தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சிகளை அமைத்து கனிமவளத் துறையை சுரண்டி பல மாவட்டங்களில் கோடிக்கணக்கில் ஆட்சியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்திருக்கிறார்கள்.
இவர்கள் சுற்றுச்சூழல் பற்றியோ, இயற்கை வளங்களை அழிப்பது பற்றியோ கவலைப்படுவதில்லை. இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் முதல் மாவட்ட உயர் அதிகாரிகள் வரை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பணம் மட்டுமே இவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது .
மேலும் இதன் விளைவு தொடர்ந்து ,இப்படியே இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் தமிழ்நாட்டில் அழித்துக் கொண்டிருந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பால் காற்று, சுத்தமான நீர், மண் இவை எல்லாம் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகி வந்துள்ளது .
அதனால் தான் இதை சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் தற்போது இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்கிறார்கள். மேலும் வண்டி வாகன புகை தொழிற்சாலைகள் புகை ரசாயன கழிவுகள் இவை எல்லாம் அவசியம் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
அதனால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருக்கும் ஆட்சியாளர்களை நம்பி மக்கள் ஏமாந்தது தான் தமிழக மக்கள் மிச்சம். இதை உடனடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான், இதற்கு ஒரு முக்கிய தீர்வு ஏற்படும் என்பது தமிழக மக்களின் முக்கிய கோரிக்கை.