அனைத்து ஊராட்சிகளும் கணினி மயமாக்க தொடர் செய்திகளை வெளியிட்ட முதல் பத்திரிகை மக்கள் அதிகாரம். இதன் பெரும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

சமூகம் செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் பத்திரிகையில் முதன் முதலாக வைக்கப்பட்ட முதல் கோரிக்கை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் கணினி மயமாக்கப்பட வேண்டும். இது பற்றிய செய்தி தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகவே மக்கள் அதிகாரம் பத்திரிகையில் வெளியிட்டு வந்துள்ளேன். இதற்காக பல மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர்களிடம், இக்கருத்தை விவாதித்து இருக்கிறேன்.

 தவிர, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது அடிக்கடி பஞ்சாயத்து முறைகேடுகள் பற்றி செய்திகளை வெளியிடும்போது கணினி மயமாக்கப்பட்டால் ,இந்த முறைகேடுகளை குறைக்க முடியும் என்ற செய்திகளை அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்துள்ளது.

இது திருவள்ளூர் மாவட்டத்தில் அப்போது இருந்த மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஒரு முஸ்லிம். அவர் மக்களதிகாரம் பத்திரிகையை என்னிடம் இரண்டு வாங்கிக் கொள்வார். ஏனென்றால் ஒன்று வீட்டிலும், இன்னொன்று அலுவலகத்திலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன் என்பார் .இதில் வரக்கூடிய கட்டுரைகள், எனக்கு டி ஆர் டி ஏ மீட்டிங்கில் மிகவும் உதவியாக உள்ளது என்று தெரிவிப்பார்.

 நானும் அவரிடம் ஊராட்சிகள் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்று கருத்தை விவாதித்து இருக்கிறேன். அதை டிஆர்டிஏ கூட்டத்தில் பேசியிருக்கிறார். அப்போது இதற்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கருத்து ஆய்வு தொடர்ந்து சில ஆண்டுகளாக அங்கே பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இக்கருத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டது. ஆனால் அதனுடைய செயல்திட்டம்( Process) முடிவடைய இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டது.

மேலும், இது சம்பந்தமாக டிஆர்டிஏ முக்கிய அதிகாரி ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பே, என்னிடம் விரைவில் அனைத்து ஊராட்சிகளும் கணினி மயமாகும் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார் .இது ஒரு கிராம ஊராட்சிகளுக்கு நல்ல ஆரம்பம். இந்த ஊராட்சிகள் கணித மாயமாக்கப்படுவது பெரிதல்ல, வரி வசூலிப்பது பெரிதல்ல,

கிராமங்களில் ஒவ்வொரு நாள் வரவு -செலவு கணக்கு, எந்தெந்த திட்டங்கள் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான நிதி ஆதாரம் மத்திய அரசா?அல்லது மாநில அரசா? ஒப்பந்ததாரர் பெயர்? அவர் எந்த இடத்தில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்? ஊரக வேலைவாய்ப்பில் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள்? அவர்களுடைய ஒரு நாள் தின கூலி எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களும், கணினி மாயமாக்கப்பட வேண்டும் .

அந்தந்த ஊராட்சி மக்கள், அந்த ,அந்த ஊராட்சியில் என்ன நடக்கிறது? என்பதை தங்களுடைய செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் கிராம ஊராட்சிகளுக்கு கணினி மயமாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். மேலும் ஊராட்சிகளுக்கு வரி செலுத்துவதற்காகவும், வீட்டு மனை பிரிவுகளுக்கு அனுமதி தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி போன்ற அனைத்தும் இணைய வழி (http://vptax.tnrd.tn.gov.in/) (http://online.ppa.tn.gov.in/)மூலம் அனுமதி அளிக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இணைய வழி சேவையை அனைத்து ஊராட்சிகளுக்கும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நிறைவேற்ற தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதற்கான உத்தரவு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்க ஆணையர் தாரேஷ் அகமது உத்தரவிட்டுள்ளார். இதற்கான தொடர் அழுத்தம் மத்திய அரசுதான் என்று எனக்கு அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை 2016 இல், இருந்து பிள்ளையார் சுழி போட்டு ,தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தாலும், அதற்கான பலன் தற்போது தான் கிராம மக்களுக்கு அது கிடைத்துள்ளது என்பதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.

                                                  ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *