(கூட்டமாக போனால் மக்கள் கேள்வி கேட்க முடியாது என்றுதான் இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டத்தை கூட்டிக்கொண்டு மக்களை சந்திக்கிறார்களா?)
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்லும், அரசியல் கட்சியினரை ஆங்காங்கே கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் திமுக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஒரு அதிருப்தி தான் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.
மேலும், இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து ,இன்றைய தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் செய்திகளை மூடி மறைத்து வருகிறது. இது ஒரு சமூகத்திற்கு எதிரான குற்றம் தான். ஏனென்றால், மக்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படாமல், அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான், ஊடகங்களின் முக்கிய கடமை .ஆனால், அது மறைப்பது ஊடகங்களில் கடமை அல்ல.மேலும் ,நீங்கள் மறைத்தாலும் மக்கள் இனி ஏமாறு தயாராக இல்லை. அந்த அளவிற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்பதுதான் இந்த அரசியல் தளத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது. தவிர
திமுக சொன்ன எந்த ஒரு வாக்குறுதியும், செயலையும் செய்யவில்லை. மாறாக ஊடகங்களில் தான் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஏமாற்று வேலை செய்து கொண்டிருக்கும் ஊடகங்கள் மீது, மக்கள் நிச்சயம் அதிருப்தி அடைவார்கள் என்பது உறுதி .அது மட்டுமல்ல, இன்று சோசியல் மீடியாக்களில் வருகின்ற உண்மைகள் கூட, இந்த பத்திரிகை தொலைக்காட்சிகளில் வருவது மிகவும் குறைவாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு அரசியலில் அதிகரித்திருக்கிறது.
ஆனால், செயல்பாடு மிகவும் குறைந்து இருக்கிறது. இன்றைய அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் செயல்படுவதற்கு தான் பஞ்சம். பேசுவதற்கு ஆள் இருக்கிறது. ஆனால் செயல்படுவதற்கு ஆள் இல்லை. பேசியே நாட்டைப் பிடித்து விடலாம் என்பது 19 62 இல் திமுக எடுத்த ஒருஅரசியல் ஆயுதம் .அதே ஆயுதத்தால் இதுவரை சாதித்து விட்டது. இனிமேல் சாதிக்குமா? என்பது கஷ்டம் தான் .
மேலும், மக்கள் பிரச்சனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி எதுவும் இல்லாமல் இந்த தேர்தலை சந்திக்கும் திமுகவிற்கு மக்கள் என்ன பாடம் சொல்லப் போகிறார்கள்? தவிர, அதிமுகவின் செல்வாக்கு மக்களிடம் மீண்டும் வெற்றி பெறுமா? என்ற போட்டியில் இந்த ஈரோடு சட்டமன்றத் தேர்தல் இருந்து வருகிறது. இதில் எந்த கட்சியின் மீது அதிக அதிருப்தி மக்கள் அடைந்திருக்கிறார்கள்? இவர்களுடைய இருவரின் வலிமை? இந்த தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும், மக்கள் இவர்களுக்கு வாக்களித்திருப்பதால் நாம் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. எந்த அரசியல் கட்சிகளால் நமக்கு பிரச்சனைகள் தீரும்? என்று எதிர்பார்த்தோமோ, அந்த அரசியல் கட்சிகளாலே, நமக்கு அதிக பிரச்சனைகள் வருகிறது என்பதுதான் மக்கள் தெரிந்து கொண்ட உண்மை.
மேலும், இந்த இரண்டு கட்சிகளும் பணத்தை தாராளமாக செலவு செய்து பார்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல். இதில் இருவருடைய பணபலம் வெற்றி பெறுமா? அல்லது நடுநிலையான மக்களின் ஜெனநாயக குரல் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..