உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழலை அகற்ற மத்திய -மாநில அரசுகள் புதிய அரசாணைகளை கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்குமா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கிராம ஊராட்சிகள் முதல் நகராட்சிகள் வரை வரவு செலவு- கணக்குகள், என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? என்பது அந்தந்த பகுதி மக்களுக்கு தினமும், இன்று செய்யக்கூடிய வேலைகள் ,இன்றைய வரவு செலவுகள் அனைத்தும், மறுநாள் ஆன்லைனில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடுவதற்கு பதிலாக தொடர்ந்து திமுக அரசு பல காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து வருகிறது.

 இதற்கு அடுத்தது, இங்கு கணக்கு வழக்குகளை ஆடிட் செய்யும் ஆடிட்டர்கள் ஒருவர் கூட ஆடிட்டிங் படித்த ஆடிட்டர்கள் இல்லை. இதுவே உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழலுக்கு முக்கிய காரணம். மேலும், ஆடிட்டர்கள் எங்கு? யார் எந்த இடத்தில் தப்பு செய்கிறார்கள்? என்பதை கண்டுபிடிப்பதற்கு தான் ஆடிட்டர்கள் தேவை.

ஆனால், தப்பு செய்த கணக்கு வழக்குகளை சரி செய்வதற்கு தான் ,உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். அதனால், மேல் மட்டத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் ஒன்றுமே செய்ய முடியாத அளவில், புரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் பெரிய காரியமில்லை. உள்ளாட்சி நிர்வாகத்தில் சரியான அரசாணை கொண்டு வந்தால், உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள இந்த ஊழல்களை ஆறு மாதத்தில் ஒழித்துக் கட்ட முடியும் .அதற்கு மத்திய மாநில அரசுகள் தயாரா ?

அதாவது மத்திய அரசு நிதியும், மாநில அரசின் நிதியும் தனித்தனியாக ஆடிட்டர்களை நியமித்து கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு பக்கம், மாநில அளவில், மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் இந்த கணக்கு வழக்குகள் ஆடிட்டிங் செய்தால், எந்த ஒரு பஞ்சாயத்து தலைவர்களும், ஒன்றிய சேர்மன்களும், கவுன்சிலர்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கூட இந்த ஊழல்களை அடியோடு ஒழிக்க முடியும்.

 சமூக ஆர்வலர்களும், சமூக பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் இந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழல்களுக்கு RTI யை போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது .

இது தவிர ,ஒவ்வொரு வேலைகளுக்கும், அந்த வேலை சரியான முறையில் செய்தால் மட்டுமே பில் பாஸ் செய்ய வேண்டும். அப்படி அந்த வேலைகள் ஒழுங்காக நடந்துள்ளதா? என்பதை கண்காணித்து, அதற்கு சான்று வழங்கிய பின்னரே பில் பாஸ் செய்ய வேண்டும். அதை முதலில் ஒன்றிய அளவில்  ஒரு இன்ஜினியரிங் டீம், அடுத்தது மாவட்ட அளவில் ஒரு இன்ஜினியரிங் டீம், அடுத்தது மாநில அளவில் ஒரு இன்ஜினியரிங் டீம், இந்த மூன்று டீமும் கண்காணித்து தொகைக்கு ஏற்றவாறு பில் பாஸ் செய்ய வேண்டும்.

 சிறிய தொகை என்றால் ஒன்றிய அளவில் பாஸ் செய்து, அதை மாவட்ட என்ஜினியரிங் டீம் கண்காணித்து, மாநில டீமுக்கு அனுப்ப வேண்டும். இந்த மூன்று நிலைகளிலும், நிச்சயம் இவர்களுடைய ஊழல்கள் வெளியில் வந்துவிடும் .இது தவிர, ஊராட்சித் தலைவர்களுக்கு குட்டைகளில் உள்ள மீன்களை  ஏலம் விட, ஏரி மரங்களை ஏலம் விட, ஏரி மண்ணை எடுப்பதற்கு, மணல் எடுப்பதற்கு, என்ற தீர்மானமும் போட அதிகாரம் இருக்கக் கூடாது.

இவர்களை கிராமத்தில் கௌரவத்திற்கும், இந்த பணிகளை சரியான முறையில் நடக்கிறதா? என்பதை மேற்பார்வையாளர் என்ற அளவில் மட்டுமே இவர்களை வைக்க வேண்டும் .அதேபோல்தான், நகரம் ,ஒன்றியம் ,பேரூராட்சி இதுபோல் அரசாணை கொண்டு வந்தால் ஏன்? உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழல் நடக்கிறது? நடக்க வாய்ப்பில்லை.

அதனால், இப்படிப்பட்ட அரசாணைகளை உள்ளாட்சி நிர்வாகத்தில் மத்திய மாநில அரசுகள் கொண்டு வருமா? என்று சமூக ஆர்வலர்களும், சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை .

மேலும், ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், நகராட்சிகளிலும் வாக்காளர்களிடம் காசு கொடுத்து போட்டி, போடுகின்ற ஊழல்வாதிகள் இந்த பக்கமே தலை காட்ட மாட்டார்கள் என்பது உறுதி.

தவிர,மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கௌரவமான தலைவர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உறுதி .அவர்கள் பணம் கொடுக்க மாட்டார்கள். காரணம் இவர்களுடைய உழைப்பையும் கொடுத்து, பணமும் கொடுப்பார்களா? கொஞ்சமாவது இந்த மக்களுக்கு அறிவு வேண்டாமா? இப்படிப்பட்ட அரசாணைகள் மத்திய மாநில அரசு கொண்டு வருமா?

மக்கள் நலனில்! மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *