ஆசிரியர்.
அரசியல் கட்சிகள் ஊழல் செய்த பணத்தை தேர்தலில் செலவு செய்வதை நிறுத்தாத வரை ,நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர முடியாது . தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் கடந்த 50 ஆண்டு காலமாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவது தான் தேர்தல் ஆகிவிட்டது. அதனால்தான், அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது .மக்களுக்கு ஆயிரம் 2000 கொடுத்து, ஐயாயிரம் கோடி ,பத்தாயிரம் கோடி, 50 ஆயிரம் கோடி என்ற வரிசையில் ஊழல்கள் நாட்டில் தொடர்கிறது.
ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளரை ஜெயிக்க வைக்க அரசியல் கட்சிகள் 200 கோடி டார்கெட் வைக்கிறது . இந்த 200 கோடியில் 100 கோடி கட்சிக்காரர்கள் என்று சொல்லக்கூடிய இவர்களுடைய மீடியேட்டர்கள் மற்றும் இதர செலவுகள் இவர்களே பணம் கொடுத்து கட்சிக்காரனுக்கு போஸ்டர், பேனர் ,கட்டவுட் போன்றவை வைக்க சொல்கிறார்கள். இது ஒரு வகையில் மக்களை மிரட்டுவதிலும், பந்தா காட்டுவதிலும், தன்னை அந்த பகுதியில் இவர் ஒரு பெரிய புள்ளி என்று காட்டிக் கொள்வதிலும், இந்த எடுபிடிகள் வேலை செய்கிறது.
இது பற்றி அரசியல் தெரியாத ஏழை ,நடுத்தர தொழிலாளர் கூட்டம், உழைக்கும் வர்க்கும் ஏமாந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த எடுபிடிகள் ஒரு நூறு, ஐம்பது கூட்டமாக வந்து அரசியல் தெரியாத மக்களிடம் அவர்கள் கட்சி சின்னத்தை காண்பித்து வாக்களியுங்கள் என்று சொன்னால் அவர்கள் மிரண்டு போகிறார்கள். நகரத்தில் கையெழுத்துப் கும்பிட்டு காலில் விழுவார்கள், அங்கே தங்களை சமூக சேவகர்களாக காட்டிக் கொண்டிருப்பார்கள். கிராமத்தில் இந்தக் கூட்டத்தைப் பார்த்து மிரளுவார்கள். இது எல்லாம் கட்சியை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கூட்டம். இந்தக் கூட்டம் எப்படியும் பேசும். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும்.
அப்படிப்பட்ட தரங்கெட்ட கூட்டம்தான் இந்த கட்சி கூட்டம். அதில் குறிப்பிட்ட சதவீதம் விதிவிலக்கு உண்டு. அது எல்லாவற்றிலும் இருக்கிறது. இவர்களால்தான் அரசியலில் நேர்மையானவர்கள், தகுதியானவர்கள் பதவிக்கு வர முடியவில்லை. இதை ஒழிக்க வேண்டும் என்றால்! தேர்தல் ஆணையம் கடும் சட்டங்களை கொண்டு வர வேண்டும். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கினால் ,அந்த வேட்பாளர் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.பணம் என்பது மக்களின் வீக்னெஸ் ஆகிவிட்டது.
இதை பயன்படுத்தி அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை வியாபாரம் ஆக்கிவிட்டனர். இந்த வியாபாரத்தால் தகுதியானவர்கள் அரசியலுக்கு வர முடியாது. ஏனென்றால், மக்கள் பணத்திற்கு அடிமையாகி விட்டார்கள் என்பது அரசியல் கட்சியினருக்கு நன்கு தெரியும். அவர்களை எப்படியாவது விலை கொடுத்து வாங்கிவிடலாம். அதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு எத்தனை கோடிகளை செலவு செய்ய முடியும்? என்ற கணக்குகளை மட்டுமே அவர்கள் போடுவார்கள்.
அந்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் வேலை பார்ப்பவர்கள் அவர்களுடைய கணக்கில் சொல்வது கட்சிக்காரர்கள், அதாவது கீழ் மட்டத்தில் இருப்பவர்கள், என் கணக்கில் அவர்கள் கட்சியின் மீடியேட்டர் அதாவது புரோக்கர்கள் இந்த புரோக்கர்கள் தான் தன்னுடைய வார்டில் எத்தனை ஓட்டு உள்ளது? யாரெல்லாம் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்கள்? எந்த கட்சிக்கும் ஓட்டு போடாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன விலை? இப்படி கணக்கு போட்டு பணத்தை வியாபாரம் செய்வது தான் இன்றைய தேர்தல்.
இதில் எப்படி நேர்மையானவர்கள் ,பணத்தை கொடுத்து, தன்னுடைய உழைப்பையும் கொடுத்து, மக்களுக்காக சேவை செய்ய வருவார்கள்? ஒரு காலும் வர மாட்டார்கள். ஏனென்றால், மக்கள் செய்யும் தவறு! இன்று மக்களே அனுபவிக்கிறார்கள் .அதாவது தேர்தல் நேரங்களில் ஆயிரம், இரண்டாயிரம் வாங்குகிறார்களே ஒழிய அதனுடைய பலன் இவர்கள் வேறு வழிகளில் அனுபவிக்க தான் செய்கிறார்கள். இவர்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே 100 தடவை கையெடுத்து கும்பிட்டு 10 தடவை காலில் விழுவார்கள். ஆனால், வாக்காளர்கள் ஐந்து வருடம் அவர்கள் பின்னாடி சென்று கையெடுத்து கும்பிட்டு ,காலில் விழுவார்கள். எந்த வேலையானாலும், பணம் கொடுக்காமல் ஒரு சிறு வேலை கூட நடக்காது.
எனவே, இன்றைய தேர்தல் வெற்றி என்பது பணமாகிவிட்டது. .உழைப்பு என்பது கேவலமாகி விட்டது .நேர்மை என்பது ஏளனமாகி விட்டது .நீதி என்பது பணக்காரனுக்கும், அதிகார வர்க்கத்திற்கும்,ஊழல்வாதிகளுக்கும்,சொந்தம் ஆகிவிட்டது. இது எல்லாம் யார் செய்யும் தவறு? சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் செய்யும் தவறுதான், இன்று அவர்கள் தலையில் ,அவர்களே மண்ணு வாரி போட்டுக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஒரு சாதாரண அரசியல் கட்சி நிர்வாகி, கட்சிக்காரனாக வேலை செய்ய வேண்டும் என்றால், அந்த கட்சிக்கு தினமும் அவர் தன் உழைப்பையும் செலவு செய்து ,சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி என்றால், அவர் அந்த இழப்பை எப்படி சம்பாதிப்பார் ?அவர் நேர்மையானவராக இருந்தால், அவரால் சம்பாதிக்க முடியாது. அவர் ஒரு பிராடு, கிரிமினல் extra வாக இருந்தால் மட்டுமே, இன்று அரசியலில் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியும். நேர்மையாக உழைத்து சம்பாதித்ததை எடுத்துக் கொண்டு வந்து இவர்களுடைய வாக்குகளை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.
அதனால், இந்த பணம் கொடுப்பவர்கள் அத்தனை பேருமே, எந்த கட்சியில் இருந்தாலும், அவர்கள் சேவை செய்ய வந்தவர்கள் அல்ல. ஊழல் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ, அப்போதுதான் நல்லவர்கள், இவர்களுக்காக உழைப்பவர்கள் ,இவர்களுக்காக பாடுபடுபவர்கள், இவர்களுக்காக சேவை செய்பவர்கள், நாட்டில் பதவிக்கு வர முடியும் . இல்லையென்றால் ,அந்த நிலைமைக்கு மக்களின் மனநிலை இருக்கிறது. அது மாற வேண்டும்.
மேலும், மக்களுக்கு அரசியல் என்றால் பணம் இருப்பவர்கள் மட்டும்தான் பதவிக்கு வர முடியும் என்று அவர்களே பேசுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தகுதியை பற்றியோ, அல்லது அவர்களுடைய எளிமையை பற்றியோ ,அவர்களுடைய நேர்மையைப் பற்றியோ, அவர்களுடைய சேவையைப் பற்றியோ பேச மாட்டார்கள். அந்த நிலை மாற வேண்டும் .அது மக்கள் உணர்ந்தால் மட்டும் தான் மாற்றம் கொண்டு வர முடியும். அதனால் மக்கள் தேர்தல் !என்றால் பணம் வாங்காமல் வாக்களியுங்கள். கொடுத்தாலும் வாங்காதீர்கள் .அந்த பணம் உங்களை உயர்த்தாது.
உங்களை கீழ் நிலைக்கு தான், உங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும். அது மட்டுமல்ல, நீங்கள் ஒரு பஞ்சாயத்து தலைவருக்கோ அல்லது வார்டு கவுன்சிலருக்கும் அல்லது நகராட்சி சேர்மனுக்கு அல்லது கவுன்சிலர்களுக்கோ, நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்கு செலுத்தினால், அவர்களைக் கேள்வி கேட்க முடியாது . தற்போது கேள்விப்பட்டது , அவர்களும் இவன் என்ன எனக்கு சும்மாவா ?ஓட்டு போட்டான். காசு வாங்கிக் கொண்டு தானே ஓட்டு போட்டான். இவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இந்தக் கேள்வி காசு வாங்காதவன் கேட்க முடியும். காசு வாங்கியவன் கேட்க முடியாது. ஏனென்றால், காசு வாங்கியவன் அவனுடைய அடிமை என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அதனால், இந்த அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, சிபிஐ,, அமலக்கத்துறை ,இவை அனைத்தும் அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ,இதில் ஓரளவாவது நேர்மையான அரசியலை மக்களுக்கு கொடுக்க முடியும் என்பதை ஏழை ,நடுத்தர மக்களுக்கு புரிந்தால் சரி.