.jpg)
எதிர்காலத்திற்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அமிர்த நீர்நிலை இயக்கத்தை பிரதமர் ஏப்ரல் 24, 2022 அன்று தொடங்கினார். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியையொட்டி நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் குறைந்தது 75 அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
%20(1)%20(1).jpg)
அதன்படி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் 50,000 அமிர்த நீர்நிலைகளை அமைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே இதுவரை 50,071 அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.