அதிமுகவிற்கும், பிஜேபிக்கும் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி முறிவுக்கான முக்கிய ரகசியம் என்ன?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுக தற்போது தலைமை இல்லாத ஒரு கட்சி. இதை உருவாக்கிய எம்ஜிஆர். அதற்கு அடுத்த கட்ட தலைவர் ஜெயலலிதா. இந்த இரண்டு பேர் மறைவுக்குப் பிறகு, இந்த கட்சியில் யார் தலைமை? என்ற போட்டி தான் உருவானது. அப்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போன நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்து செயல்பட்டார். பிறகு, சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

 இவர் முதலமைச்சர் பதவியில் நான்காண்டு காலம் பிஜேபி மோடியின் தயவில் ஆட்சி நடத்தி விட்டார் .அப்போதே இப்போது இருக்கின்ற திமுக எதிர்க்கும் அளவிற்கு எடப்பாடி இருந்திருந்தால், அப்போதே கட்சி சுக்கு நூறாக உடைந்திருக்கும் .இப்போது என்ன பிரச்சனை ?என்றால், பிஜேபியின் ஆதரவு இல்லாமல் ,அதிமுக இவ்வளவு காலம் இல்லை .அது ஒரு முக்கியமான பாயிண்ட்.

அடுத்தது, இந்தக் கட்சியை காப்பாற்றியது, இரட்டை இலை சின்னத்தை மீண்டும் அதிமுகவிற்கு கொடுக்க வைத்தது, இதில் எல்லாம் பிஜேபியின் அரசியல் உள்ளது. அதுமட்டுமல்ல, திமுக இவர்களை பலமாக எதிற்கும் போது மோடியின் தயவு தேவைப்பட்டது. மேலும், இப்போது எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளர் என்ற தோரணையில், இந்த கட்சிக்கு கூட்டணி இல்லையென்று முடிவெடுத்திருக்கிறார். இந்த முடிவுக்கு டான்ஸ் ஆடுகின்ற கூட்டங்கள் பட்டாசு வெடித்து டான்ஸ் ஆடிவிட்டது. இவர்கள் ஜெயலலிதா  இருக்கும்போது ஆடிய டான்ஸ் இப்போது ஆடி இருக்கிறார்கள் . இவர்களுக்கு எல்லாம் தேர்தல் வரும் போது பணமும், பாட்டிலும், பிரியாணியும் இல்லாமல் ஆட மாட்டார்கள்.

 ஏனென்றால் கொள்கை அளவில் யாரும் அதிமுகவில் இல்லை. சுயநலக் கொள்கைதான் . இன்றைய அதிமுக அரசியல் கட்சியின் கொள்கை, இந்த கொள்கை எல்லாம் எம்ஜிஆர் ரோடு முடிந்து விட்டது. அதற்கு அடுத்தது, ஜெயலலிதா ஓரளவுக்கு கட்டி காத்தார் .அவர் இருக்கும் போது அதிகாரிகளும் பயந்தார்கள். அரசியல்வாதிகளும் பயந்தார்கள். அதுதான் தலைமை. எடப்பாடி பழனிசாமி பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். சீ.வி சண்முகத்தை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். அதேபோல், முனுசாமி பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். செல்லூர் ராஜியை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள்.

 இவர்கள் எல்லாம் இந்த கட்சிக்குள் ஒரு ஜாதி என்ற ஒரு முத்திரையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இரண்டாம் கட்ட நிலையில் உள்ள கட்சியின் முக்கிய புள்ளிகள். மேலும், இவர்கள் அனைவரும் எடப்பாடி டீமில் இருக்கிறார்கள். இந்த எடப்பாடி டீமுக்கும், பிஜேபிக்கும் என்ன கருத்து வேறுபாடல் கூட்டணி முறிந்தது? அண்ணாமலை அண்ணாவைப் பற்றியும், ஜெயலலிதாவை பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். அப்படி செய்து வரும்போது, நீங்கள் எப்படி டெல்லியில் சென்று அமித்ஷாவை சந்தித்து கூட்டணி பேசினீர்கள்?

மேலும், மோடி கடந்த தேர்தலின் போது, நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். அப்போதுதான் வலுவான அதிமுக என்று சொல்லி வந்தார். அதை இவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போதும் சொல்கிறார் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் இவர்களெல்லாம் ஒருங்கிணைத்து செயல்படுங்கள். அப்போதுதான் வலுவான அதிமுக, தமிழ்நாட்டில் ஓரளவிற்கு திமுகவை வெற்றி காண முடியும் .இது ஆரம்பத்தில் இருந்து சொல்லி வரும் மோடியின் கருத்து.

 ஆனால் எடப்பாடி பழனிசாமி தன் கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  தவிர ,இவர் எப்படி பதவி வாங்கினார்? என்பது அதிமுக கட்சியினருக்கு தெரியும். அடுத்தது சசிகலா உள்ளே வரக்கூடாது என்பதில் இந்த எடப்பாடி டீ உறுதியாக உள்ளது. ஏனென்றால் ஜெயலலிதாவிற்கு ரைட் என்ட் ஆக இருந்தது சசிகலா. சசிகலாவின் ஆளுமை ஜெயலலிதாவோடு ஒப்பிட முடியும். அந்த ஆளுமை இவர்கள் யாருக்கும் கிடையாது. அதற்கு அடுத்தது டிடிவி தினகரன். இவர்கள் எல்லோரும் தேவர் என்ற ஒரு ஜாதி அங்கீகாரமாக தான் கட்சிக்குள் பேசுகின்ற நிலைமை உருவாகும்.

.ஏனென்றால் மணல் கொள்ளை, ரவுடிசம் இது அத்தனையிலும் சசிகலாவின் பங்கு முக்கியமாக இருந்தது. இங்கே யாருமே ஜெயலலிதா சொன்ன வார்த்தை போல் மக்களால் நான், மக்களுக்காக நான்! இதற்கு தகுதி இல்லாமல் தான் இருக்கிறார்கள். மக்கள் நலனை விட, இவர்கள் நலன் தான் மிக முக்கியம். அந்த நிலைக்கு இன்றைய அதிமுக.

 இதில் இவர்கள் உள்ளே வந்தால், எடப்பாடி டீம் கட்சியை, ஆட்சியை  தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது என்பது இவர்களுடைய உறுதியான நிலைப்பாடு. ஆக கூடி இந்த கட்சி இவர்கள் அனைவரின் சுயநலத்தில் உருட்டிக் கொண்டிருக்கும் ஒரு கட்சி.இது தெரியாமல் கொடி பிடித்து கத்திக் கொண்டிருக்கும் கூட்டங்கள், பட்டாசு வெடித்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறது.

தவிர, இந்தக் கட்சிக்குள் இதே டீமில் இருக்கின்ற வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் எல்லோருக்கும் பிஜேபியின் கூட்டணி தேவை. ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஊழல் வழக்கில் சிக்கியிருக்கிறார்கள். இது தவிர எடப்பாடி மீதும் ஊழல் வழக்கு உள்ளது .இதையெல்லாம் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறாரா? என்பது  பிஜேபியின் தலைமை கணக்கு .அதனால்தான், பிஜேபிக்குள் அதிமுக இருக்க வேண்டும் என்பது பிஜேபியின் தலைமை கணக்கு. ஆனால் அதிமுகவிற்குள் பிஜேபி இருக்க வேண்டும் என்பது எடப்பாடி கணக்கு.

 இந்த இரண்டு கணக்குகளுக்குள் இருக்கின்ற மர்மம்? இரண்டு கட்சியினருக்கும் புரியாது. அதாவது மோடி இல்லாமல் அதிமுக இல்லை. இதை அதிமுக நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இவர்கள் கூட்டணி இல்லையென்றால் அவர்களுக்கு தான் அது பாதகம், ஆபத்து ,பிரச்சனைகள் சந்திப்பது உறுதி,

 மேலும், பிஜேபி ,சசிகலா, ஒ பன்னீர்செல்வம், டி வி தினகரன், இவர்களை இணைத்து மற்றும் சில கட்சிகளை இணைத்து போட்டி போட்டால் கூட பிஜேபி தற்போதைய நிலையில் இருபது சீட்டுகள் கண்டிப்பாக வெற்றி பெறும். ஏனென்றால், தமிழ் நாட்டிற்கு நேர்மையான அரசியல் கட்சி தலைவர் தேவை. அந்த தலைமை பிஜேபி யில் அண்ணாமலையிடம் உள்ளது .பிஜேபி மக்களுக்கு என்ன செய்து விட்டது? அல்லது அந்த கட்சியினர் என்ன செய்துவிட்டார்கள்? என்ற அரசியல் கட்சிகளுக்குள் பேசுகின்ற ஒரு வார்த்தை தான்.

 ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என்ற இரண்டு ஊழல் கட்சிகளுக்கு எதிராக ஒரு மாற்று அரசியல் தேவை என்ற வாக்காளர்கள் குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறார்கள். இது தவிர, பிரிவினைவாதம் பேசுகின்ற சீமான், திருமாவளவன் ,முஸ்லிம், கிருத்துவ மதம் சார்ந்த கட்சிகள் இதற்கு எதிரான ஒரு கட்சி இன்று பிஜேபி தான், தமிழ்நாட்டில் உள்ளது. அதனால், அரசியல் ஓரளவு தெரிந்தவர்கள் கூட, இன்று பிஜேபியை தான் ஆதரிப்பார்கள்.

 மேலும், அதிமுக கட்சியினர் ஓட்டு போட்டு எல்லா எம்பிக்களையோ, எம்எல்ஏளையோ, தேர்வு செய்ய முடியாது. நடுநிலை வாக்காளர்கள் வாக்கு இல்லாமல் எந்த அரசியல் கட்சியும், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது. இவர்கள் இருவரும் நினைக்கலாம். அதிமுகவும், திமுகவும் தங்களிடத்தில் அதிக தொண்டர்கள். தொண்டர்கள் என்று சொல்வது கூட தவறு ,அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தான் தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 கொள்கைக்காக இருப்பவர்கள் மட்டும்தான் தொண்டர்கள். அப்படி எத்தனை பேர்? எந்தெந்த கட்சியில் இருக்கிறார்கள்? என்று இப்போது தேட வேண்டி இருக்கிறது. அதனால், இவர்களெல்லாம் எந்த பக்கம் வேண்டுமானாலும் சாய்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு தேவை ஒரு கட்சியின் அங்கீகாரம். அந்த அங்கீகாரம் தான் அவர்களின் அடையாளம். இவர்களுக்கென்று  தனிப்பட்ட செல்வாக்கு மக்களிடம் இல்லை. அதனால், இந்த கூட்டணி முடிவு தொடருமா? அல்லது மாறுமா? என்று தெரியாத நிலைதான், அதிமுகவின் தற்போதைய நிலை.

 இந்த நிலையில் தமிழகத்தில் மாற்றத்தை நோக்கி மக்கள். இது அதிமுக, திமுக  இரண்டு கட்சிகள் தவிர, அரசியல் மாற்றம் தேவை என்பது தமிழக மக்களின் மிகப்பெரிய ஆதங்கம். இதில் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும்? என்பது எடப்பாடி டீமுக்கு தெரியாது. அதை தான் அண்ணாமலை சூசகமாக சொல்லி இருக்கிறார் .அதாவது கூட்டணி முடிவு தலைமை பார்த்துக் கொள்ளும். இதில் பல அர்த்தங்கள் உள்ளது. அது அரசியல் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியங்கள். அடுத்தது பிஜேபியின் நகர்வு எப்படி இருக்கும்? எடப்பாடி டீம் காங்கிரஸுடன் கைகோர்க்குகைகோர்க்குமா? கை கோர்த்தால் விளைவுகள் எப்படி இருக்கும்? இவையெல்லாம் அரசியலில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் நடுநிலை வாக்காளர்கள் மாற்றத்தை நோக்கி அரசியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *