கடவுளை அடைய பிறந்துவிட்டு, கர்மாவின் கணக்கை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலை தான் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள விதி. மேலும்,ஒருவனுடைய நல்வினை, தீவினை, பதவி, அந்தஸ்து, கௌரவம், கேவலம், புகழ்ச்சி, இகழ்ச்சி, அவமானம், வறுமை, செல்வம், எல்லாமே தீர்மானிக்கப்பட்டது தான்.
இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் நன்மை, தீமைகள் அவரவர் கர்மாவின் கணக்கு. இருப்பினும், எத்தனையோ பல கோடி மக்கள் இன்று கடவுளை அடைய பிறந்துவிட்டு,அதனுடைய வாசனை கூட தெரியாமல், எத்தனை கோடி பேர் இறந்து போகிறார்கள்.
மனிதனுடைய இறப்பு, பிறப்பு என்ற விடுதலை அடைவதற்கு தான் மனிதனுடைய பிறவி. ஆனால், இங்கே யார் சுகமாக வாழ்கிறார்கள்? யார் சந்தோஷமாக வாழ்கிறார்கள்? எவ்வளவு பேர் ?எத்தனை கோடிகளை சம்பாதிக்கிறார்கள்? எத்தனை கோடி சொத்துகள் இருக்கிறது? எந்த பதவியில் இருக்கிறார்கள்? கார் .பங்களா என்று எவ்வளவு இருக்கிறது? இதுதான் இன்றைய நாகரீக உலகத்தின் வாழ்க்கை.
இந்த வாழ்க்கையில் எப்படி ஒருவருக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்? அது நிரந்தரமாக இருக்குமா? இருக்காது. ஒரு மனிதனுக்கு பணம், பதவி கொடுத்தால் ,அது சில காலம் தான் .அதன் பிறகு அது மாறிவிடுகிறது. பணம், பதவி, சொத்து, சுகம் எல்லாம் இருந்தாலும், நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது.
அதைவிட கொடுமை தவறான வழியில் சம்பாதித்த பணமும், பொருளும் அதனுடன் சேர்ந்ததுதான் சிறைவாசம் மற்றும் கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு இது இல்லாமல் யாராவது இருக்கிறார்களா? இதையும் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.மேலும்,
இப்படி மனித வாழ்க்கை என்பது இருப்பவனும் போராடிக் கொண்டிருப்பான். இல்லாதவனும், போராடிக் கொண்டிருப்பான் .ஆனால், பிச்சை எடுப்பவன் நிம்மதியாக இருப்பான். கூலி வேலைக்கு போகிறவன் நிம்மதியாக இருப்பான். ஏன் கடவுள் இவ்வளவு கொடுத்தும், இவர்களால் சந்தோஷமும், நிம்மதியும் வாழ்க்கையில் அனுபவிக்க முடியவில்லை?
அதற்கு என்ன காரணம் ஒரு பக்கம் அநியாய வழியில் பணம் சம்பாதிப்பது, அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பது, சட்டத்தை ஏமாற்றிப் பிழைப்பது, உறவுகளை ஏமாற்றி பிழைப்பது, தான் பிறந்த ஜாதியை அல்லது குலத்தையும் ஏமாற்றிப் பிழைப்பது ,இப்படி பல வகைகளில் ஒரு மனிதன் இங்கு உள்ள சூழ்நிலையை பயன்படுத்தி ,ஒருவரை ஒருவர், ஏமாற்றி பிழைப்பது இன்றைய அரசியல் வாழ்க்கையாக்கி விட்டார்கள்.மேலும்,
அரசியலில் சம்பாதிக்கின்ற பணத்தை வைத்து அவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அதேபோல் சினிமாவில் பல கோடிகளை சம்பாதிக்கின்ற பணத்தை வைத்து அவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. ஒரு நேரத்தில் அந்த பணம் இருக்கிற இடம் தெரியாமல் போகிறது.
எத்தனையோ நடிகர், நடிகைகள், படம் முதலாளிகள் ,இயக்குனர்கள் எல்லோரும் கீழே தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் உயரத்திற்கு வந்தவர்களும் உண்டு. வந்தும் பல பேர் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி வாழ்க்கை என்பது எந்த நேரத்தில் ,எது நடக்கும் என்று ஒரு அரிது யட்டு கூறமுடியாத ஒரு சம்பவம் ஆகத்தான் இன்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,
மனிதன் என்று சொல்வதற்கு அர்த்தம் என்ன? மனம், அறிவு, உணர்வு, இது எல்லாம் ஒருவரிடம் இருக்கிறது என்பதனால் தான், அவரை மனிதன் என்று சொல்கிறோம். ஆனால், இப்போது இருக்கின்ற மனிதர்கள் ஐந்து அறிவு பெற்ற ஜீவன் என்ன வீரமோ, விவேகமோ அதுதான் தெரிகிறது.
ஒரு மாடு ,ஆடு,நாய் போன்ற பல வளர்ப்புபிராணிகள் கூட மனிதனிடம் பாசமும், நன்றியும், விசுவாசத்தையும் காட்டுகிறது. ஆனால் மனிதன் அதைவிட கேவலமாக பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு பாசம் நேசம் உண்மை மறந்து சந்தோஷமும் நிம்மதியும் இழந்து விடுகிறான்.
கடந்த கால மக்களின் வாழ்க்கை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் பணம், பதவி, பட்டம் கார் பங்களா,எதுவுமே இல்லை. ஆனால், அவர்களிடம் உழைப்பு, உண்மை, அன்பு மட்டும் தான் இருந்தது. அவர்கள் சில காலம் ஆவது தன் உறவுகளுடனும், சமூகத்துடனும், சந்தோஷமாக நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போனார்கள் . ஆனால் இப்போது பணம், பட்டம், பதவி, சொத்து சுகம் ,எல்லாம் இருக்கிறது. ஆனால், நிம்மதியும் ,சந்தோஷமும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அது கேள்விக்குறியாய் போனது எதனால்? என்பது இப்போதாவது புரிந்ததா?