கடமைக்கு தேர்தல் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் நம்பிக்கையாக தேர்தல் நடத்துமா?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வாக்காளர்களுக்கு காசு பணமும், இலவசமும் வேண்டுமா? அல்லது அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி வேண்டுமா? எதை நோக்கி அரசியல்? எதற்காக அரசியல்? மக்களாட்சி என்பது வாக்களிக்கும் உரிமை மட்டும்தான் அதை தீர்மானிக்கிறது. அந்த தீர்மானிக்கும் உரிமையில் இருக்கக்கூடிய மக்கள் அரசியலில் மக்கள் பணத்திற்காக அரசியல் கட்சியினரிடம், தங்கள் வாக்குகளை விற்றும், இலவசங்களைப் பெற்று, தங்களின் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்காமல், அவர்களிடம் கட்சி கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அரசியல் தெரியாதவர்கள், சுயநல அரசியல் பின்னால் நிற்கிறார்கள்.

மேலும், அரசியலுக்கு ரவுடிகள், கிரிமினல்கள், பேச்சாளர்கள் எதற்கு? இவர்களெல்லாம் எந்த நோக்கத்திற்காக அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் இருக்கிறார்கள்? இவர்கள் செய்யும் வேலை என்ன? எதற்காக அரசியலுக்கு வருகிறார்கள்? இவர்களுடைய கட்சி பணியை செய்யவா? அல்லது மக்களுக்கு சமூக சேவை செய்யவா? இது தெரியாமல் இவர்களை கட்சி என்று பேசிக் கொண்டிருப்பது வீண் வார்த்தை. அது மட்டுமல்ல, அந்த கட்சிக்குள் எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருப்பவர்கள், எப்படி மக்களுக்கான சேவைகளை இவர்கள் செய்வார்கள்? சேவையாற்ற தான் கட்சியினர் தேவை.

Youtube பில், லெட்டர் பேடில், கட்சி நடத்திக்கொண்டு, மக்களை ஏமாற்றுவது அரசியல் கட்சிகளின் வேலை அல்ல. மேலும், மேடைக்கு மேடை ஒருவரை ஒருவர் அரசியல் விமர்சனங்களை பேசி, புனிதராக்கிக் கொள்ளக் கூடாது. அப்படி ஊழல் செய்து கொள்ளையடித்திருப்பவர்களை இதுவரை எத்தனை எதிர்கட்சிகள், அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களுடைய ஊழல் சொத்துக்களை மக்களிடம் சேர்த்து இருக்கிறது? மக்களிடம் உத்தமனாக பேசுவது அரசியல் அல்ல. அது மக்களை ஏமாற்றும் வேலை. உத்தமனாக வாழ்ந்து காட்டி சேவை செய்வதுதான் அரசியல் கட்சிகளின் வேலை. அதுதான் அரசியல்.

அதனால், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள், அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாதவர்கள், தங்களை அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு கொள்ளை கும்பலாக மாறி இருப்பது வெட்கக்கேடான ஒன்று. கொள்கைக்காக அரசியல் தானே தவிர, கொள்ளை அடிப்பதற்கு அரசியல் தேவையில்லை. உழைப்பவனை முன்னேற்றுவதற்கு தான் அரசியல் தேவையே தவிர, ஊரை ஏமாற்றுபவனை உயர்த்துவதற்கு, அரசியல் தேவையில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், தெரிந்து கொண்ட மக்களிடம் இவர்களுடைய ரவுடிசம், இலவசம், ஓட்டுக்கு பணம், எதுவும் வேலை செய்யாது. எப்போது மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களோ, அப்போது இவர்கள் எல்லாம் வீட்டிற்குள் சென்று விடுவார்கள் என்பது உறுதி. அதனால், வாக்களிக்கும் மக்கள், காசுக்காக, பணத்திற்காக, இலவசத்திற்காக வாக்களித்தால், உங்கள் உரிமையை அந்த பணத்திற்காக அன்றே விற்று விட்டீர்கள் .அந்த உரிமையை விற்காமல் ,அது நம் வாழ்க்கையின், வளர்ச்சிக்கான தளம் என்பதை ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்தியுங்கள். இதை தேர்தல் ஆணையம் மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும் .

மேலும், அதிமுக, திமுக மாறி மாறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இவர்களுக்கு தேர்தல் நடத்துவது ஒரு தேவையற்ற வேலை. அதைவிட யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ, குட்டை, குளங்களில் மீன் ஏலம் எடுப்பது போல, எடுத்துக் கொள்ளும் நிலைதான், இன்றைய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல், இதை மாற்றுங்கள். சட்டத்தின் ஓட்டைகளை அடையுங்கள். சாமானிய மக்களும் ,அடித்தட்டு மக்களும், விவரமான வர்கள் இன்று புலம்புவது, நாம் ஓட்டு போட்டு இவர்கள் ஜெயித்து வந்து விட்டால், இவர்களை ஐந்து வருடம் வரை கேட்கவே நம்மால் முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த நிலை எல்லாம் மாற வேண்டும்.

தேர்தல் ஆணையம் இலவசமும், ஓட்டுக்கு பணமும் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தேர்தல் சின்னங்கள் இன்றி மக்கள் வாக்களிக்க வேண்டும். சின்னமும், அரசியல் கட்சியும் மக்களை உயர்த்தும் என்ற நம்பிக்கை வீணானது. அதனால், தேர்தல் ஆணையம் கடுமையான சட்ட விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

 மேலும், ஈரோடு போன்ற இடைத்தேர்தல் அல்லது ஒரு மாநிலத்தின் தேர்தல் மாநிலம் விட்டு மாநிலத்தின் தேர்தல் அதிகாரியாக இருக்க வேண்டும். அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய எந்த ஐஏஎஸ் அதிகாரியும், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க கூடாது. அதேபோல், முக்கிய மாவட்ட அதிகாரிகளையும் நியமிக்க கூடாது. ஆனால், மொழி பிரச்சனை முக்கியமாக பார்க்க வேண்டிய இருப்பதால் வேறு வழியில்லை.

 இருப்பினும் நேர்மையான அதிகாரிகள், தேர்தல் களத்தில் மட்டுமே செயலாற்ற அவர்களுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டும். தவிர, எக்காரணத்தை முன்னிட்டும் ஆசிரியர்களை தேர்தல் பணியாளர்களாக பணி நியமனம் செய்யக்கூடாது .இந்த பணியினை அந்தந்த மாநில மொழி தெரிந்த ராணுவத்தில் பணியாற்றுபவர்களை ,தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்த கள்ள ஓட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

 இது தவிர, ஆன்லைன் ஓட்டு பதிவை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் 100% வாக்கு பதிவு நடைபெறும். இந்த ஆன்லைன் வாக்கு பதிவு ,குறைந்த பட்சம் எஸ் எஸ் எல் சி தேர்வு வெற்றி பெற்ற வாக்காளர்கள் அதில் இடம்பெற வேண்டும். மற்றவர்கள் எல்லாம் இந்த நடைமுறையிலே தேர்தல் நடத்த வேண்டும். இந்த முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தால், செலவு மிச்சமாகும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அரசியல் கட்சிகள் குறைத்துக் கொள்ளும். இவை எல்லாம் முக்கிய கருத்தில் கொண்டு ஜனநாயகத்தின் நம்பிக்கையாக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும்.

ஜனநாயகத்தின் நம்பிக்கையாக தேர்தல் இல்லாமல் இருப்பதால் தான் ,ஊழல்வாதிகள் பணம் கொடுத்து மக்களிடம் வாக்குரிமையை விலைக்கு வாங்குகிறார்கள். ரவுடிகள், கிரிமினல்கள், தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். மேலும், ஒவ்வொருவருடைய கௌரவம் என்ன? தகுதி என்ன? திறமை என்ன? அவர்களுடைய சேவை என்ன? இதையெல்லாம் தேர்தல் ஆணையம் மக்களிடம் வெளிப்படையாக தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய கடமையாக கொண்டு வர வேண்டும்.மேலும், தேர்தல் ஆணையத்தின் கடமைக்கு தேர்தல்! என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை தான் என்பதை வாக்காளர்களும், அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் புரிந்து கொண்டால் சரி.-மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *