தேனி மாவட்டம் லட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மக்கள் அதிகாரம் பத்திரிகையால் ,இன்று ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பதவி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் சார்பில் விளக்கம் கேட்டு வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதன் அடிப்படையில் வட்டாட்சியரும் வரும் மார்ச் மாதத்தில் லட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இது மக்கள் அதிகாரம் பத்திரிகை சமூக நன்மைக்காக வெளியிடும் உண்மை செய்திக்கு கிடைத்த உரிய அங்கீகாரம் .
மேலும், பொதுமக்களும் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் சேர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவு .இது போன்ற சமூக குற்றங்கள் தடுக்கப்படுகிறது. இன்று இந்த சமூக குற்றங்களுக்கும் எதிராக போராடும் பத்திரிகையாகவும், சமூக நன்மைக்காக நடுநிலையோடு மனசாட்சியுடன் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
மேலும், சமூக ஆர்வலர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும், நகரங்களிலும், பேரூராட்சிகளிலும் குறைந்த அளவில்தான் இருப்பார்கள். இவர்கள்தான் இன்று இந்த குற்றங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால், அரசியல் லாபங்களுக்காக கட்சிகளில் தன்னை பெரியாளாக காட்டிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் இன்று பெரும்பாலும் சமூக குற்றவாளிகளாகவும், அரசியல் வியாபாரிகளாகவும், தான் இருந்து வருகிறார்கள்.மேலும்,
இவர்களால் சமூக மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் சமூகத்திற்கும், சமூக ஆர்வலர்களுக்கும், இவர்கள் இடையூறுகளாக தான் இருக்கிறார்கள். இருப்பினும் அரசு அதிகாரிகள் இவர்களுக்கு கொடுக்கின்ற மரியாதை, சமூக ஆர்வலர்களுக்கு கொடுப்பதில்லை. ஏனென்றால், அவர்களால் இவர்களுக்கும் வருமானம் உண்டு. சமூக ஆர்வலர்களால் அது கிடைக்காது. மேலும், இந்த பிரச்சனை லட்சுமி நாயக்கன்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கொண்டு வந்த பிரச்சனை .
இன்று லட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக சர்வதேச உரிமைகள் கழகம் தேவாரம் தான் நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக இருந்தது. நான் தற்போது அவர்களிடம் கேட்டேன். உங்களுக்கு இதனால் எந்த ஒரு லாபமும் இல்லை. உங்களுடைய பணி சுமைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ,நீங்கள் எதற்காக கோர்ட் வரை இப் பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும்?
இதனால், உங்களுக்கு பொருளும் விரையம் ,நேரமும் விரையம் .இது எதனால் என்பதை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சொல்வார்களா? அல்லது நீதிமன்றம் தான் இந்த கேள்வியை அதிகாரிகளிடம் எழுப்புமா? இந்தஅதிகாரிகள் ஒழுங்காக நடவடிக்கை எடுத்தால் ஏன், சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள்?
மேலும் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் என்ன ?இதையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டிய காலகட்டத்தில் இன்றைய ஊராட்சிகள், உள்ளாட்சிகள் நிர்வாகம் இருக்கிறது. இது தவிர,இனி கோர்ட் இது போன்ற முறைகேடுகள் செய்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ,பேரூராட்சி சேர்மங்கள், நகராட்சி சேர்மங்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அல்லது ஊராட்சிகள் நிர்வாக உதவி இயக்குனர் அதிகாரிகளையும், சேர்த்துக்கொண்டு நடவடிக்கை எடுங்கள்.
ஏனென்றால் தேனி மாவட்டத்தில் ஊராட்சிகள் இயக்குனராக இருக்கும் அண்ணாதுரை நடவடிக்கை எடுத்திருந்தால் அல்லது மாவட்ட ஆட்சியர்முரளிதரன் நடவடிக்கை எடுத்திருந்தால், இது பிரச்சனை நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் சென்றும் கூட நடவடிக்கை இல்லாமல் இருக்கும்போது தான், மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தோம் .
இப்படி தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் அதிகாரிகளால், சமூக ஆர்வலர்களுக்கும், சமூக குற்றவாளிகளுக்கும் உள்ளாட்சி நிர்வாக பிரதிநிதிகளுக்கும் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும்,இடையே மோதல்கள் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் போன்றவற்றில் ஏற்படுகிறது. இது தவிர மிக முக்கியமான ஒரு தகவல், தமிழகம் முழுதும் இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம், ஒரே சமூகத்தை சேர்ந்த கமிஷனர்கள், பேரூராட்சியின் செயல் அலுவலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் இருக்கக் கூடாது.இங்கு சாதி பிரச்சனை என்பது அரசியல் முதல் அரசியல் நிர்வாகத்தின் வரை இன்று உள்ளடி வேலையாக உள்ளது. .அதிலும், குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இவை அதிகம் உள்ளது.
இதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் இந்த கருத்தை ஆய்வு செய்து, உடனடியாக பேரூராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களில் தலைவர் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களை மாற்ற வேண்டும். இவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், இவர்கள் சமூகத்தில் உள்ள அரசியல் கட்சி (அடியாட்கள்) என்று சொல்லிக்கொண்டு ,அங்கே domination அதிகமாக உள்ளது. மற்றொரு பக்கம் ஒப்பந்ததாரர் என்ற வகையில் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் .
இதனால், அந்த நிர்வாகம் இவர்கள் என்ன செய்தாலும், கேள்வி கேட்க முடியாத அளவிற்கு பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், பேரூராட்சியில் உள்ள ஒரு சில கிளர்குகள், அரசியல் கட்சியினரின் செல்வாக்கால் எந்த ஆட்சி வந்தாலும், அங்கேயே தொடர்ந்து அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் உடனடியாக வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த நிர்வாகம் சரியான முறையில் நிர்வகிக்க முடியும். உள்ளாட்சி பிரதிநிதிகள் கொள்ளை அடிக்க, அவர்களுக்கு தகுதியான ஒத்து ஊதும் பஞ்சாயத்து கிளர்குகள், பேரூராட்சி கிளர்குகள் போன்ற அடிப்படை நிர்வாகத்தை மாற்றி அமைக்காமல், இதில் நடைபெறும் ஊழல்களை தடுக்க முடியாது.
மேலும், இந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஆடிட்டர் என்பவர் இருக்கிறாரா? இல்லையா? எதற்கு இவர் ஆடிட்டர்? இவர் வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாக இவர் வேலை செய்வதில்லை. இந்த ஆடிட்டர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாவட்டத்திலும், இதுவரை எத்தனை கிராமங்களில் நடைபெற்ற ஊழல் கணக்குகளை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள்?
அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள், ஒவ்வொருவரும் சர்வே எடுத்தால், இவர்கள் ஊழலுக்கு ஒத்துவதும் ஆடிட்டர்கள் ஆக தான் இருக்கிறார்கள். ஏன், ஊழல் கணக்குகள் சமூக ஆர்வலர்கள் இல்லாமல் வெளியில் வருவதில்லை? அப்படி என்றால், இவர்கள் என்ன ஆடிட்டிங் செய்கிறார்கள்? இவர்களுக்கு ஆடிட்டிங் செய்ய தெரியுமா? தெரியாதா? வெறும் பேப்பரில் கணக்கை எழுதி காட்டிவிட்டு அல்லது சரி செய்து காட்டிவிட்டு போவது ஆடிட்டிங் அல்ல.
ஒரு பஞ்சாயத்து நிர்வாகத்தையோ அல்லது பேரூராட்சி நிர்வாகத்தையோ அல்லது நகராட்சி நிர்வாகத்தையோ ஆடிட்டர்கள் ஆடிட் செய்தால், அங்கு என்ன முறைகேடுகள் நடைபெற்று உள்ளது? என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அப்படி இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டு வந்த தகுதியான ஒரு ஆடிட்டர் கூட இதுவரை நான் கேள்விப்படவில்லை .35 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் இருக்கிறேன். அப்படி என்றால் இவர்கள் ஆடிட் செய்வது வீண்.
அதனால் இந்த ஆடிட்டர்களை ஒட்டுமொத்தமாக எடுத்து விட்டு, தகுதியான சிஏ படித்த ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும். இவர்களால் கோடிக்கணக்கில் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இது தவிர, இந்த மாவட்டத்தில் சுருளிப்பட்டி ஊராட்சியும் இதே நிலைமை தான் இதுபோல் தமிழக முழுதும் உள்ளது. ஊராட்சிகளின் நிலைமையை ஊராட்சிகளின் முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் நிர்வாக சீர்திருத்தத்தை கொண்டு வர சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதை அரசின் கவனத்திற்கு மக்கள் அதிகாரம் சார்பில் தெரிவிக்கும் முக்கிய தகவல். எனவே, இது போன்ற முக்கிய செயல்பாடுகளை களையாமல், இந்த உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் நிர்வாக குற்றங்களை தடுக்க முடியாது என்பது உறுதி.