சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பு அரசு ஊழியர்களுக்கு ஒரு விதமாகவும், அரசியல் கட்சியினருக்கும் ,தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும், வழங்கப்பட்ட ஒரு பாரபட்சமான தீர்ப்பாகத்தான் பொதுமக்கள் இதைப்பற்றி விமர்சனம் செய்கின்றனர்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றால் ஆயிரம் முதல் அதிகபட்சம் லட்சம். ஆனால், கோடி கணக்கில் கொள்ளையடித்து விட்டு ,கணக்கு எழுதி வருமான வரித்துறைக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் கணக்கு காட்டி கொண்டிருக்கும் இவர்களுக்கு மட்டும் சாட்சி ,ஆதாரங்கள் தேவைப்படுகிறதா?
மேலும், உச்சநீதிமன்றம் ஒருவர் பதவிக்கு வருவதற்கு முன் அவருடைய சொத்து கணக்கு எவ்வளவு? பதவி போன பிறகு அவருடைய சொத்து கணக்கு எவ்வளவு? பினாமி பேரில் எவ்வளவு சொத்து கணக்கு? இப்படி எல்லாம் மறைமுகமாக சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கும், இந்த அரசியலைப் பற்றி உச்சநீதிமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது?
மேலும், மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் கொள்ளையடிப்பவர்களாக இருந்தால், அதற்கான சட்டம் நீதிமன்றத்தில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் அல்லவா ?இதுவரையில் நீதிமன்றம் அப்படி தண்டிக்கப்பட்டு இருந்தால், ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வர முடியாது. இதையெல்லாம் செய்ய வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது.
ஆனால், நீதிமன்றம் எப்போது அரசியலாக்கப்பட்டதோ, அப்போதே ஊழல்வாதிகள், அரசியல் குற்றவாளிகள், நீதிமன்றத்தின் மூலம் அதிகம் தண்டிக்கப்படுவதில்லை. இனியாவது நீதிமன்றம் பொறுப்புடன் தங்கள் கடமையை செய்யுமா? மேலும், பொது மக்கள் மத்தியில் இதற்கு எழும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ?