பெரியார் சிலை உடைப்பு விவகாரத்திலும் திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறு பேசிய வழக்கிலும் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இது 2018 இல் அவதூறு பேசிய விவகாரம் குறித்து திமுகவினர் கொடுத்த புகார். அவதூறு பேச்சுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையா? ராஜாவின் பேச்சில் என்ன வன்மம்?
நாட்டில் எத்தனையோ பேர் தகாத வார்த்தைகள் எல்லாம் பேசிட்டு போகிறார்கள். திமுக ஆட்சியில் அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. குறிப்பாக தற்போது இசைவாணி, பா. ரஞ்சித் இந்து மதத்தையும், ஐயப்பனையும்,பாட்டுப் பாடி கேவலமாக டேன்ஸ் ஆடி இருக்கிறார்கள். மேலும்,புகார் அளித்தாலும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்று தெரிவிக்கிறார்கள். சட்டம் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறதா? அல்லது காவல்துறை ஒரு தலைப்பட்சமாக இருக்கிறதா? பொதுமக்கள் கேள்வி?