இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் கிராம மக்கள் .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram

 திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதுார் ஊராட்சிக்குட்பட்ட நேரு நகரில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இறந்தவர்களை அடக்கம் செய்ய, இந்த பகுதி மக்களுக்கு, உப்பாற்றின் மறுகரையில் இடம் ஒதுக்கப்பட்டுஉள்ளது.உப்பாற்றில் தண்ணீர் செல்லாத போது, ஆற்றுக்குள் நடந்து, ஆற்றை கடந்து சென்று இறந்தவர் உடலை அடக்கம் செய்கின்றனர்.ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ள நீர் செல்லும் போது, இறந்தவர் உடலை மறு கரையில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், உப்பாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என, கிராம மக்கள், அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 

சமீபத்தில் பெய்த பலத்த மழையால், உப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், நேரு நகரில் அருணாசலம் என்ற, 98 வயது முதியவர் இறந்தார்.ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில், கழுத்தளவு ஆழத்தில் நடந்து, மயானத்துக்கு இறந்தவர் உடலை துாக்கிச் சென்றனர். மயானத்திற்கு செல்வதற்கு பாலம் அமைக்கக் கோரி, பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.உப்பாற்றின் குறுக்கே பாலம் அமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *