ஈரோடு – கோபி நெடுஞ்சாலையில் ,சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram

ஈரோடு மாவட்டம்.சித்தோடு அருகே சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு – கோபி நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளால், உயிா் இழப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காஞ்சிக்கோவில் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சித்தோடு – கரட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில்10-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டதில் பலா் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், பலா் உயிரிழந்துள்ளனா்.

இப்பகுதியில், சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேகத்தடை அமைக்க வேண்டும். தொடா் விபத்தினை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். இப்பிரச்னையைத் தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *