கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்! தமிழகத்திற்கு கபினி அணையிலிருந்து நீர் திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

கர்நாடக கபினி அணையிலிருந்து வெளிவரும் உபரி நீர், தமிழகத்திற்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று மாலை அல்லது இரவுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வெளியேற்றியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதை தான், கர்நாடக அரசு நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நியாயமான முடிவை எடுத்து நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்.

உங்களுக்கு தேவை என்றால், நாங்கள் தண்ணீர் விட மாட்டோம். எங்களுக்கு மிஞ்சிப் போனால் நாங்கள் திறந்து விடுவோம். இது இரண்டுமே தவறான அரசியல்.

இன்னும் கர்நாடக மக்களுக்கும், அரசுக்கும்,புரியும் படி சொன்னால், அணைகளில் அதிகமாக தண்ணீர் நிரம்பிவிட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே வருகிறது.

உங்களை தண்ணீர் திறக்க கூடாது என்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தால், உங்கள் கதி என்ன ஆகும்? வெள்ளத்தில் மிதப்பீர்கள் . தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்வதற்கு யாருக்கும் ,உரிமை கிடையாது.

குடிப்பதற்கு கேட்டால் ,கூட கொடுத்து தான் ஆக வேண்டும். அப்படிப்பட்ட தண்ணீரை கர்நாடகா அரசு இதை வைத்து அரசியல் செய்கிறது என்றால் இதை விட கேவலமான politics எதுவும் இல்லை. இது கர்நாடகா அரசுக்கு புரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *