அமைச்சர் பொன்முடியின் வழக்கு விசாரணை சரியான தீர்ப்பாக பேசப்பட்டாலும், சாதகமான தீர்ப்பு  கொடுக்க விட்டால் நீதிபதியை விமர்சிப்பதா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சட்டத்தின்படியும் ,மனசாட்சிப்படியும் இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். அது பொது மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. சட்டம் தெரிந்த வழக்கறிஞர்களும் ,அது சரியான தீர்ப்பு என்றும் பேசி வருகின்றனர் .

ஆனால், திமுகவினர் மற்றும் திமுகவின் வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, அவர்களுடைய கூட்டணி கட்சி திருமாவளவன் போன்றோர் எல்லாம் நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்கிறார்கள். அதாவது பொன்முடி வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்றாலும் அதிமுக ஆட்சியில் அவர் சட்டத்துறை செயலாளர் பணியாற்றியவர். இந்த வழக்கில் சொத்துக்களை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டு உள்ளார்.

மேலும், இவர் சொல்வது அதிமுக ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்ட வழக்கை கீழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்து விட்டது. அதேபோல், உயர் நீதிமன்றத்திலும் இவரை விடுதலை செய்து விட வேண்டும் என்பது இவருடைய கருத்து. அதற்கு திமுக நீதிமன்றம் தான் நடத்த வேண்டும் .அதில் திமுக வழக்கறிஞர்களே இருக்க வேண்டும். அவர்களே ,அவர் எவ்வளவு தவறு பண்ணி இருந்தாலும், அல்லது எவ்வளவு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தாலும் ,அவரை நிரபராதி என்று தீர்ப்பு அளிக்க வேண்டும். இதுதான் திமுக எதிர்பார்க்கின்ற ஒன்று .

அதற்கு சட்டம் தேவையில்லை. நீதிமன்றம் தேவை இல்லை .மக்களாட்சி என்ற ஒரு பொறுப்பு மிக்க பதவி தேவையில்லை. பதவிக்கு மரியாதை கொடுத்து குறைந்தபட்ச தண்டனையாக கொடுத்திருக்கிறார். இவருக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், இவருடைய ஆரம்ப கால சொத்து என்ன?  இப்போது எப்படி இவ்வளவு பெரிய சொத்து வந்தது?  இவர் காட்டும் கணக்கை எடுத்துக் கொள்ள முடியுமா?  அந்த சொத்து எங்கிருந்து வந்தது ? எப்படி வந்தது?  இவர் என்ன தொழில் செய்தார் ? என்ன தொழில் செய்தாலும் ,அந்த தொழில் மூலம் அவர் போட்ட மூலதனத்தில் அல்லது அவர் வைத்திருக்கும் சொத்தில் ,அதனுடைய வருமானம் 25% வரும். இதுதான் நியாயமான வருமானம். ஆனால், ஆயிரக்கணக்கான கோடி எப்படி இவர்களுக்கு எல்லாம் வந்தது? இதுதான் பொது மக்களின் முக்கிய கேள்வி? இதுதான் சட்டத்தின் கேள்வி?

மேலும் ,தேர்தலில் நிற்கும்போது இவருடைய குடும்ப சொத்து விவரம் என்ன? தற்போதைய சொத்து விபரம் என்ன ? இதையெல்லாம் கணக்கெடுத்தால் ,இந்த வழக்கில் மேலும் பல சொத்துக்கள் முடக்க வேண்டி வந்திருக்கும். அதுதான் முறையான கணக்கு. இவர்கள் சொல்லும் பொய்க்கணக்கு, ஆடிட்டர் சொல்லும் பொய்க்கணக்கு, இது எல்லாவற்றிற்கும் சட்டத்தில் உள்ள ஓட்டை .மேலும் இவர்கள் சொல்வது போல் நீதிபதி அப்பழுக்கற்றவர் இல்லை என்று வைத்துக் கொள்வோம் .

இவர்களுக்கு தேவலோகத்தில் இருந்து நீதிபதியை வரவழைத்து ,இந்த வழக்கை விசாரணை செய்ய சொல்லலாமா ?மேலும், நீதிபதியை விமர்சனம் செய்வதற்கு முன் இவர்கள் அதற்கு தகுதியானவர்களா? என்பதை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், பணத்திற்காக விலை போன ஒரு கூட்டம், இந்த வாக்கு அதிகாரம் , அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி கொள்ளை அடிப்பதை தொழிலாக கொண்டு ,அதற்கு இவ்வளவு காலம்  சட்டத்தை ஏமாற்றிக்கொண்டு, பொதுமக்களை முட்டாளாக்கிக் கொண்டு,  எப்படியும் பேசுகின்ற திறமையை கையாண்டு ,இனி சட்டத்தையும், மக்களையும், ஏமாற்ற முடியாது என்பதை நீதிபதி ஜெயச்சந்திரன் நிரூபித்துள்ளார்.

மேலும் ,நீதி என்பது மக்களுக்கானது. அரசியலமைப்பு சட்டம் மக்களாட்சியின் அடிப்படையில், அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் முக்கியத்துவம் அரசியல் கட்சிகளுக்கானதல்ல, அரசியல் கட்சி வழக்கறிஞர்களுக்கு ஆனதல்ல ,உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால், நீதி வென்றது என்று கொட்டை எழுத்தில் போட்டுக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்கும் வேலை.

ஆனால், சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால், நீதிபதியை விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருப்பார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அது மட்டுமல்ல, என் ஆர் இளங்கோ சட்டத்தை படித்தது சட்டத்தை வளைப்பதற்காகவா? நீங்கள் சட்டத்தை படித்தவராக இருந்தால் ,அந்த  சட்டத்தின் அடிப்படையில் என்ன தவறு நீதிபதி செய்திருக்கிறார்? என்பதை சுட்டிக்காட்டுங்கள், அதை விடுத்து அவர் எங்கிருந்தார்? அங்கு இருந்தார்? அவர் எங்க இருந்தால் என்ன? சட்டப்படி, மனசாட்சி படி தீர்ப்பு சொல்லி இருக்கிறாரா? அதுதான் மக்களுக்கு தேவை.உங்களுடைய அடாவடி பேச்சுக்கெல்லாம், எந்த நீதிபதியும் ,நீதி சொல்ல முடியாது .

மேலும் ,சட்டம் தெரிந்தவர்கள், மனசாட்சி உள்ள மக்கள் ,இது சரியான தீர்ப்பு என்று தான் பேசி வருகின்றனர். தவிர, இன்னொன்றையும் இப்படிப்பட்ட அராஜக அடாவடி, பேச்சாளர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீதி என்பது சனீஸ்வரனின் ஆளுமைக்கு உட்பட்டது. நீதிபதி தப்பாக சொன்னால், அந்த தவறு நீதிபதிக்கும் தண்டனை உண்டு. அந்த தண்டனை கொடுப்பது யார் தெரியுமா? கடவுள் .அதே போல் ,தான் சட்டத்தின் இத்தனை ஓட்டைகளையும், பேசிக் கொண்டிருக்கும் நீங்கள், கடவுளின் தண்டனையை தாங்க முடியாது .அவர் எப்படி கொடுப்பார் என்பது தெரியாது. இப்போது சொல்கிறீர்களே நோயை அந்த நோயெல்லாம் யார் கொடுத்தது தெரியுமா? இதுதான் கடவுள். எவ்வளவுதான் அதிகாரத்தால் ,ஆட்டம் போட்டாலும், இறைவன் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க மாட்டார். அங்கே ஓட்டைகளை தேட முடியாது .அதனால், செய்த குற்றத்திற்கு தண்டனை உண்டு. அது யாராக இருந்தாலும், அதற்கு விதிவிலக்கு அல்ல.

 மேலும், நானே ஒரு தவறான செய்தியை இங்கே, மக்களுக்கு சொன்னால் அதற்கும் எனக்கு தண்டனை உண்டு .ஏனென்றால், அந்த தவறான செய்தியால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அந்தத் தவறுக்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும் .அதேபோல்தான், மக்கள் கொடுத்த பதவி ,அதிகாரம் தவறாக பயன்படுத்தி ,சொத்துக்களை சேர்த்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தால், சட்டமும் ,நீதிமன்றமும் நீங்கள் சொல்வதை கேட்டுக் கொள்ள வேண்டுமா? இன்றைக்கு பேசப்படும் பல கார்ப்பரேட் ஊடகங்கள்,  இந்த தவறை செய்து கொண்டிருக்கிறது. அதற்குரிய பலன் நிச்சயம் ஆண்டவன் தீர்ப்பு எழுதத் தான் போகிறார்.

 மேலும், உங்களுக்கு வாக்களித்தது, மக்களுக்கு நேர்மையான நிர்வாகத்தை கொடுப்பதற்கும் ,நல்லாட்சி கொடுப்பதற்கும் தான். ஆனால், கொள்ளையடிப்பதற்கு அல்ல .இது மக்கள் செய்த தவறு .அந்த தவறுக்கு மக்கள் இயற்கையின் தண்டனையால் ,இப்போது மழை வெள்ள பாதிப்பால் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 2024 ல் மக்கள் என்னென்ன துன்பமும், துயரமும், அனுபவிக்க போகிறார்களோ, என்பது நினைத்தாலே வேதனையாக தான் இருக்கிறது. காரணம், ஒரு மன்னன் நெறி படியும் ,மனசாட்சி படியும் ,அவன் அரசாட்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் நாட்டில் மழை பெய்யாது என்று மக்கள் மன்னனை திட்டுவார்கள். இப்போது இயற்கையின் தண்டனை கொடுக்கும்போது யாரை திட்டுவார்கள்?

 இது தவிர, நீதிமன்றத்தில் நீதி தேவதை  எதற்காக கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கிறாள்? அதுவாவது என் ஆர் இளங்கோ, திருமாவளவன் போன்றவருக்கு தெரியுமா? தெரியாதா? இவர்களெல்லாம் என்ன சட்டம் படித்தார்கள் ?என்று தெரியவில்லை, சட்டத்தின் ஓட்டை தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதியை நிலைநாட்டுவதற்கு தான் நீதிமன்றம். அநீதியை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றங்கள் தேவையில்லை. அதனால்தான் நீதி தேவதை கண்ணை கட்டிக்கொண்டு, இவன் திமுக கட்சிக்காரனா? அல்லது அதிமுக கட்சிக்காரனா? அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காரனா? பிஜேபி கட்சிக்காரனா?  என்று பார்க்கக் கூடாது.கட்சி எல்லாம் நீதிமன்றத்திற்குள் வெளியில் இருக்க வேண்டும் .இவரைப் போன்ற காட்சிகாரர்களை அரசு வழக்கறிஞராக வைத்தது, நீதிக்கே தண்டனை தான்.

அதனால், வருங்காலத்திலாவது இந்த அரசியல் கட்சிக்காரர்களை வழக்கறிஞர்களாக மாற்றும் வேலையை நீதிமன்றம் நிறுத்த வேண்டும். ஒரு கட்சிக்கு ஏஜென்ட் ஆக இருப்பவர்கள் ,எப்படி நீதிமன்றத்திற்குள் இப்படிப்பட்ட அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கலாம்?  இவர் அந்த கட்சிக்காக பேசுவாரா?  அல்லது மக்களின் நலனுக்காக பேசுவாரா?  அதனால், நீதிமன்றம் வருங்காலத்தில் ஆவது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் சிபாரிசுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது .

மேலும், இப்படிப்பட்ட  பதவி, அதிகாரத்தில் இருந்தவர்களின் வழக்கு கீழமை நீதிமன்றத்தில் இனி விசாரணைக்கு அனுமதிக்க கூடாது. இதற்கான சிறப்பு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மட்டுமே இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் .

ஏனென்றால், கீழமை நீதிமன்றத்தில்  சட்டத்தை பாதுகாக்க தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். அதுதான் தற்போதைய விமர்சனத்திற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *