நாட்டில் அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பு, அடாவடித்தனம், ரௌடிசம், இதையெல்லாம் மக்கள் தட்டி கேட்காமல் இருப்பதால் தான், இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறுகளும், தொந்தரவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலை ஏன்? ஒரு அரசியல் கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சி. அதுவே பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்தில் கட்சி கொடி நடுவது, அந்த இடத்தில் அலுவலகம் கட்டிக் கொள்வது, இது எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சிகள் இதுபோல செய்யுமா ?
https://youtu.be/gj1XjZxq3w0?t=21
அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் இது போன்ற ஆக்கிரமிப்பு அராஜகம் இருக்கிறது என்றால், மாவட்ட தலைநகரங்கள், பேரூராட்சி மற்றும் கிராமங்களில் எந்த அளவுக்கு இதன் ஆக்கிரமிப்பும், அராஜகமும் இருக்கும்? என்பது மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் எந்த அளவுக்கு சுயநலவாதிகளாகவும், பொதுநலம் பற்றி தெரியாமல் இருக்கிறார்களா? அல்லது அரசியல் என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கிறார்களா? அல்லது எதுவுமே தெரியாமல் வென்றதைத் தின்று, வந்தவரை பேசி ,வாழ்ந்து விட்டு போவதுதான் வாழ்க்கையா? அந்த வாழ்க்கையில் அர்த்தம் இல்லை.
வாழ்க்கை என்பது சுயநலமும், பொது நலமும் கலந்தது தான். ஆனால், பொது சொத்துக்களை தனது ஆக்கிக் கொள்வது அல்லது தன் கட்சிக்கு சொந்தம் ஆக்கிக் கொள்வது தவறானது. தவறு பற்றிய கவலைப்படாமல், அதிகாரம், ஆட்சி இவை எல்லாம் நிலையானது அல்ல. தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் ஆட்சிக்கு வந்து கொண்டு தான் இருக்கும். போய்க்கொண்டு தான் இருக்கும். அதே போல் எத்தனையோ பேர் பதவிக்கு வருவார்கள். போவார்கள். அதுவும் நிலையானதல்ல.
ஆனால், இறைவன் கொடுத்த வேலையை அவரவர் எப்படி செய்து? எப்படி வாழ்ந்து விட்டுப் போனார்கள்? என்பதுதான் முக்கியம். அதனால் தான் இன்றுவரை நமது முன்னோர்களின் அரசியல் வாழ்க்கை அழியாமல் இருக்கிறது. இவையெல்லாம் அதுபோல் இருக்குமா? அவரவர் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கத்திக் கொண்டு இருப்பார்களே தவிர, மக்கள் அதை மறந்து விடுகிறார்கள் .மறந்துவிட்ட மக்களை இந்த கட்சிக்காரர்கள் சொல்லி அல்லது கத்தி ஞாபகம் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதுவும் மக்கள் மறந்து விடுகிறார்கள்.
அரசியலுக்கு வருவது மக்கள் சொத்துக்களையும், பொது சொத்துக்களையும், கொள்ளை அடிப்பதற்கு இல்லை. அதற்காக மக்கள் அவர்களுக்கு வாக்கு அளிக்கவில்லை. ஆனால், இவர்கள் கொடுக்கும் காசுக்காக அவர்கள் வாக்களித்தார்கள் என்பது இவர்களுடைய தீர்மானம். அப்படி வாக்களிப்பவர்களும் குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறார்கள். ஆனால், வாக்குரிமையை செலுத்தும் மக்கள், இவர்கள் வீட்டுக்கு கொள்ளை அடித்துக் கொள்ள ,அவர்கள் வாக்கு செலுத்தவில்லை.
மேலும், அரசியலில் கொள்ளை அடித்து வாழ்ந்தாலும், அந்த பணத்தை போகும்போது அதைக் கொண்டு போக முடியாது. பார்த்துவிட்டு தான் போக வேண்டும். ஆனால், நீ செய்த ஒரு செயல்பாடுகள் அது நல்லதாக இருந்தால் இறந்த பிறகும் மக்கள் பேசுவார்கள். இருக்கும் போதும் பேசுவார்கள். அதைப் பற்றி எல்லாம் இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் நினைத்துக் கூட பார்க்காமல், இப்போது மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் பேசுவதை தான் அரசியல் என்கிறார்கள். அதுதான் அவர்களுடைய நடிப்பின் உச்சம்.
மக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டு ,கொள்ளையடிப்பதும் ,நல்லவர்களாக நடிப்பதும், மக்கள் இது போன்று ஏமாளிகளாக இல்லாமல், யாரோ ஒருவர் தட்டி கேட்டது போன்று, ஊருக்கு 100 பேர் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அந்த நூறு, ஆயிரம், லட்சம் என்று பெருகி, இந்த அரசியல் கட்சிகளின் அராஜகம் தட்டி கேட்கும் நிலைமைக்கு வந்துவிடும்.
அதனால், மக்கள் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் .அரசியல் தான் நம் வாழ்க்கை. நம் வாழ்க்கை தான் அரசியல். அந்த அரசியலை நீங்கள் தெரியாமல் வாழ்வது, உங்கள் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள முடியாமல் ஏமாந்த போகிறீர்கள். ஒவ்வொருவரும் சிந்திப்பது, இதைப் பற்றி தெரிந்து கொள்வது ,மக்களின் முக்கிய கடமை. ஆளும் கட்சியும், முதலமைச்சரையும், அவர்களின் தவறை சுட்டிக்காட்டி, வீடியோ வெளியிட்ட அவரின் கடமை உணர்வுக்கு ,சமூக அக்கறை உள்ளவர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.