தமிழக மக்கள் பெரிய பத்திரிகைகளில், பெரிய தொலைக்காட்சிகளில் வருகின்ற செய்திகள் மட்டும்தான் உண்மையானது என்ற ஒரு மூடநம்பிக்கையை உடைத்து வருகிறது. இன்றைய சிறிய பத்திரிகைகளின் இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்கள் .அதாவது மக்களுக்கு உண்மைகள் மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் எத்தனையோ பல முக்கிய செய்திகள், இந்த கார்ப்பரேட் பத்திரிகை ஊடகங்களில் இருந்து வெளி வருகிறது.மேலும்,
ஊடகங்கள் என்றால் அது பத்திரிகையாக இருந்தாலும், தொலைக்காட்சியாக இருந்தாலும், மக்களிடம் உண்மையை எடுத்துரைக்க வேண்டிய கட்டாயமும், கடமையும் அதற்கு இருக்கிறது. மேலும், இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு தான் தமிழகத்தில் சலுகை ,விளம்பரங்கள் கோடிக்கணக்கில் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுகிறது.
இதைப்பற்றியும் மத்திய மாநில அரசின் கவனத்திற்கு, எமது பத்திரிகை செய்தியின் வாயிலாகவும், இணையதளத்தின் வாயிலாகவும் தெரிவித்திருக்கிறேன் .இதைவிட ஒரு கொடுமை செய்தி துறை அதிகாரிகள் அரசியல் செய்ய வந்த அதிகாரிகளா? அல்லது கார்ப்பரேட் பத்திரிகைகளின் ஏஜெண்டாக செயல்பட வந்தார்களா?மேலும்,
எந்த கட்சி ,ஆட்சிக்கு வருகிறதோ, அதாவது அது அதிமுகவாக இருந்தாலும் சரி ,திமுகவாக இருந்தாலும் சரி அதற்கு ஏற்றார் போல், இந்த செய்தி துறையில் அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் மாற்றி போடுவார்கள். இவர்களுக்கு எத்தனையோ விதிமுறைகள் தெரிந்திருக்கலாம் ,அல்லது தெரியாமல் கூட இருக்கலாம்.
இந்த விதிமுறை சாமானிய மக்களுக்கு கூட தெரியும். ஒரு பத்திரிகையின் பெயர் பதிவு அதாவது ஆர் என் ஐ RNI இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் .ஆனால், அதற்குரிய பதிவு எண் அந்த பத்திரிகையில் வெளியிட வேண்டும். ஆனால் இவர்கள் சென்னையில் மட்டும் பதிவு செய்யும் பத்திரிகைகளுக்கு மட்டும் தான் ,இந்த அரசின் அடையாள அட்டையை கொடுப்பார்களாம்.
ஒரு பத்திரிகை துறை மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் ஒரு துறை என்பதாக மக்கள் அதன் மீது வைத்திருக்கும் ஒரு முழு நம்பிக்கை. எப்படி சாமானிய மக்கள் நீதிமன்றத்தின் மீது ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, அதே நம்பிக்கை இந்த பத்திரிகை தொலைக்காட்சியின் மீதும் வைத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அந்த பத்திரிகையை படிப்பவர்கள் அல்லது எமது இணையதளத்தில் வெளிவரும் செய்தியை படிப்பவர்கள் ,இவர் சென்னையில் பதிவு செய்து இருக்கிறாரா? அல்லது மாவட்டத்தில் பதிவு செய்திருக்கிறாரா? அல்லது ஒரு கிராமத்தில் பதிவு செய்திருக்கிறாரா? இதை பார்த்தா ,செய்தியை படிப்பார்கள்? இந்த அறிவு கூட ஏன் இவர்களுக்கு இல்லை?
இதற்கும் தாளம் போடும் சங்கங்கள், பத்திரிகைகள் எவ்வளவு சுயநலம் என்பதை பொதுமக்கள் நீங்கள் தான் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு ஒரு விதிமுறையை வகுத்துள்ளது. அந்த விதிமுறையிலும் சில மாற்றங்கள் நிச்சயம் இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை துறை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதையும் மாற்றுவதற்கு இந்த கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை, தொலைக்காட்சிகள் மறைமுகமாக ஒரு மூட்டு கட்டை போட்டு வருகிறது.
மேலும், இது பற்றிய உண்மைகளை மத்திய மாநில அரசுகளுக்கு எனது ஈமெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளேன். அந்த கடிதத்தில் இ பேப்பர் மற்றும் இ புக் அதற்கு நிச்சயம் அங்கீகாரம் அளிக்க வேண்டும். இது தவிர, சமூக நன்மைக்காக போராடுகின்ற பத்திரிகைகள், இணையதள பத்திரிகைகள் அதற்கு முன்னுரிமையும் ,முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நியாயமான கருத்து.
அதையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்களை செய்தித்துறை அதிகாரிகள் கொண்டு வர வேண்டும். எனவே, பத்திரிகை என்பது அரசின் செய்திக்கு, ஆட்சியாளர்களின் விளம்பரத்திற்கும், முக்கியத்துவம் என்றால் அது பத்திரிகை சுதந்திரத்திற்கும் ,பத்திரிகையின் பொதுநல கொள்கைக்கும் எதிரான ஒன்று.
இது தவிர, பத்திரிகையின் கொள்கை முடிவு என்பது பொதுநலக் கொள்கை முடிவாக இருக்க வேண்டும். ஆனால், அது அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் சேர்ந்து அவர்கள் சொல்லும் சுயநல கொள்கை முடிவுக்கு தான் சலுகை விளம்பரங்கள் என்றால், அது தவறான கொள்கை முடிவு என்பதை இச்செய்தியின் வாயிலாக மத்திய மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் உண்மை.