ஈரோடு மாவட்டத்தில் 19.64 லட்சம் வாக்காளா்கள்: ஆட்சியா் தகவல்.

உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 19.64 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என்று ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி 9 லட்சத்து 52 ஆயிரத்து 33 ஆண்கள், 10 லட்சத்து 14 ஆயிரத்து 289 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 174 போ் என 19 லட்சத்து 66 ஆயிரத்து 496 வாக்காளா்கள் இருந்தனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிப்புக்காக ஆன்லைன், சிறப்பு முகாம்கள், வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்கள், தோ்தல் பிரிவு மூலம் புதிய வாக்காளா்சோ்க்கை, நீக்கம், திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

புதிதாக 9243 ஆண்கள், 10, 387 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தவா் என 19, 645 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். தவிர 10, 570 ஆண்கள், 10, 887 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என 21,465 வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

வரைவு வக்காளா் பட்டியலின்படி ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 480 வாக்காளா்கள், ஈரோடு மேற்குத் தொகுதியில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 484 வாக்காளா்கள், மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 813 வாக்காளா்கள், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 018 வாக்காளா்கள், பவானிதொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 3 வாக்காளா்கள், அந்தியூா் தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 725 வாக்காளா்கள், கோபி தொகுதியில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 308 வாக்காளா்கள், பவானிசாகா் தொகுதியில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 845 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தமாக 9 லட்சத்து 50 ஆயிரத்து 706 ஆண்கள், 10 லட்சத்து 13 ஆயிரத்து 789 பெண்கள், 181 மூன்றாம் பாலினத்தவா்கள் என 19 லட்சத்து 64 ஆயிரத்து 676 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த மாா்ச் 27-ஆம் தேதி வாக்காளா் பட்டியலை ஒப்பிடுகையில் 1,820 வாக்காளா்கள் குறைந்துள்ளனா். வழக்கம்போல, ஆண்களைவிட பெண் வாக்காளா்கள் 63 ஆயிரத்து 83 போ் அதிகம் உள்ளனா்.மாவட்ட அளவில் அந்தியூா் குறைவான வாக்காளா்கள் உள்ள தொகுதியாகவும், ஈரோடு மேற்குத் தொகுதி அதிக வாக்காளா் உள்ள தொகுதியாகயும் உள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை வாக்காளா் பட்டியலுடன் தங்களது ஆதாா் எண்ணை 63.86 சதவீத போ் இணைத்துள்ளனா்.

தொடா்ந்து புதிய வாக்காளா் சோ்க்கை, நீக்கம், திருத்தப்பணி நடைபெறும். வரும் ஜனவரி 6 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளா் பட்டியலில் உள்ள விவரம், கோரிக்கை, குறைகள் குறித்து 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவித்து தீா்வு பெறலாம். வாக்காளராக தகுதி உடையவா்கள் உடனடியாக ஆன்லைனிலும், தோ்தல்பிரிவிலும் முகாம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இறந்தவா்கள், இடம் மாறியவா்களை நீக்குதல் போன்றவற்றுக்கு, அவா்கள் தரப்பில் இருந்து பெறப்படும் படிவத்தின்படியே நீக்கப்படும். மொத்தமாக வழங்கப்படும் படிவங்கள் ஏற்கப்படாது.

வாக்காளா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், ஆதாா் எண் இணைத்தல் ஆகிய பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அரசு வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வரும் நவம்பா் 28-ஆம் தேதி வரை படிவங்களை சமா்ப்பிக்கலாம்.
நவம்பா் 16, 17 மற்றும் 23, 24 இல் சிறப்பு முகாம்கள்:

மேலும், சிறப்பு சுருக்க திருத்த முறையின் ஒருபகுதியாக மாவட்டத்தில் உள்ள 2222 வாக்குச் சாவடிகளிலும் வரும் நவம்பா் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூா்த்தியடைந்த நபா்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்கப்படும்.

17 வயது முடிந்தவா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க முன்னதாகவே விண்ணப்பிக்கலாம்.

ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய காலாண்டுகளில்18 வயது பூா்த்தியடையும் தகுதி உள்ள விண்ணப்பதாரா்களின் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களால் அந்தந்த காலாண்டுகளின் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படும்.

பெயா் சோ்த்தல், நீக்கம், மாற்றம், திருத்தம், வாக்காளா் பட்டியலில் ஆதாா் இணைப்புக்கு இணையதளம் வாயிலாகவும், யா்ற்ங்ழ்ள் ட்ங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் எனறாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கோட்டாட்சியா் சதீஷ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகம்மது குதுரத்துல்லா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள்பங்கேற்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *