பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள், என் மண் என்ற தலைப்பில் அவருடைய நடை பயணத்தை உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் தமிழ்நாட்டில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு, பிஜேபியின் அரசியல் வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமா? என்பது அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி?
மேலும், அண்ணாமலை நடை பயணம் பற்றி எதிர் கட்சிகள் திமுக, விடுதலை சிறுத்தைகள், சீமான் மற்றும் சமூக ஊடகங்கள் பல கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் .இதனால் பிஜேபிக்கு தான் லாபம். எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சியாக இருந்தும் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனால், இவர்களுடைய கூட்டணி தேர்தல் நேரத்தில் எந்த அளவிற்கு ஒத்துப் போகும் என்று தெரியவில்லை? மேலும், அண்ணாமலையின் நடைபயணம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை குறி வைத்து தான் அரசியல் தாக்கத்தை அது ஏற்படுத்தப் போகிறது. இன்றைய இளைஞர்களிடையே ஊழல், ரவுடிசம் இல்லாத ஒரு அரசியலை தான் பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அதற்கு பிஜேபி சரியான கதவுகளை இந்த இளைஞர்களிடையே திறந்து தான் தேர்தல் பிரச்சாரம் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும், இனி தேர்தல் வெற்றி இல்லை என்பது தமிழ்நாட்டில் உறுதியாகிவிட்டது. அதனால், கூட்டணி கட்சிகளும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவான உண்மை. தவிர, பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்து விடக்கூடாது என்பதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் தான் இருக்கிறது.
அதற்காக தான், அவரவர் கட்சிக்கு மக்களிடம் பிஜேபியை பற்றி வெறுப்பு அரசியலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பிஜேபியும் எதிர்க்கட்சிகளின் அரசியலை விமர்சனம் செய்து வருகிறது. இந்த அனைத்து கட்சிகளுக்கும் பின்னால் இருக்கக்கூடிய ஊடகங்கள் வருமானத்தை ஒட்டி அவர்களுக்கு தகுந்தார் போல் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் அரசியல் களம் தேர்தல் வெற்றி, தோல்வி என்பது மக்களிடம் ஒருபுறம் இருந்தாலும் கூட, ஊடகங்களில் கருத்து சொல்பவர்கள், செய்தி வெளியிடுபவர்கள் இவர்களே அதற்கு தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் மனநிலை எந்த நேரத்திற்கு, எப்படி மாறும் ?என்று கணிக்க முடியாத ஒன்று. இருப்பினும், அண்ணாமலையின் நடை பயணம் பிஜேபிக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை மக்களிடம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் பிஜேபியில் ஃபீல்டு ஒர்க் செய்ய ஆட்கள் இல்லை. மேலும் ,அதிமுக, திமுக தமிழ்நாட்டில் இன்று பீல்ட் ஒர்க் செய்து ,அது ஆட்சிக்கு வரவில்லை. 1965 ல் இருந்து மக்களிடம் திமுக, அதிமுக களம் கண்டது .அப்போது போட்ட ஒரு பேஸ் இதுவரை அது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஓட்டம் இரண்டு கட்சிகளிலும் உள்ள ஊழல் என்ற கரையான்களால், அது மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது.
இனி புதிய வாக்காளர்கள் ஊழலற்ற கட்சிக்கு வாக்களிக்க அவர்களுடைய நோக்கம் இருக்குமே தவிர, அதிமுக ,திமுகவை நோக்கி ஒருபோதும் இருக்காது.