மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து, இவற்றில் ஊழலுக்கு முக்கிய உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள் தான். இந்த ஆடிட்டர்கள் மாவட்டம், ஒன்றியம் அளவில் உள்ள ஆடிட்டர்கள், ஒருவர் கூட அதற்கு தகுதியானவர்களாக இல்லை.
பெயருக்கு கிராம பஞ்சாயத்து கணக்குகளை ஆடிட்டர் செய்யும் ஒன்றிய அளவில் உள்ள பஞ்சாயத்து ஆடிட்டர்கள், ஒப்புக்கு கணக்கு வழக்கு பார்க்கும் ஆடிட்டர்கள். அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் நடக்கின்ற ஊழல்களை கிராம மக்கள் புகார் அளித்தால் அவர்கள் என்ன ஆடிட் செய்கிறார்கள் ?ஆடிட்டிங் படித்தவர்கள் ஒருவர் கூட இல்லாததால், இந்த உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழல்கள் மலிந்து கிடக்கிறது. இவர்கள் எழுதுவது தான் கணக்கு, அந்த கணக்கை பேருக்கு ஆடிட் செய்வதுதான் ஆடிட்.
இது தவிர, செய்த வேலை தரமானதாக உள்ளதா ? அதுவும் ஆடிட்டருக்கு தெரியாது. அல்லது வேலை செய்தார்களா ? அதுவும் தெரியாது. இப்படி கணக்குகளில் உள்ள குளறுபடிகளும் தெரியாது. நிர்வாகத்தில் அந்த வேலையின் தரம் தெரியாது. இப்படி தெரியாதவர்களை வைத்து ஆடிட் செய்து கொண்டிருக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தில், ஊழல் நடக்காமல் என்ன நடக்கும் ? சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளும் இதைப்பற்றி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தால், என்ன நடந்து விடப் போகிறது ?
ஆளுங் கட்சிக்கு ஒரு விதம், எதிர்க்கட்சிக்கு ஒரு விதம், பணம் கொடுத்தால் ஒரு விதம், கொடுக்காவிட்டால் ஒரு விதம், இப்படி விதவிதமாக ஆடிட் செய்யும் ஆடிட்டர்கள் முறைகேடு, உள்ளாட்சி நிர்வாகத்தில் தான் பார்க்க முடியும். முதலில் இவர்களுடைய தகுதி என்ன ? என்பதை இன்றுவரை அரசாங்கம் கேட்கவில்லை .அவர் ஆடிட்டிங் படித்திருக்கிறாரா ? என்பது உயர் அதிகாரிகளுக்கு கூட தெரியாது.
ஆடிட்டிங் படிக்காத ஒருவரை எப்படி ஆடிட் செய்ய வைக்கலாம்? வைத்தால் அந்த கணக்கு வழக்குகள் உண்மையானதாக இருக்குமா? ஆடிட்டிங் தெரிந்தவர் செய்தாலே கணக்குகளில் குளறுபடிகள் வரும். தெரியாதவர் செய்தால் கேட்கவா வேண்டும்? மேலும், நடக்கின்ற ஊழலுக்கு முக்கிய காரணமானவர்கள் ஆடிட்டர்கள். இவர்களுக்கு இந்த கணக்கில் வரக்கூடிய பற்றாக்குறை அல்லது செய்துள்ள குளறுபடிக்கு தகுந்தவாறு ஆடிட்டர்கள் பணத்தை வாங்குகிறார்கள் என்கிறார்கள். 90% ஊழல்களை ஆடிட்டர்கள் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திறமையான ஆடிட்டர்கள், ஆடிட் தெறிந்த நபர்கள், என்ன தவறு பண்ணியிருக்கிறார்கள் என்பதை பார்த்த உடனே கண்டுபிடித்து விடுவார், தெரியாதவர்கள் அதன் சூட்சமங்களை இவர்களால் கண்டுபிடிக்க முடியாது. மேலும் ,இவர்கள் பார்க்கின்ற ஆடிட்டிங் பில் இருக்கிறது. அதற்குரிய வரவு செலவு கணக்கு இருக்கிறது. இதுதான் தெரியும். இதற்கு மேல் தெரியாது. ஆனால் ,ஆடிட்டிங் தெரிந்தவர்கள், நீங்கள் பில் வைத்து வரவு செலவு கணக்கு எழுதினாலும், எந்த இடத்தில் தப்பு பண்ணி இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடித்து விடுவார்கள் .
இவர்கள் வரவுக்கேத்த செலவு கணக்கு எழுதி, கணக்கு காட்டிவிட்டு ஆடிட்டிங் எல்லாம் சரியாக இருக்கிறது என்று பணத்தை வாங்கிக் கொண்டு ஆடிட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பெயர் ஆடிட்டிங் அல்ல, கணக்கை சரிகட்டும் வேலை தான் தற்போதைய ஆடிட்டிங் .
இதை செய்வதற்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்கள் போன்றவற்றில் அரசு கொடுக்கின்ற சம்பளம் ஒரு வகையில் அது வீணானது. இவர்களுக்கு கொடுக்கின்ற சம்பளமும், அரசுக்கு வருவாய் இழப்புதான் .இந்த மோசடி கணக்குகளும், ஒரு வருவாய் இழப்புதான். ஆக கூடி பல கோடிக்கணக்கில் இவர்களால், உள்ளாட்சி நிர்வாகத்தில் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது .
இதை சரி செய்ய வேண்டும் என்றால், ஆடிட்டிங் தெரிந்தவர்களை உள்ளாட்சி நிர்வாகத்தில் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசு கொடுக்கின்ற கோடிக்கணக்கான நிதியும், மாநில அரசின் நிதியும், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு இந்த ஆடிட்டர்கள் மூலம் ஏற்பட்டு வருகிறது.
இதை தடுக்க தகுதியான சி ஏ படித்த அல்லது கீழ் மட்டத்தில் ஆடிட்டிங் டிப்ளமோ படித்த நபர்களைத்தான் ஆடிட்டர்கள் ஆக நியமனம் செய்ய வேண்டும். தவிர, இவர்கள் ஆடிட்டிங் செய்தும், எப்படி பொதுமக்கள்? சமூக ஆர்வலர்கள்? பத்திரிகைகள் ஊழல்களை வெளிப்படுத்துகிறது? அப்படி என்றால், இவர்களுக்கு ஆடிட்டிங் செய்ய தகுதி இல்லை என்பது இதன் மூலம் வெளிப்படையாக தெரியவரும் உண்மை.மேலும்,ஆடிட்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்தால் தான், உள்ளாட்சியின் ஊழல்களை குறைக்க முடியும். தகுதியானவர்களை ஆடிட்டர்கள் ஆக நியமித்தால் மட்டுமே, உள்ளாட்சியில் ஊழலற்ற நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க முடியும்.