இயற்கை என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒரு அற்புதம். அதை நாம் பாதுகாத்து வாழ்வோமானால் ,அதுவும் நம்மை பாதுகாத்து வாழ வைக்கும். ஆனால், அதை அழிக்க நினைக்கும் போது, அது நம்மை அழித்துவிடும். இது பற்றி மக்கள் அதிகாரத்தில், சில வருடங்களுக்கு முன் இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன் .
இப்போது உலக நாடுகள் அனைத்தும் ,சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நடக்கின்ற நிகழ்வுகள் மனித குல வாழ்விற்கு எதிராக உள்ளது. அதிலிருந்து நாம் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும்? என்ற கருத்து உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .இது இயற்கையின் மீது மனிதர்களின் தலையீடு அதிகரிப்பதும் ,அதன் காரணமாக பூமி ,அதன் அழிவிற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
இதனால், பல நாடுகளில் வானிலையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவதும், அதன் காரணமாக வெள்ளம், பூகம்பம், புயல், கடல் மட்ட உயர்வு, நிலச்சரிவு, நிலநடுக்கம், காட்டுத் தீ ,அண்டார்டிகாவில் பணி உருகுவது போன்ற இயற்கையின் சீற்றங்கள் உலக நாடுகளில் அதிகரிக்கின்றன. இதிலிருந்து மனித வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால், நாம் அனைவரும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தாக வேண்டும் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இதற்காக இப்ப பிரச்சனையை உலக அளவில், பருவநிலை மாற்றம் குறித்த கிளாஸ்கோ உச்சி மாநாட்டிற்கு பிறகு, எகிப்த்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா, பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் மிகவும் கவனிக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தவிர, கடந்த சில பத்தாண்டுகளில் உலகம் எதிர்பாராத பல பேரழிவுகளை சந்தித்துள்ளது. இதிலிருந்து இயற்கையை நாம் பாதுகாக்க தவறி உள்ளது என்பது எடுத்துக்காட்டுகிறது என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி .
இந்த பேரழிவிலிருந்து காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடி மூலம் இந்தியா, இப்ப பிரச்சனைக்கு ஒரு புதிய பாதையை உலகிற்கு காட்டியுள்ளது. அது என்ன என்றால், உலக நாடுகள் ஒன்றிணைந்து இயற்கையின் சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் இயற்கையை பாதுகாக்காவிட்டால், அது நம்மை அழித்து விடும் .அதற்காக இயற்கை சார்ந்த பொருட்களை நாம் உபயோகிப்பதன் மூலம் ,அதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதற்கு எதிரான பொருட்களை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம், நம் வாழ்க்கை இயற்கை ஒவ்வொரு நாளும் அழிவின் விளிம்பிற்குள் செல்வதை அது உணர்த்திக் கொண்டிருக்கும்.
எனவே மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்து வாழ்வதே சிறப்பு.மேலும் இயற்கையை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை என்ன? மின்னணு கழிவுகளை குறைப்பது, மரக்கன்றுகளை அதிக அளவில் நடுவது, இயற்கை மாசுபாட்டினை தடுப்பது, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்பாட்டில் இருந்து அகற்றுவது, ரசாயன உரத்திற்கும், பூச்சி கொல்லி மருந்துக்கும் பதிலாக, இயற்கை உரத்தை பயன்படுத்தி வேளாண்மை செய்ய வேண்டும்.
குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் நீர் நிலைகளில் கொட்டி நீரின் தூய்மையை கெடுப்பது, பொது இடங்களில் கொட்டி எரிப்பது, இவை அனைத்தும் இயற்கைக்கு எதிரான ஒன்று . மேலும் இன்றைய வண்டி, வாகனங்கள் அனைத்தும் அதிலிருந்து வெளி வருகின்ற புகை மண்டலம் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒன்று .அதேபோல் பல்வேறு கம்பெனிகளில் இருந்து வெளிவரும் புகைகள், மனிதனுக்கு பல்வேறு நோய்களை உண்டாக்க காரணமாக இருக்கிறது.
அது மட்டுமல்ல, ஆறு, குளம், ஏரி, மலைகள் போன்ற இயற்கையின் படைப்புகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.ஆனால், அரசியல் கட்சிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரிகள் அதை அழிப்பது தான் முக்கிய கடமையாக செயல்படுகிறார்கள். இதை தட்டி கேட்கின்ற சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவரிடம் போராட வேண்டி உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம், மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் போது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது இயற்கையின் பாதுகாப்பு விஷயத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய, சமூக அலுவலர்கள் கோரிக்கை.
எனவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து இயற்கையுடன் வாழ்வதே மனித வாழ்க்கைக்கும் உடல் நலத்திற்கும் மிகவும் அவசியமானது என்பதை புரிந்து கொண்டால் சரி
அருமை