அரசியலில் எம்ஜிஆரை இமிடேட் செய்த விஜயகாந்த். திரை உலகில் ரஜினியை பாலோ follow செய்தவர்.

அரசியல் இந்தியா சமூகம் சினிமா ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எத்தனை திரைக் கலைஞர்கள், நடிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தாலும், எம்ஜிஆர், சிவாஜிக்கு ஈடாக முடியாது. காரணம் அவர்கள் கலைக்காகவே பிறந்தவர்கள். கதைக்காகவே வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட மகா கலைஞர்கள், பிறந்தது ஏதோ ஒரு காரண காரியத்தால், பிறப்பெடுத்தவர்கள்.

 இன்று வரை அவர்களுக்கு எழுதப்பட்ட கதை ,வசனம் ,பாட்டு, இசை, தவிர, சக நடிகர்கள் ,நடிகைகள் இவை எல்லாம் ஒரு தீர்மானிக்கப்பட்ட அமைப்பாகவே தோன்றுகிறது .இன்று வரை ,இந்த திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகவே உள்ளது. ஆனால் ,இன்றைய இளைஞர்கள்  படித்து பட்டம் பெற்றவர்கள் ,இவர்களில் பெரும்பாலும் வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செல்போன், கம்ப்யூட்டர் இது காலத்தின் தேவையாக இருந்தாலும், உண்மை உணராமல், வாழ்வது வாழ்க்கையின் அர்த்தமற்றது. போலியான வாழ்க்கையில் மனிதன், மனிதனாக வாழ முடியாது. மேலும், அன்று படிப்பறிவு இல்லாத மக்கள் மனசாட்சியுடன், உண்மையைப் பேசி வாழ்ந்தார்கள் இன்று மக்கள் பொய்யும், போலியும் வாழ்க்கை ஆக்கி கொண்டார்கள். வாழ்க்கை என்பது ஆடம்பரம், போலி கௌரவம் ,எதுவும் சந்தோஷத்தை தராது. அப்படி வாழ்பவர்கள் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள். அன்று தேவைக்காக பணம் இருந்தது.ஆனால், இன்று பணமே வாழ்க்கையாக இருக்கிறது. தவிர,

இன்றைய அரசியல் கட்சியினர்  உழைக்காமல், புகழும், பணமும் சம்பாதிக்கும் தொழிலும் ,வியாபாரமும் என்று ஆகிவிட்டார்கள் தற்போதைய அரசியல். மேலும், அரசியல் கட்சிகளில் ஊரை ஏமாற்றும் பிராடு கூட தன்னை ஒரு தியாகி போல பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும் . ஒருவேளை அவனுக்கும், பதவி அதிகாரத்தை பிடிப்பதற்கு இப்படித்தான் பேச வேண்டும் .அப்போதுதான் மக்கள் நம்புவார்கள் என்று, மக்களின் விக்னஸ். தவிர,

தமிழ்நாட்டில் பொய்களை சொன்னால் அரசியல்வாதி, உண்மையை பேசினால் அவன் பிழைக்கத் தெரியாதவன் .இதில் புத்திசாலி மக்கள் உண்மையை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். முட்டாள்கள் பொய்யை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு அரசியல், பதவி, அதிகாரம், சட்டம் எதுவும் தெரியாது ..தெரிந்தால் அடுத்த நிமிஷமே போய் வாடா என்பார்கள். இதில் மக்களுக்கு உண்மை தெரிய வரும்போது, அரசியலைப் படித்தவர்கள், தெரிந்தவர்கள், வேதனைப்படுகிறார்கள் .உண்மையான அரசியல்வாதி, போலியான வாழ்க்கையும் ,போலியான கௌரவத்தையும், மக்களிடம் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால், தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்களிடம் ஒரு சிறிய சொம்பை கொடுத்து விட்டு, பெரிய அண்டாவை சட்டப்படி திருடுவதில் தான் அவர்களுடைய புத்திசாலித்தனத்தை காட்டுகிறார்கள் .

அது மட்டுமல்ல, இன்றைய எம்எல்ஏ ,எம்பி ,மந்திரி, பஞ்சாயத்து தலைவர்கள் வரை, தன்னுடைய பதவி, அதிகாரத்திற்கு தகுந்தவாறு சட்டப்படி கொள்ளை அடிப்பது தவறில்லை என்ற ஒரு மூடநம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இதற்குக் காரணம், அரசியல் தெரியாத மக்களும், இவர்களை கார்ப்பரேட் ஊடகங்கள் மிகைப் படுத்தி, சமூக நன்மைக்கான போராளிகளை போல் பேசுவதை காட்டிக் கொண்டிருப்பது தான், இன்றைய மக்களின் அரசியல் ஏமாற்றம் .

இது தவிர, மக்களை பதவி அதிகாரத்திற்கு வந்தவுடன் , அலட்சியமாக, கேவலமாக பார்ப்பதும், தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காதவர்களும், எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள்? இப்படிப்பட்டவர்கள் காட்டும் பந்தாவை நானே பார்த்திருக்கிறேன் .அவர்களுடைய எடு,பிடிகளும், உதவியாளர்களும் நானே ஒருமுறை தலைமைச் செயலகத்தில் பொன்முடி வரும்போது, என்னை எழுந்திரு, தள்ளு என்றார்கள்.

.

அப்படிப்பட்ட தியாகியா? இவர். நாட்டில் தியாகிக்கெல்லாம் மரியாதை இல்லை, மதிப்பில்லை, உண்மைக்கு, நியாயத்திற்கு மதிப்பு இல்லை .ஆனால், ஊழல்வாதிக்கு எவ்வளவு பெரிய பந்தா? என்பதை பொன் முடியை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். இனியாவது மக்கள் போலி  அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி ஏமாறாமல் இருப்பார்களா ?

 மேலும், நடிகர், நடிகைகளின் வாழ்க்கை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் அவர்கள் நட்சத்திரங்கள் .ஆனால் ,அவர்கள் எவ்வளவு மனசோதனைகளுக்கு, கஷ்டங்களுக்கு, வேதனைகளுக்கு ஆட்பட்டாலும், வெளியில் தெரியாமல், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்றும் அப்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணம் என்பது திரை உலகில் கோடியும், இலட்சமும், சர்வ சாதாரணமாக இருந்தாலும், நிம்மதியும் ,சந்தோஷமும் அவர்களால் விலை கொடுத்து வாங்க முடியாது .இறைவன் ஒன்றை கொடுத்தால் இன்னொன்றை பறித்து விடுவார்.

 அவர்கள் வாழ்க்கை மின்னும் நட்சத்திரங்கள்  எப்படியோ, அப்படித்தான். சில காலம் ,சில நேரம் நட்சத்திரங்கள் வானில் தோன்றி மறைவது போல, அவர்களும் தோன்றி மறைந்து விடுவார்கள். அதில் அதிர்ஷ்டமும், புண்ணியமும் இருப்பவர்கள் ,நீண்ட காலம் திரைத்துறையில் பயணிப்பார்கள். அப்படி பயணித்தவர்கள் குறிப்பிட்ட சிலர் ஆகத்தான் இருப்பார்கள் .அந்த வகையில் விஜயகாந்த் திரை உலகில் மின்னும் நட்சத்திரமாக ,வலம் வந்து குறிப்பிட்ட காலம் ஹீரோவாக படங்களில்  வலம் வந்தார்.

பிறகு, எம்ஜிஆரை போல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு எந்த நடிகருக்கும், தமிழ்நாட்டில் இல்லை. இருப்பினும், அவரைப் போல், தன் வீட்டில் உணவு, வந்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி, இது எல்லாம் எம்ஜிஆரை இமிடெட் செய்து  அரசியலில் வளம் வந்தவர். சமீபத்தில் கேள்விப்பட்டேன், எம்ஜிஆர் தேர்தலுக்காக எந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தாரோ ,அதே வாகனத்தில் இவரும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

மேலும், ரஜினியை போல் தானும் உள்ளதாகவே, அவருடைய சினிமாவின் பிரவேசம் மற்றும் ஹீரோ கனவு .அது செய்த புண்ணியமும் ,அதிர்ஷ்டமும் திரை உலகில் ஹீரோவாக ஆகிவிட்டார் . இது இரண்டும் இல்லாமல், ஒரு மனிதர் எவ்வளவு முயற்சித்தாலும் ,அவருடைய எண்ணம் ஈடேறாது. அப்படி பிரகாசிக்கும் ஒவ்வொருவரும் ,அதற்காக பல பிறவிகளில் புண்ணியம் செய்து, திரைப் புகழ், அடைவதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆத்மாக்களாக தான் இருப்பார்கள் .

அது இப் பிறவியில் ,விஜயகாந்த்க்கு கை கூடியது. அதனால் ,திரைத்துறை வாழ்க்கை என்பது போராட்டங்கள் நிறைந்தது .அதேபோல், அரசியல் என்பதும் போராட்டங்கள் நிறைந்தது. இந்த போராட்டத்தில் வெற்றி பெறுபவர்கள், மிகச் சிலரே. காலம் யாருக்கு? எவ்வளவு நாள் என்பதை தீர்மானிக்கிறது. அதை புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *