
மோடி அரசு! கார்ப்பரேட்டு பத்திரிக்கைகளை உயர்த்தும் அரசா? சாமானிய ஏழை எளிய மக்களின் பத்திரிகைகளைஉயர்த்தும் அரசா?
கார்ப்பரேட்டுக்காக இவர் செய்யக்கூடிய மிகப்பெரிய சாதகமான வேலை! பிஜேபிக்கு பின்னடைவு தான். இதுதான் தென் மாநிலங்களில் ,பிஜேபி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. மேலும்,இந்த தோல்விக்கான காரணம் என்ன? என்று கூட இதுவரை பிஜேபி ஆய்வு செய்ததில்லை. தவிர,

பிஜேபி மக்கள் நலனுக்காக இருக்கிறதா? இல்லை, கார்ப்பரேட் பக்கம் இருக்கிறதா? சாமானியன் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு இதுவரை மோடி செய்தது என்ன?
மேலும்,இந்த மத்திய அரசின் செய்தித் துறை செய்ததென்ன? இந்த அதிகாரிகளுக்கு என்ன தெரியும்? செய்தித் துறையில் இவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய ஊழலை இன்று வரை மோடி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

மேலும், செய்தித்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகம் படித்தவர் என்று சொல்லிக் கொள்ளும் இவர், இந்த ஊழலை பற்றி ஏன்? இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
எதற்காக ஏஜென்ட்கள் மூலம் பத்திரிகைகளுக்கு, விளம்பரங்கள் கொடுக்கிறார்கள்? மேலும், தமிழ்நாட்டில் ஒரு ஒதவாத செய்தித்துறை மத்திய இணை அமைச்சர் எல் .முருகனை ,செய்தி துறைக்கு போட்டு, இதுவரை செய்து துறையில் இவர் எடுத்த நடவடிக்கை என்ன? இவரும் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் ஏஜெண்டா?

மேலும், ஜாதிக்காக ஒருவருக்கு மந்திரி பதவியை கொடுத்தால்! அவர் எப்படி செய்தித் துறையின் மந்திரிகாக செயல்படுவார்? மேலும், பத்திரிக்கை துறை பற்றி அர்த்தம் தெரியாமல், மத்திய செய்தி துறை அமைச்சராக போட்டிருப்பது பிஜேபி அரசின் ஓட்டு அரசியலா?

மேலும்,இரண்டு முறை இவரை அதே பதவியில், உட்கார வைத்து, இவரால் பத்திரிக்கை துறைக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு டெம்மி அமைச்சராக எதற்கு? இவருக்கு மந்திரி பதவி? பிஜேபி கொடுத்துள்ளது? என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய கேள்வி?
அது மட்டுமல்ல,எதற்கு எங்களை போன்ற சமூக நலன் பத்திரிக்கைக்கு RNI கொடுத்தீர்கள்? இது மக்களுக்காக நடத்தப்படும் பத்திரிகைகளுக்காக என்று கொடுத்தீர்களா? இல்லை, உங்களுக்கு கணக்கு காட்ட பத்திரிக்கைகள் வேண்டுமென்று கொடுத்தீர்களா? இல்லை,
அரசியல் அதிகாரத்தை கார்ப்பரேட் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அழிக்க கொண்டு வந்த ,சர்குலேஷன் சட்டம் சமூகநலன் பத்திரிகைகளுக்கு எப்படி அது பொருந்தும்? மேலும்,பிளாக் மணி வைத்து பத்திரிக்கை நடத்தினால் ,இந்த சட்டத்தின் மூலம் பத்திரிக்கை நடத்தலாம்.

ஆனால், மக்களுக்காக, சமூகத்திற்காக ,ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காக நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு எப்படி இந்த சட்டம் பொருந்தும்? மேலும், மக்களின் வரிபணம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சொந்தமா? அவர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் அரசியல் அதிகாரம் ஏன்? இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு! முக்கியத்துவம் கொடுக்கவில்லை?

மேலும்,எங்களுக்கெல்லாம் எதுவும் கொடுக்கக் கூடாது, என்பதற்காக போடப்பட்ட போலியான ஒரு சர்குலேஷன் சட்டத்தை வைத்து சமூக நலன் பத்திரிகைகளை ஏமாற்றவா?
இதற்கெல்லாம் மத்திய அரசின் செய்தித்துறை அதிகாரிகள் பதில் சொல்ல முடியுமா? இல்லை, மத்திய செய்தித்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இதற்கு பதில் சொல்ல முடியுமா?

மேலும், மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிக்கை, தொடர்ந்து மத்திய மாநில அரசின் செய்தி தறைகள் செய்திகளுக்கு முக்கியத்துவம் தராமல், சர்குலேஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது, மக்களுக்கு உண்மையான அரசியல் தெரியாமல் ஏமாறுகிறார்கள். வியாபார நோக்கமும் அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகை நோக்கமும் எப்படி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும்?

இது பற்றி மத்திய மாநில அரசின் செய்தித்துறை அமைச்சகம் என்றாவது ஆய்வு செய்ததுண்டா? மேலும்,இது செய்தி துறை அமைச்சகத்தின் பார்வைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் கோரிக்கை.