சாமானிய பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க அகில இந்திய வரி செலுத்துவோர் இயக்கம் இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதான் மக்களுக்கான அரசியல் மாற்றமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.மேலும்,
இந்த கார்ப்பரேட் ஊடக வியாபாரத்தை மக்களும் சேர்ந்து ஒழிக்காத வரை, மக்களுக்கான அரசியல் நாட்டில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் கார்ப்பரேட் ஊடகத்திலே பேசிவிட்டு, நல்லவர்களாக நடித்துவிட்டு, அறிக்கையைகளையும், பேட்டிகளையும் பார்த்து மக்கள் ஏமாந்து போவது தான் இந்த ஊடக அரசியல் வியாபாரம் இப்போதாவது மக்களுக்கு தெளிவாக உண்மை
புரிந்ததா ?