அரசியல் தெரியாத மக்களிடம் போலி அரசியல் பிம்பங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்குவதை தடுக்க ,தேச நலன், சமூக நலன் ,கருதி பிரதமர் மோடி தயவு செய்து பத்திரிக்கை துறையில் மாற்றம் கொண்டு வர சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியல் கட்சி என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? அரசியல் தெரியாத மக்களிடம் போலி அரசியல் பிம்பங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்குகிறதா ? – ஏமாறும் பொதுமக்கள்.

கார்ப்பரேட் மீடியாக்களில் அரசியல் செய்யும் அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது . மேலும், அரசியல் தகுதி ,சேவை மனப்பான்மை, காசு வாங்கி ஓட்டு போட்டு புலம்பும் மக்களுக்காகவும், ஓட்டு போட்டு ஏமாறும் மக்களும், கட்சியை பார்த்து ஏமாறும் மக்களும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் .தவிர,

நாட்டில் போலி அரசியல் பிம்பங்களை ,கார்ப்பரேட் மீடியாக்களில், உருவாக்கி வருகிறார்கள். அதுதான் கடந்த எடப்பாடி ஆட்சியில் வெற்றி நடை போடுகிறது தமிழகமே ,தற்போது இரண்டு ஆண்டு ஆட்சி அதுவே சாட்சி, இப்படி எல்லாம் ஒரு விளம்பரம் .இந்த விளம்பரம் யாருடைய பணத்தில் விளம்பரப்படுத்துகிறார்கள்? மக்களுடைய வரிப்பணம் .மேலும், தற்போது எந்தஅரசியல் கட்சிகளும் ,அதன் தலைவர்களும், மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு பார்த்தால் உண்மை தெரியும்.

மேலும் ,சொல்வது சுலபம். ஆனால், செயல்படுவது தான் மிக மிக கடினம். அது அவர்களுக்கு மட்டுமல்ல ,சாதாரண மனிதன் முதல் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வரை செயல்படுவது என்பது மிகவும் கடினமான வேலை. இந்தக் கடினமான பணியை அரசியலில் செய்பவர்கள் மிக மிகக் குறைவு. அதுவும் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் செய்பவர்கள் ஒரு சதவீதம் கூட தேர மாட்டார்கள். அந்த அளவிற்கு இன்றைய சுயநல அரசியல்.

இப்படிப்பட்ட  இன்றைய சுயநல அரசியலை ,கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் பணத்திற்காக இந்த செய்திகளை போட்டு ,விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால், ஏமாறும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சதவீத மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், உண்மையான பொது தொண்டின் செயல்பாடு அதுதானா?  என்பது அரசியல் தெரிந்தவர்களை சிந்திக்க வைக்கிறது . அது மட்டுமல்ல ,

இந்த உண்மைகள் எல்லாம் மக்களுக்கு வெளிப்படையாக போய் சேரக்கூடாது. என்பதில் ஆட்சியாளர்கள், அதிகாரம் மிக்கவர்கள் நினைக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் அரசியலில் ஊழல் செய்து, கொள்ளை அடிக்க முடியும். அந்தப் பணத்தை வைத்து வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி போட முடியும். இதில் இன்னொரு அரசியலும் இருக்கிறது. அது என்ன என்றால் எங்களைப் போன்ற சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் மேலே வரக்கூடாது. என்பதில் இந்த ஆட்சியாளர்களுக்கும் ,அதிகாரம் மிக்கவர்களுக்கும் , கார்ப்பரேட் மீடியாக்களுக்கும், உள்ள ரகசிய ஒப்பந்தம்.

 அதாவது ,இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால், உண்மை மக்களுக்கு தெரிய வரும் .ஆட்சியைப் பற்றி தவறான கருத்து மக்களிடம் தெரிந்து விடும் .அதனால், இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது. இது எழுதப்படாத சட்டத்தின் கார்ப்பரேட் பத்திரிக்கை அரசியல். மேலும், 50 ஆண்டு காலமாக ஒரே பத்திரிக்கை சட்டங்களை வைத்துக்கொண்டு, பத்திரிக்கை துறை ஆட்சியாளர்களின் சுயநலத் துறையாக மாறியிருக்கிறது.

 மேலும், பத்திரிகை என்பது அறிவு சார்ந்தது .சர்குலேஷன் என்பது பணம் சார்ந்தது. பணம் சார்ந்ததை வைத்து, சர்குலேஷன் விதிமுறையை உருவாக்கி விட்டு, அறிவு சார்ந்த பத்திரிக்கை துறைக்கு முக்கியத்துவம் தரவில்லை. இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான மத்திய ,மாநில அரசின் விதிமுறையா?  

அதனால், அரசாங்கத்தின் இச்சட்டம் பொது மக்களுக்கு பயனுள்ள செய்திகளையும், அறிவு சார்ந்த கருத்துக்களையும், கொடுக்க வேண்டிய பத்திரிகைகள், இன்று சர்குலேஷன் விதிமுறையால் மக்களுக்கு பத்திரிகையின் பயன்கள், உண்மையான செய்திகள், அரசாங்கத்தின் வெளிப்படுத்தன்மை, எதுவும் போய் சரியான முறையில் சேர்வதில்லை. இதற்கு என்ன காரணம்?  அரசாங்கம் அறிவு சார்ந்த பத்திரிகைகளிடம், சர்குலேஷன் என்ற பணம் சார்ந்த சட்டம் எப்படி ஒத்துப் போகும் ?

 தவிர, குறிப்பிட்ட சதவீத மக்கள் சுயநலவாதிகளாக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லதும் ,தெரியவில்லை. நல்லவர்களும் தெரியவில்லை. கெட்டவர்களும், தெரியவில்லை. அதனால் தான், யார் யூடியூபில் நன்றாக பேசுகிறார்கள்?   யார் தொலைக்காட்சிகளில் நன்றாக பேசுகிறார்கள்?   இதைப் பார்த்து முடிவு செய்கிறார்கள் . அரசியல் என்பது அதுவல்ல,

யார், சமூக நோக்கத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்கிறார்கள்?   அதுதான், இந்த சமூகத்தின் அடையாளம். அதுதான்  அரசியல் அடையாளம் , அதுதான், இந்த தேசத்தின் அடையாளம் . அப்படி இந்த தேசத்தின் அடையாளம் மிக்கவர்களை, உண்மையான அரசியல் சமூக சேவகர்களை ,மக்கள் அவர்களின் சேவைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, தேர்தலில் அவர்களை தோற்கடித்து வருகிறார்கள். ஒரு வார்டு உறுப்பினராக கூட, ஒரு பஞ்சாயத்து தலைவராக கூட வர முடியவில்லை. இதுதான் தற்போதைய தமிழ்நாட்டின் போலியான அரசியல் பிம்பம்.

இந்த போலியான அரசியல் பிம்பத்தால் ,நாட்டில் எவ்வளவு அராஜகங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஊழல்கள், நடைபெறுகிறது? இந்த போலியான அரசியல் பிம்பத்தை ஒழிக்காமல், இதை ஒழிக்க முடியாது .அதற்கு முக்கிய காரணம் மத்திய ,மாநில அரசுகளின் தவறான சர்க்குலேஷன் விதியை மாற்றாமல், இப்படிப்பட்ட கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கும் சலுகை ,விளம்பரங்கள் , கோடிக்கணக்கில் வரி பணம் வீணடிப்பதை செய்திதுறையும், நீதிமன்றமும் முன்வந்து தவிர்க்க வேண்டும்.

மேலும், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு இதுநாள் வரை, இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். தவிர, சமூக அக்கறை இல்லாத ஊடகங்கள் எப்படி ,மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும்? இவர்கள் ஆட்சியாளர்களுக்காக, அரசியல் கட்சிகளுக்காக, வியாபாரம் நோக்கம் கொண்டு, நடத்திக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, மக்களிடம் உண்மையை வெளிப்படுத்தவும் ,அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ,இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் இல்லை. ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்காகவும், ,அவர்களை மேலே தூக்கி விடுவதற்கு தான், அரசாங்கம் இருக்கிறது.

 அதனால்? உண்மையான, தகுதியான ஊடகங்களை எப்படி காப்பாற்றுவார்கள்? அப்படி என்றால் ,இந்த ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகள் இந்த தேசத்தின் மீதும், மக்களின் மீதும், சமூக அக்கறையுடன் எப்படி செயல்பட போகிறார்கள்? எல்லாமே கேள்விக்குறியாக தான் உள்ளது. இதன் எதிரொலி, இன்றைய அரசியல் நிலைமை ,ஒவ்வொரு கிராமங்களிலும் ,நகரங்களிலும் எப்படி உள்ளது? என்றால், அரசியல் கட்சி பெயரில்,

ஊருக்கு 100 குடும்பம் ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டங்கள் தான் காவல்துறை அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்கள். கட்சியை பயன்படுத்திக் கொண்டு, மணல் மாபியாக்களுடன் கைகோர்த்து கொள்கிறார்கள்,மலைகளை வெட்டி எடுக்க கைகோர்த்துக் கொள்கிறார்கள், மரங்களை வெட்டி எடுக்க கைகோர்த்து கொள்கிறார்கள். பார்ப்பதற்கு கிராமங்களில் அப்பாவிகள் போல் பேசிக்கொண்டு, கிராம மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி, தட்டி கேட்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது, மிரட்டுவது, இப்படி பட்ட சூழ்நிலையில் தான் ,தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை.

இதனால் தான், காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. இதையெல்லாம் திமுக அரசு எப்படி சரி செய்யப் போகிறது? ஜெயலலிதா தன் சொந்த கட்சியில் பெரிய பொறுப்புகளிளோ, பதவியிலோ  இருந்தால் கூட, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள் . முதல்வர் ஸ்டாலினிடம் அது இருக்குமா?

மேலும், மக்கள் உண்மைக்கும், நல்ல செயலுக்கும், இவ்வளவு அரசியல் கட்சிகளால் போராட வேண்டி இருக்கிறது. இதில் பெட்டி வாங்கும் அரசியல் கட்சிகளை நம்பி, மக்கள் வாக்களித்து வீணாகாதீர்கள். நன்றாக பேசுகிறார்கள் என்று ஏமாந்தால், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தவுடன், மக்களை ஏறி, மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலைமை, இது ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து, நகரம் வரை இதே நிலைமைதான்.

அதுமட்டுமல்ல,

தினசரி பத்திரிகைகளுக்கு ஒரு சட்டம் ,மாத பத்திரிகைகளுக்கு ஒரு சட்டம், வார பத்திரிகைகளுக்கு ,மாதம் இருமுறைகளுக்கு ஒரு சட்டம் இப்படி ஒவ்வொன்றும் கொடுக்கக்கூடிய செய்தி மக்களுக்கு என்ன பயன்? ஒரு தினசரி பத்திரிகை பத்தாயிரம் பிரதிகள்  அச்சடித்து வெளிவர வேண்டும். அப்படி வெளிவரும் பத்திரிகைகள் எவ்வளவு விற்பனை ?எவ்வளவு ரிட்டன்ஸ்?இந்த கணக்கு எத்தனை பத்திரிகைகள் உண்மையான ரிப்போர்ட் கொடுக்கிறது ?

இதற்கெல்லாம் அக்ரி டேசன் கார்டு கொடுத்து ,மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். இப்போது பத்திரிகைகள் விற்பனையே இல்லை. ஏதோ அரசியல் கட்சிகளில் 50 வயதை கடந்தவர்கள், ஒரு பத்து சதவீதம் டீக்கடைகளில் வாங்கி படிக்கிறார்கள். இதுதான் அந்த பெரிய பத்திரிகைகளின் சர்குலேஷன். இப்போது எல்லாமே இணையதளம் ஆகிவிட்டது. இணையதளத்தில் அந்த பத்திரிகைகளின் பார்வையாளர்களை வைத்துதான் சர்குலேஷன் முடிவு செய்ய வேண்டும் .

அது தினசரி, மாத இதழ், வார இதழ், மாதம் இருமுறை என்ற விதிமுறைளுக்கு ஒரு சட்டம் இருக்கக்கூடாது. மேலும் ,இப்படிப்பட்ட பத்திரிகைகளில் வெளி வருகின்ற அந்த செய்தி, அதன் தரம் ,அது அரசியல் கட்சிகளை சார்ந்ததா?

வியாபாரநோக்கம் சார்ந்ததா ?அல்லது சமூக நோக்கம் சந்ததா? இந்த ஆய்வுகளுக்கு பிறகு தான் ,அந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் அக்ரி டேசன் கார்டு எல்லாவற்றையும் தர வேண்டும். இதுதான் தற்போது மாற்றப்பட வேண்டிய பத்திரிகைகளின் G O. இது மாற்றத வரை போலி பத்திரிகைகளும், போலி பத்திரிகையாளர்களும், சர்குலேஷன் என்ற விதிமுறையும், தினசரி பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் அரசின் அக்ரிடேசன் கார்டு மற்றும் சலுகை விளம்பரங்களை பயன்படுத்தி, கோடிக்கணக்கில் மக்கள் என் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் தற்போது பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் 30 ஆண்டுகளாக என்னை போன்ற பத்திரிக்கை பற்றி ஆய்வு செய்யக்கூடிய தகுதி இருந்தும், எங்களை கூட நலவாரத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு அக்ரிடேசன் கார்டு வேண்டுமாம். பொதுப் பிரச்சினைகளுக்காக எத்தனை வழக்குகள் ? பார்த்திருப்போம் .எவ்வளவு போராட்டங்களை ? எவ்வளவு கஷ்டங்களை  ?இந்த துறையில் அனுபவித்து இருப்போம். ஆனால், அதற்கான மதிப்பு, மரியாதை இந்தத் துறையில் இருக்கிறதா ? இதில் தற்போது நடந்த இந்த கமிட்டி கூட்டத்தில் டிரைவர் ,ஓ. ஏ, போன்றவர்களுக்கு அதாவது கார்ப்பரேட் பத்திரிக்கையில் வேலை செய்யக்கூடியவர்களுக்கு ,நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்களாம்.ஒரு சிலர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி என்றால்,

 உண்மையான பத்திரிகையாளர்களுக்கு நல வாரியத்தில் உறுப்பினராக தகுதி இல்லையா? அதுவும், தற்போது கூட எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் இருந்தால் தான், நாங்கள் எங்களுக்கான கோரிக்கைகளை அங்கு வைக்க முடியும் என்ற கருத்தை அதிகாரிகளிடம் சொன்னேன் .ஆனால், அங்கும் சர்குலேஷன். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான விதிமுறை? சர்குலேஷன் என்பது பணத்தை அடிப்படையாகக் கொண்டது. பத்திரிக்கை என்பது அறிவை அடிப்படையாகக் கொண்டது.

 இது இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத பத்திரிக்கை துறை, எப்படி பத்திரிக்கை துறையாக செயல்படும்? இது சுயநலத்திற்கான துறையாக மாறிவிட்டது .ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்ய வேண்டிய எடுப்பு துறையாக மாறிவிட்டது. இதில் நான் பெரிய பத்திரிக்கை, நான்தான் அதில் முதலாளி . இது என்ன அரசியல் கட்சியா ? அதிக கூட்டம், அதிக பக்கம் ,இதையெல்லாம் வைத்து அல்லது உங்களுடைய பிளாக் மணியில் கொண்டு வந்து விட்டு, பெரிய பத்திரிக்கை சரி, அப்படியே இந்த பெரிய பத்திரிகைகள் நாட்டில் செய்த சாதனைகள் என்ன?

 இவர்கள் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஜால்ரா போட்டு  ,சர்குலேஷன் என்ற தவறான விதிமுறையை பயன்படுத்தி ,இதுதான் பத்திரிக்கை என்று கடைசி  வரை போலியான அரசியல் பிம்பத்தால்  ,பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.இதற்கு ஒரே தீர்வு இந்த சட்டங்களை மாற்றாமல், பத்திரிக்கை துறை மக்களுக்கான சேவையை செய்ய முடியாது .அது ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ,மறைமுக அரசியலை மையப்படுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 இதற்கு ஒரே தீர்வு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா போன்ற தலைவர்கள், இந்த சட்டங்களை மாற்றினால் தான், மாற்ற முடியும். இல்லையென்றால், நீதிமன்றம் தான் இதற்கு தீர்வு காண முடியும் . அதுவரை இந்த பத்திரிகைகளின் தலையெழுத்து மாறாது .அதனால், இப் பிரச்சனையை நாட்டுக்காக எவ்வளவோ பொதுநல நோக்கத்துடன் செய்துள்ள பிரதமர் மோடி, இதை தயவு செய்து செய்ய வேண்டும் என்பது சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

 மக்களுக்கு இந்த தினசரி பத்திரிகைகள்  சர்குலேஷன் மூலம் தமிழ்நாட்டில் மக்களுக்கு என்ன மாற்றத்தை கொண்டு வந்தது?  என்ன விழிப்புணர்வை கொண்டு வந்தது ? அரசியல் விழிப்புணர்வா?  அல்லது சமூக விழிப்புணர்வா ? எது என்பதற்கு விளக்கம் தர முடியுமா?  அல்லது நிர்வாக சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளதா?  இல்லை, ஊழலுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதா?  எந்த தாக்கத்தையும், மக்களிடம் இந்த பத்திரிகைகள் ஏற்படுத்தவில்லை.

தேச நலன், சமூக நலன் ,கருதி பிரதமர் மோடி தயவு செய்து பத்திரிக்கை துறையில் மாற்றம் கொண்டு வர சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *