
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெறும் ,என்ற சர்வே ரிப்போர்ட் (IB)உடைத்து இருக்கிறது.மேலும்,
என்.டி.ஏ (NDA)கூட்டணியில், விஜய் சேர்வதால், தோல்வி பயத்தின் அதிர்ச்சியில் திமுக, Congress, கூட்டணிகள் சென்றிருக்கிறது. அதனால் தான் விஜயின் குடும்ப விஷயத்தில் ஆரம்பித்து ,அவருடைய தனிப்பட்ட விஷயம் வரை ,சோசியல் மீடியாவில் மீடியாவிலும், அதை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அவர்கள் கேவலப்படுத்தி பார்த்தார்கள். இது திமுகவுக்கு கைவந்த கலை.

இது இன்று, நேற்று அல்ல, அப்பன் காலத்திலிருந்து இதுதான் நடக்கிறது. ஒருவனுக்கு என்ன தெரியுமோ, அதை தான் பேசுவான். அதை தான் செய்வான். இவர்களிடம் நேர்மையோ, மனசாட்சியோ, அல்லது மக்கள் நலனோ எதிர்பார்க்க முடியுமா? அது பற்றி தெரிந்தால் தானே பேசுவார்கள். மேலும்,

அவர்களுக்கு தெரிந்தது 5000 வந்ததா ?2000 வந்ததா? இலவசமா பஸ்ல போறியா? என்ன பிச்சை கொடுக்குறீங்களா? இன்று நடுத்தர மக்களின் கதறல் திமுக ஆட்சி. அதை ஒழிக்க வேண்டும் என்றால்! என்.டி.ஏ கூட்டணியில் விஜய் சேர்வது காலத்தின் கட்டாயம். தவிர,

சிறுபான்மை ஓட்டுகளை வைத்து திமுக ,காங்கிரஸ் கூட்டணிகள் போடுகின்ற கணக்கு, இந்த முறை தவறான கணக்கு. அந்த சிறுபான்மை மக்களும், இவர்கள் யார்? என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சிறுபான்மை மக்களின் அடாவடி, அராஜக கூட்டங்கள் தான், இவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தான் அந்த மக்களை அதிகாரம் செய்பவர்கள், ஆதிக்கம் செலுத்துபவர்கள் ,அவர்கள்தான் இவர்களை மூளைச் அளவை செய்து பிஜேபி வந்தால், நம்மளை எல்லாம் ஒழித்து விடுவார்கள். இப்படி ஒரு பயத்தை அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதைப் பிரச்சாரமாகவும் செய்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் பிழைப்பு நடத்துவார்கள்.

மேலும், ஸ்டாலின் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டுமா? இவர்கள் அனைவரும் அப்படியே உணர்ச்சி பொங்கி ,தமிழ்நாட்டு மக்களுக்காக பிஜேபியை எதோ ஒரு தீண்டத்தகாத கட்சி போல், பேசிக்கொண்டு இருப்பார்கள். இந்த கார்ப்பரேட் போலி ஊடக பிம்பங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களாக கோடி கணக்கில் வீணடிப்பது நாட்டு மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.
மேலும், மத்திய உளவுத்துறையின் ரிப்போர்ட் ,விஜய் கூட்டணிக்கு வந்தால், NDA கூட்டணியின் வெற்றி நிச்சயம் உறுதிப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சொல்லப்பட்டுள்ளது. அதனால், தொடர்ந்து இக்கூட்டணி குறித்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் விஜய்யிடம் பேசி வந்துள்ளார்.

மேலும், இக் கூட்டணிஇன்னும் ஒர், இரு நாட்களில் முடிவாகும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், திமுக, காங்கிரஸ் கூட்டணி தோல்வி பயத்தின் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இருப்பினும், இவர்களுடைய பேச்சு , கெட்டிக்காரன் புளுகு எப்படி இருக்குமோ, அப்படி தான் திமுகவினரின் பேச்சுக்கள்.
இந்தப் பேச்சு வித்தைகளை வைத்து இப்போது மக்களை இதை வைத்து ஏமாற்ற முடியுமா? நடுத்தர வர்க்கம் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். அதனால்,இவர்களுடைய கட்சியினர் இலவச பொருட்களை கொடுத்து வீழ்த்தலாமா? அல்லது பணம் கொடுத்து வீழ்த்தலாமா? இதில் தான் இவர்களுடைய சிந்தனை.

இதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், யாரு ஏமாறுவார்கள் ?என்பதை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தேடிப் போய் இதையெல்லாம் கொடுத்து ஓட்டு வாங்க முடியுமா? இது தான் தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல்.