இன்றைய அரசியல் கட்சியினர் ரவுடிசத்தை கையில் வைத்துக்கொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் பணம் வாங்கிக்கொண்டு இயற்கையை அலட்சியப்படுத்துகிறார்கள் சுற்றுச்சூழலை அலட்சியப்படுத்துகிறார்கள் பத்திரிகை செய்திகளை அலட்சியப்படுத்துகிறார்கள்.
இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் சமூக ஆர்வலர்கள், சமூக நல அமைப்புகள் களத்தில் இறங்கி போராட வேண்டும். ஏனென்றால் இயற்கையை அழித்துவிட்டு, மனிதன் வாழ முடியாது. இயற்கை இருந்தால்தான், சுற்றுச்சூழல் மனித வாழ்க்கையின் இன்றி அமையாதது. அதை அழித்துவிட்டு, இன்று எத்தனை கோடி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களும், சாதாரண கூலி வேலைக்கு செய்யும் மனிதர்கள் முதல் அனைவரும் பேசுவது, இந்த வெயிலின் தாக்கத்தை மட்டும் தான் .அந்த அளவிற்கு இந்த வெயிலின் தாக்கம் அதிகப்படியாக உள்ளது .
இது எதனால்? ஏன் ?என்று அவர்களுக்கு தெரியாது .இயற்கையை அழித்துவிட்டு, இயற்கை வளங்களை சுரண்டி விட்டு ,மலைகளை வெட்டி எடுத்துவிட்டு, ஆறுகள், ஏரிகளில் மண் வளம் ஆட்சியாளர்கள் சுரண்டி எடுத்துவிட்டு, மரங்களை வெட்டி எடுத்துவிட்டு, காடுகளை அழித்துவிட்டு, மனித வாழ்க்கை நிம்மதியாக வாழ முடியாது.
சுத்தமான காற்று, மண், நீர் இவை மூன்றும் பாதிக்கப்பட்டால், மனித வாழ்க்கை நரகம் தான். அதனால், இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதருக்கும், முக்கிய பங்கு உண்டு.இதை ஒவ்வொரு சாமானிய மனிதர்கள் முதல் சொகுசு வாழ்க்கை வாழ்கின்ற மனிதர்கள் வரை நிச்சயம் திரும்பி பார்க்கவைத்திருக்கிறது இன்றைய சுட்டெரிக்கும் சூரியனின் வெப்ப கதிர்கள்.
மேலும், மக்கள் வெளியில் சென்று வர முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை .அந்த நிலைமைக்கு இன்றைய வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதைப் பற்றி கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர்கள் அரசியல் கட்சி ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு, மணல் கொள்ளை, ஏரி மண், மலை மண், காடுகளை ,கருவேல மர ஊழல் ஆட்சியர் போன்றோருக்கு இயற்கையை பணத்திற்காக அழிக்கும் உண்மை புரிந்திருக்கும்.