ஆன்மீகவாதி மகாவிஷ்ணு செய்த தவறு என்ன ? பாவ புண்ணியத்தின் கணக்கு பற்றி பேசியது தவறா? அரசியலில் தவறே இருப்பதால் அமைச்சர்களுக்கு அது பற்றி பயமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram

மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச அழைத்தது, அரசு பள்ளியின் ஆசிரியர்கள். அவர்கள் அழைத்ததும் தவறு இல்லை. மகாவிஷ்ணு பேசியதும் தவறு இல்லை. இதற்கு இடையில் பேசிய ஊனமுற்ற ஆசிரியர் சங்கர் அரசியலாக்கி விட்டார். இது அரசியல் ஆவது தெரியாமலே திமுக அரசு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், திமுகவிற்கு தான் பாதிப்பு. இது ஒரு சிறிய பிரச்சனை. இது தமிழக மக்கள் பேசும் அளவிற்கு ஆக்கியது திமுக ஆட்சியின் முட்டாள் தனம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், இன்று தமிழக மக்கள் பள்ளியில் எவ்வளவு தவறுகள் நடக்கிறது? அதைப் பற்றி எல்லாம் பேசாமல், ஒரு ஆன்மீக கருத்தை சொன்னதற்கு இங்கே சட்டத்தில் இடமில்லை. அது மதம் சம்பந்தப்பட்டது .இது எல்லாம் அரசியல் ஆக்கப்பட்ட கருத்து. இது மதம் சம்பந்தப்பட்ட கருத்து கூட அல்ல, மனிதன் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட கருத்து . ஒருவர் ஊனமுற்றவராக இருக்கும்போது, அவரை என்னவென்று சொல்வார்கள்? நன்றாக நடக்கிறார்? நன்றாக கை, கால்களை வைத்திருக்கிறார் என்று பேச முடியும்? இருப்பதை சொன்னது என்ன தவறு? உங்களால் ஓட முடியுமா? இல்லை மற்றவர்கள் போல் செயல்பட முடியுமா? அங்கே உறுப்பு ஊனமுற்றதனால் தான், ஊனமுற்றவர்கள் என்று சொல்லி இருக்கிறார். 

அவர் என்ன ஊனமுற்றவர்களை அவமானப்படுத்துவதற்காக வந்தாரா? ஆன்மீக விஷயங்களை பேசுவதற்கு மதம் ஒரு தடையல்ல .எல்லா மதத்திலும் ஆன்மிகம் இருக்கிறது. இதே பைபிளில் பாவ புண்ணியத்தை பற்றி பேசவில்லையா? குர்ஆனில் பாவ புண்ணியத்தை பற்றி பேசவில்லையா? இங்கே இவர்கள் பேசினால் அது தவறு. அவர்கள் பேசினால் அது சரி. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அரசு தவறு செய்கிறது. நியாயம் ஒரு சார்பாக இருக்கக் கூடாது .

பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களை வைத்து ஊடகத்தில் பேச வைப்பது, அதே போல் ஊனமுற்ற சங்கங்களை வைத்து புகார் அளிப்பது, இது எல்லாம் அரசியலாக்குகின்ற வேலை. அதே வேலை மற்ற கட்சிகளில் இதில் உள்ள ஊனமுற்ற சங்கங்கள் மற்றொருபுறம் புகார் அளித்தால் அப்போது இந்த அரசியல் எங்கே போய் நிற்கும் ?என்று திமுக தான் இதை உணர்ந்து சரி செய்து கொள்ள வேண்டும் .

அதனால், பிரச்சனை பெரிதாக்காமல் அதை சிறிதாகவே முடித்துக் கொள்வது திமுகவிற்கு நல்லது. இதன் ஒவ்வொரு விஷயமும் இந்து சமுதாயத்திடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு பக்கபலமாக பிஜேபி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதனால், மகாவிஷ்ணுவை உடனடியாக அவரை விடுவித்து வீட்டுக்கு அனுப்புவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *