எடப்பாடி பழனிசாமியின் சுயநல அரசியலால்! செங்கோட்டையன் நீக்கம், அதிமுக இரண்டாக உடையப் போகிறதா ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுக ஜெயலலிதாவுக்கு பிறகு, ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காரணம், அந்தக் கட்சியின் சீனியர்களுக்குள் ஈகோ ஒரு பக்கம், மற்றொரு பக்கம் ஒற்றுமை இல்லை.

அது மட்டுமல்ல, அப்போதெல்லாம் அதிமுக நிர்வாகிகள் மக்கள் பிரச்சனை என்றால் ,ஓடி வருவார்கள், செய்வார்கள். அது எல்லாம் மாறி ,இப்போது அவர்களும் சுயநல அரசியலில் இறங்கி விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் எடப்பாடியின் தலைமை, கட்சியின் நிர்வாக சீனியர் களுக்கு மதிப்பளிக்காமல், அவர் கைக்குள் அதிகாரம் வந்து விட்டது என்று ஆட்டம் போட்டு, பேசிக் கொண்டிருக்கிறார். இவர் தான் அதிமுகவின் நிறுவனர் போல் ஆகிவிட்டார்.

இவர் யாருடைய அட்வைஸ்யும், ஏற்பதில்லை. இதனால், சீனியர்கள் மத்தியில் ஒரு வெறுப்பை எடப்பாடி பழனிசாமி சம்பாதித்துக் கொண்டார். தனிப்பட்ட எடப்பாடி பழனிசாமியால் ஒரே ஒரு தொகுதியில் கூட நின்று ஜெயிக்க முடியாது. அதிமுக என்ற அரசியல் கட்சியின் அடையாளத்தை வைத்து தொங்கிக் கொண்டிருப்பவர். மேலும், தேர்தல் நெருங்குவதால், கட்சியின் சீனர்களை எல்லாம் ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.

அதற்காக தான் செங்கோட்டையன், வேலுமணி, சிவி சண்முகம், போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஓ பன்னீர் செல்வத்தை சேர்த்துக் கொள்ளலாம், சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாம் ,டிடிவி தினகரன் சேர்த்துக் கொள்ளலாம் என்று பலமுறை சொல்லிப் பார்த்து அவர் கேட்பதாக இல்லை என்ற தகவல்.மேலும், தனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைத்து விட்டது. அதனால், தன்னை யாரும் இனி அசைக்க முடியாது என்ற கர்வத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தவிர, இதில் பிஜேபியும் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா தலைமையில் ,ஒரு பஞ்சாயத்து செய்து பார்த்தது, அதையும் ஏற்பதாக இல்லை. மேலும்,

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இது நன்றாக எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு புரிந்து விட்டது. ஏனென்றால் இதையெல்லாம் விட்டுக் கொடுத்து கட்சியின் சீனியர்களை அரவணைத்து கட்சியை காப்பாற்ற வேண்டியது பொதுச் செயலாளரின் முக்கிய பொறுப்பு. ஆனால், இவருடைய சுயநலத்திற்காக அதிமுகவை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு பொதுச்செயலாளர் பதவி வந்துவிட்டது இனிமேல் நம்மளை ஒன்றும் செய்ய முடியாது என்று செங்கோடையினை கட்சியில் இருந்து நீக்கி விட்டார். அவரும் வெளியில் வந்து சந்தோஷம் என்று சொல்லிவிட்டார். இந்த தன்னிச்சையான அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் நீண்ட நாள் இவர் நீடிக்க மாட்டார். இனி தான் எடப்பாடி பழனிசாமிக்கு கெட்ட காலம் ஆரம்பித்திருக்கிறது.

இவர் எதற்காக இவ்வளவு சொல்லியும் எடுக்கவில்லை ?என்பதற்கு பின்னால் என்ன அரசியல் ?என்றால்! கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை வைத்து ஸ்டாலின் ,இவரை ஒரு மறைமுக அரசியலில் போட்டு அழுத்தி வைத்திருக்கிறார். ஸ்டாலினை மீறி இவரால் துணிச்சலாக செய்ய முடியாத அளவுக்கு பயத்தில் தான் இருந்து வருகிறார் என்று அதிமுக கட்சி வட்டாரத்தில் ,அதுவும், ஒரு செய்தி பேசப்பட்டு வருகிறது. ஸ்டாலின் கையில் இவருடைய குடுமி மாட்டிக் கொண்டிருக்கிறது.

அதனால், அதிமுக ஆளும் கட்சியாக ஜெயிக்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சியாக தான் அமர்ந்து கொள்ளலாம். அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்துக் கொள்ளலாம். இதுதான் எடப்பாடியின் நோக்கமாக இருக்கிறது என்கிறார், அக் கட்சியின் சீனியர் ஒருவர்.

தற்போது அக்கட்சியின் சீனியர் செங்கோடையனை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கி விட்டார். இதனால், கட்சியின் சீனியர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இனி அதிமுக நிச்சயம் இரண்டாக உடைய போகிறது .அதில் மாற்றுக்கருத்து இல்லை. அது மட்டுமல்ல அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இந்தத் தேர்தலுக்குள் அதிமுக சின்ன பிண்ணமாக ஒன்றுக்கும் உதவாத கட்சியாக ஆக்க சீனியர்கள் ஒன்றுபடுவார்கள்.

இதில் எடப்பாடி பழனிசாமியால் இவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு பிஜேபியும் ஆதரவாக செயல்படும். ஆக கூடி எடப்பாடி பழனிசாமியால், அதிமுக அழிவு நிலைக்கு கொண்டு செல்வார் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *