போலி பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களால் சமூகத்தில் பத்திரிகையின் மதிப்பு ,மரியாதை ,கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ,சோசியல் மீடியா மற்றும் கார்ப்பரேட் பத்திரிக்கை அரசியல் என பல பிரச்சினைகளைக் கடந்து, சமூக பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் பல போராட்டங்களுக்கு இடையே பத்திரிகை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறத்தில் அரசியல் கட்சிகள், ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்தக் கட்சியினர் கட்சி சார்ந்த முத்திரை குத்துகிறார்கள். ஆனால், ஒரு அரசியல் கட்சி எப்படி செயல்பட வேண்டும்? அதற்கான அவர்களுடைய தகுதி என்ன? செயல்பாடுகள் என்ன? என்ற எந்த ஒரு வரைமுறையும் ,வகுக்கப்படாமல் அரசியல் கட்சிகள் இருந்து வருகிறது. அவர்களுடைய தகுதி ரவுடிசமா? பொது சொத்துக்களை கொள்ளையடிப்பதா ? அல்லது பதவி அதிகாரத்தில் ஊழல் செய்வதா?அல்லது சமூக நோக்கமா? எது என்று அரசியல் கட்சிகள் மக்களிடம் ஊர்ஜிதப்படுத்துங்கள்.மேலும்,
மேடைப்பேச்சுக்கும், ஊடகங்களில் வெளியிடும் உங்கள் கருத்துக்கும் ,அல்லது நீங்கள் ஊடகங்களில் பேசுகின்ற பேச்சுக்கும், நடைமுறைக்கும் அர்த்தமில்லாமல் இருக்கிறது .அதை எல்லாம் மக்களிடம் தெளிவு படுத்துங்கள். அரசியல் என்பது வாய் வார்த்தைகளால் பேசிவிட்டு போவது அல்ல. அரசியல் மேடைகளில் ஒரு கட்சியை பற்றி ,இன்னொரு கட்சி தரக் குறைவாகவோ ,அவர்களுடைய குற்றங்களை குறைகளை சொல்லி, நீங்கள் நிரபராதி, நல்லவர்களாக காட்டிக் கொள்வது அரசியல் அல்ல. அதையெல்லாம் கார்ப்பரேட் பத்திரிகைகள் தங்கள் பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டு, மக்களிடம் பெரிய பத்திரிகை என்று காட்டிக் கொண்டு மக்களை முட்டாளாக்கி ஏமாற்றுவது பத்திரிகை வேலை அல்ல.
மேலும், பத்திரிக்கை என்பது சமூக நலனுக்காகவும், தேச நலனுக்காகவும், முக்கியத்துவமானது. அதை வியாபார நோக்கமாகவும், சுயநல நோக்கமாகவும், ஆட்சியாளர்கள் ,அரசியல் கட்சிகள் ,அதிகாரிகள் பயன்படுத்தி வருவதை இல்லை என்று மறுக்க முடியாது. எனவே,இதை எல்லாம் அரசியல் கட்சிகள் மக்களிடம் தெளிவு படுத்துங்கள்.
தவிர, நாட்டில் ஒரு அரசியல் கட்சி செய்த ஊழல் அல்லது தவறுகளை எதிர்க்கட்சியோ அல்லது மற்ற அரசியல் கட்சியோ அதை சுட்டிக்காட்டி உண்மையான தகவல்களை வெளியிட்டால், அது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் என்று அந்த கட்சி சார்ந்த அல்லது அதற்கு ஆதரவான பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகிறது . இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை நடத்துபவர்கள், அதன் நிருபர்கள் தங்களை பத்திரிக்கையாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்.
எப்படி அரசியலில் ஊழல்வாதிகளும் ,கிரிமினல்களும் தங்களை எல்லாம் தியாகிகள் போல அறிக்கை விட்டுக் கொண்டு, ஊடகங்களில் பேசிக்கொண்டு உத்தமர்களாக வலம் பெறுவது போல, இந்த பத்திரிகைகள் சமூகத்தில் பத்திரிக்கை அன்று சொல்லிக் கொள்கிறார்கள். இதை தான் மக்கள் அதிகாரம் இன்றைய பத்திரிகைகளை தரம் பிரிக்க வேண்டும் என்று செய்தித் துறையை வலியுறுத்துகிறது. அப்போது தான் பத்திரிகையின் உண்மை வெளிச்சம் ,பொது மக்களுக்கு தெரியும். இதை செய்தித்துறை மட்டுமே செய்யக்கூடாது. நீதித்துறையும் சேர்ந்து செய்ய வேண்டும் .அதுதான் அதற்கான அங்கீகாரம்.
மேலும், சர்குலேஷன் என்ற தவறான காலாவதியான ஓட்டை சட்டம், மத்திய அரசு 50 ஆண்டு காலமாக கார்ப்பரேட் பத்திரிக்கை கம்பெனிகளின் வளர்ச்சிக்காக போடப்பட்ட ஒரு சட்டம். அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தவிர ,அம்பேத்கரின் ஓட்டை சட்டங்கள், இக்கால தலைமுறைக்கு அல்லது தற்போதைய மக்களின் மன நிலைக்கு ஏற்புடையதல்ல.
நாட்டில் கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கூட ,கிரிமினலாக இருக்கிறார்கள். சுயநலமாக இருக்கிறார்கள். ஆனால், அம்பேத்கர் இந்த சட்டங்களை போடும்போது, மக்கள் அவ்வாறு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால், இந்த ஓட்டை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஆட்சியாளர்களும், மத்திய- மாநில செய்தி துறை உயர் அதிகாரிகளும், பதில் சொல்ல முடியுமா? அதனால் இச்சட்டத்தை மத்திய- மாநில அரசுகள் ரத்து செய்து நீக்க வேண்டும்.
மேலும்,இந்த சட்டம் கொண்டு வரும்போது, ஒரு மாநிலத்தில் சுமார் 4 அல்லது 5 பத்திரிகைகள் தான் இருந்தது. தற்போது ஒரு மாநிலத்திற்கு சுமார் 50,000 பத்திரிகைகளுக்கு மேல் இருக்கின்றன. இதில் பத்திரிகை என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கும் சமூக நலன் பத்திரிகைகள் 100 ஐந்து சதவீதம் தேருமா? என்பதே சந்தேகம். அதனால், அந்த குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூக நலன் பத்திரிகைகளை மத்திய- மாநில அரசின் செய்தித்துறை பாதுகாக்க வேண்டும். அதன் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
நாட்டில் எல்லாமே வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பத்திரிகைகள் 100% இருக்கிறது. இங்கே சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் மிக மிக குறைவு .அதனால், இந்த பத்திரிகைகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் அத்தனை சலுகை, விளம்பரங்கள் ,அரசின் அடையாள அட்டை, பஸ் பாஸ் எல்லாம் வழங்க வேண்டும். பத்திரிகை என்பது சமூக நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே ஒழிய, அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டிய அவசியம் இல்லை.
அப்படி பட்ட பத்திரிகைகள், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் பத்திரிகைகளாக அங்கீகரிக்க வேண்டும் .அரசியல் கட்சி செய்திகளை போட்டுக்கொண்டு, ஏதோ கணக்கிற்கு நான்கு அரசு செய்திகளை போட்டுக்கொண்டு, அதுவும் பஸ் பாஸ் ,அதுவும் விளம்பரம் ,அதற்கும் சலுகை, அவர்களும் பத்திரிகையாளர்கள், இது எல்லாம் மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டு ,தொடர்ந்து மக்களை ஏமாற்றி வரும் சமூக அவலங்கள்.
இது தவிர, சில பத்திரிகைகளில் இருந்து செய்திகளை காப்பியடித்து, அதை போட்டுக்கொண்டு, அதுவும் பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்கிறார்கள். மேலும், பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் ,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் சமூகத்திற்கு உதவாத செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும் தங்களை சமூகத்தில் பத்திரிக்கையாளர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். இதனால்தான் பத்திரிகைகளின் மீது உள்ள மதிப்பு, மரியாதை பொதுமக்களிடையே குறைந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்றால், செய்தித் துறை நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் குழு அமைத்து, இந்த பத்திரிகைகளின் தரம் பிரித்து அதனுடைய அங்கீகாரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அப்போது எது போலி? எது உண்மை ? என்பது தெரியவரும். இது தவிர, நாட்டில் தவறான செய்திகளை பரப்புவது ,குற்றவாளிகளை அல்லது ஊழல்வாதிகளை தங்கள் பத்திரிகைகளில் முன்னிலைப்படுத்துவது ,மேலும் ஒரு கட்சியைப் பற்றி ,இன்னொரு கட்சி தவறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு , மக்களை ஏமாற்றி முட்டாளாக்குவது, கருத்துரிமை அல்லது பத்திரிக்கை சுதந்திரம் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.
இது தவிர, மக்களுக்கு பத்திரிக்கை என்றால் எதுவும் தெரியாது. அதனால் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்வது, அல்லது தொலைக்காட்சிகளில் விவாத மேடை என்ற பெயரில் பேசிக் கொண்டிருப்பது, மக்களை முட்டாளாக்கும் வேலை. அதனால், பத்திரிகைகளின் உண்மை தன்மை, வெளிப்படுத்தத் தன்மை, முக்கிய செய்திகள், அதனால் மக்களுக்கு என்ன நன்மை ? இதன் அடிப்படையில் மத்திய மாநில செய்தி துறை நீதிபதிகளோடு இணைந்து பத்திரிகையின் தரம் பிரிக்க வேண்டும் .
மேலும், அந்த பத்திரிகைகள் சமூக கடமையாற்ற வெளியிட்ட செய்திகள், தேச நலனுக்காக வெளியிட்ட செய்திகள் என்ன? என்பதை தரம் பிரியுங்கள். அப்போது உண்மை அதிகாரிகளுக்கும், நீதிபதிகளுக்கும் புரிந்துவிடும். இது மட்டுமல்ல, சில கார்ப்பரேட்பத்திரிகைகள் தேச நலனுக்கு, சமூக நலனுக்கு, எதிராக செயல்படுகிறது. இதில் அந்நிய சக்திகளின் தலையீடு மறைமுகமாக இருக்கலாம். இவர்கள் எதன் பின்னணியில் செயல்படுகிறார்கள்? இவர்களை யார் இயக்குகிறார்கள் என்ற கேள்வி? நாட்டின் பாதுகாப்புக்கு, சமூக பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என்று சமீபத்தில் டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சம்பவம் எடுத்துக்காட்டு.
இது தவிர, சில பத்திரிகைகள் உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் வெளியிடும் போது, அந்த பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் அரசியல் கட்சி ரவுடிகளால் தாக்கப்படுகிறார்கள். மேலும், ஆட்சியாளர்களின் பின்னணியில் காவல்துறையினரால் பொய் வழக்கு போடப்பட்டு வருகிறார்கள். இதையெல்லாம் தவிர்க்க பத்திரிகைகளுக்கு கடுமையான பாதுகாப்பு சட்டம் போடப்பட வேண்டும்.
மேலும்,இதையெல்லாம் மீறி பத்திரிகை என்றால், எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி பத்திரிகை இருக்க வேண்டும். ஆனால், இன்று எத்தனையோ, பத்திரிகைகள் பார்ப்பதற்கும் ,பத்திரிகை என்று காட்டுவதற்கும், தான் ஒரு பத்திரிக்கையாளர் என்று காட்டிக் கொள்வதற்கும் தான் ,பத்திரிக்கைகள் இருக்கிறது .தவிர, கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் லேபிள் காட்டி, பந்தா பண்ணுவதால் ,எந்த பிரயோஜனமும் இல்லை .இவர்கள் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டு, மக்களை முட்டாளாக்கிக் கொண்டு, மக்களின் வரிப்பணத்தில் லாபம் அடைவதை எப்படி பெரிய பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளலாம்? அதனால்தான், இன்று பத்திரிகைகளின் நடுநிலை என்பது கேள்விக்குறியாகி பொதுமக்கள் மத்தியில் பத்திரிகைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால்,சமூகத்தில் பத்திரிகைகளின் மீதுள்ள நம்பிக்கை பொதுமக்களுக்கு குறைந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்றால், மத்திய- மாநில அரசுகள், நீதித்துறையுடன் சேர்ந்து பத்திரிக்கைகளை தரம் பிரிக்க வேண்டும். இது தவிர, சில பத்திரிகைகள் குற்றவாளிகளுக்கு துணை போவதும், ஊழல்வாதிகளுக்கு துணை போவதும், அப்படிப்பட்டவர்களிடம் பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதும், மேலும் ,சமூகத்திற்கு பயன்படாத செய்திகளை போட்டு ,மக்களை குழப்பிக் கொண்டு, இதுவும் பத்திரிகை என்று காட்டிக் கொண்டு உலா வருவதிலும், இவர்கள் எல்லாம் சேர்ந்து சங்கத்தை அமைத்து ,போராடிக் கொண்டிருப்பதிலும் எந்த நன்மையும் இல்லை .
அதே போல், கார்ப்பரேட் பத்திரிகைகளில் வேலை செய்யக்கூடிய செய்தியாளர்கள், பத்திரிகையாசிரியர்கள், முதலாளிகள், இவர்களெல்லாம் சேர்ந்து, சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளை அங்கீகரிக்கும் குழுவில் முக்கியத்துவமாக இருப்பது தவறானது. இந்தக் குழுவில், அரசு அதிகாரிகள், நீதிபதிகள், பத்திரிகைகளை ஆய்வு செய்து டாக்டரேட் (Phd) வாங்கியவர்கள், மட்டுமே இடம்பெற வேண்டும் .
ஒரு குறிப்பிட்ட பத்திரிகையாளர்களையும், பத்திரிகை முதலாளிகளையும், கொண்ட குழுவாக இருந்தால் மற்ற பத்திரிகைகளின் நிலைமை என்னவாகும்? மேலும், அதற்கு அவர்களுக்கு தகுதி உள்ளதா? அல்லது அதற்கு தகுதியான பத்திரிகைகளா? எதுவுமே இல்லை. அரசியல், அதிகாரத்தால் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு, அவர்கள் தான் பத்திரிக்கை என்று சொன்னால் எப்படி அவை சமூகத்திற்கான பத்திரிகை யாகும்?
அதனால்தான், இன்று பத்திரிக்கை துறை தவரான நோக்கத்துடனும், அரசியல் கட்சிகளின் ஆதரவுடனும் செயல்படுகிறது. இதை தாண்டி தேசத்துரோக வேலைகளையும் ,கிரிமினல்களுக்கு துணை போகும் வேலைகளையும், ஊழல்வாதிகளுக்கு துணை போகும் வேலைகளையும், பத்திரிகைகள் முன்னிலைப்படுத்துகின்றன. இவையெல்லாம் சர்குலேஷன் என்ற ஒரு தவறான ஓட்டை சட்டமும், காலாவதியான சட்டதால்தான், இன்றைய கார்ப்பரேட் பத்திரிகைகள் வளர்ச்சி அடைந்து ,மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் இருந்து வருகிறது.
இதற்கெல்லாம் மக்களின் வரிபணம் கோடிக்கணக்கில் வீணடிப்பது மிகவும் வீணானது என்பதை மத்திய மாநில அரசின் செய்தி துறை அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகள்,நீதிபதிகள் மற்றும் பொதுமக்கள் புரிந்து கொண்டால் சரி.