என்எல்சி நிறுவனத்திற்கும் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கும் உள்ள பிரச்சனை என்ன?இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் போராடவில்லை என்றால், அந்த விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பது எப்போது ?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் மாவட்டம் ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

என்எல்சி நிறுவனம் கடந்த 2006 ல்  விவசாயிகளிடமிருந்து நிலக்கரி சுரங்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது. கையகப்படுத்திய நிலத்தை என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை. அதனால், நிலம் கொடுத்த விவசாயிகள் அந்த நிலத்தை பயிர் செய்து வருகிறார்கள். அப்படி பயிர் செய்து வருகின்ற நிலத்தை தற்போது கையகப்படுத்த நினைக்கும் போது, அதில் பயிரிடப்பட்டுள்ளது.

 பயிரிடப்பட்ட நிலத்தை அறுவடைக்கு பின் தான் அதை என் எல் சி நிறுவனம் எடுத்திருக்க வேண்டும். ஆனால், பயிர்களை அழித்து எடுத்தது விவசாயிகளுக்கு அது பெரிய ஒரு வேதனையான சம்பவம். இப்போது அந்த பயிர் இழப்பீட்டிற்கான தொகையும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.

 மேலும், விவசாய நிலத்தை அப்போது குறைந்த விலைக்கு விவசாயிகள் கொடுத்து விட்டார்கள். இன்று அதன் மதிப்பு கோடிகளில் இருக்கும் என்கிறார்கள். அதனால், கூடுதல் இழப்பீட்டுத் தொகை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். தவிர, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். இதுதான் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்எல்சி நிறுவனம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய பங்கு .

தவிர, இந்த நிலத்தை பாதுகாத்து வந்த விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்கும்போது ,அதற்கான இழப்பீடும் சரி செய்ய வேண்டும். பிரச்சனை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு விவசாயிகளின் கோரிக்கைகளை செவி சாய்த்து ஏற்று, இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை .

இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் போராடவில்லை என்றால், அந்த விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பது எப்போது ?என்பது கேள்விக்குறியாக இருக்கும். ஆனால், பயிர்களை அழித்தது தான் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, இப்பிரச்சனையில் விவசாயிகளுக்கு சுமூகமான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் தமிழக விவசாயிகள் முக்கிய கோரிக்கை. மேலும்,

பிஜேபியின் மாநில செயலாளர் அசுத்தாமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்எல்சி தொடர்பாக புகார் விசாரிக்கிறது., தவிர,  கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி, கத்தாழை, கருவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலை எடுப்பை நிறுத்தி வைக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும், என்எல்சி சேர்மன் மற்றும் மாநில அரசின் அதிகாரிகளும், வரவழைக்கப்பட்டு ,அதற்கான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *