பாகிஸ்தான் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, இங்குள்ள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராக மறைமுக தீவிரவாதம் செயல்களை ஊக்குவிப்பது, கள்ள நோட்டு புழக்கத்தை ஏற்படுத்துவது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுத்துவது, போன்ற பல்வேறு மறைமுக செயல்களில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் இந்தியாவுடன் போரையும் தொடுத்து பார்த்தது. இதனால் பாகிஸ்தானுக்கு தோல்விதான் மிஞ்சியது.
அது மட்டுமல்ல, சீனா கடன் கொடுத்து அதை அடிமையாக்கி வைத்துக் கொண்டது. இன்று பாகிஸ்தான் மக்கள் பசியும், பட்டினியும் அனுபவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது பற்றி யார் காரணம்? என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டு, இந்தியாவுடன் சமாதானமாகி இணைந்து விடுகிறோம், என்ற சூழ்நிலைக்கு கூட வந்து விட்டார்களாம்.
மேலும்,அவர்கள் எல்லாம் மோடியின் அரசியலை பாராட்டுகிறார்கள். மோடியின் வெளியூறவு கொள்கையை பாராட்டுகிறார்கள். அவருடைய திறமையை பாராட்டுகிறார்கள். ஆனால், இங்கு உள்ளவர்கள் அதைப் பற்றி சிந்திக்காமல், அரசியல் தெரியாத மக்களிடம் இவர்களுடைய பேச்சைக் கேட்டு எப்படி பாகிஸ்தான் ஏமாந்து, இன்று பசியும், பட்டினியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்களோ, அதே போல்,
ஒரு நாட்டை நிர்வகிக்கும் அரசியல் தலைமை சரியில்லை என்றால், நாட்டின் வளம், செல்வம் எல்லாம் தலைகீழாக மாறி, இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும் என்பது இன்றைய பாகிஸ்தான் ஒரு முக்கிய உதாரணம் என்பதை இந்திய மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருவாரங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 229.78 ஆக வீழ்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை, பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் இழுத்து மூடப்படுகிறது. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள் எரிவதில்லை. அதன் தாக்கம் கேஸ்கேடிங் எஃப்க்ட் ஆக ஒன்றன் பின் ஒன்றாக மூடுகிறார்கள். அதனால் வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசிகள் உச்சத்தை தொடுகிறது. கோதுமை, நெய், எண்ணெய் 500 தாண்டிய பின்னரும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் திவாலாகலாம். மேலும்,
மோடியின் நிர்வாகம் எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையில், இந்தியா இன்று உலக அளவில் அதன் புகழை நிலை நிறுத்தி இருக்கிறார். என்றால் அது அவருடைய தன்னலமற்ற தியாகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, இன்றைய சில BBC போன்ற ஊடகங்கள் தவறான பொய் பிரச்சாரங்கள் ஒரு பக்கம், எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்கள், தீவிரவாத அமைப்புகளின் அரசியல், காங்கிரஸ் இந்த நாட்டை கடனாளியாக்கி வைத்துவிட்டு போன சம்பவம், இதை எல்லாம் விட நாட்டில் கள்ள நோட்டு புழக்கத்தை ஏற்படுத்தி, இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சித்த வேலை, அத்தனை சிக்கலான சவால்களை எல்லாம் எதிர் கொண்டு நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் அவருடைய நிர்வாகம் உண்மையிலேயே அரசியல் தெரிந்தவர்கள் இன்றும் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.மேலும்,
சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அதை வரவேற்று கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால், இந்தியாவில் தமிழ்நாட்டில் பணத்துக்காக வாக்காளர்கள் விற்பனை வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு இந்த அரசியல் பற்றிய எந்த கருத்தும், புரிதலும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் தன்னுடைய சுயநலத்திற்காக அரசியல் என்று பார்க்கின்ற நிலை, தமிழக மக்களிடம் இருந்து எப்போது அரசியல், பொது நலம் என்பதை உணருகிறார்களோ, அப்போதுதான் தமிழ்நாட்டின் அரசியல் ஒரு நேர்மையான ,ஊழல் அற்ற நிர்வாகத்தை மக்களுக்கு எந்த கட்சியானாலும், கொடுக்க முடியும். அதுதான் தேசத்தின் ஒற்றுமை, இந்தியாவின் வலிமை! என்பதை தமிழக மக்கள் உணர்வது எப்போது………………?