கள்ளக்குறிச்சியில் கலாச்சாராய சாவு திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறதா ?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 21, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ ,அத்தனை அரசியல் கட்சிகளும் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் .இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் உயர்நீதிமன்றம் தமிழக அரசை இது சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளது.

இது தவிர, அதிமுக, பாமக, பிஜேபி போன்ற கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வலியுறுத்தி வருகின்றனர். இது அரசுக்கு வரும் நெருக்கடியும், தலைவலியும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதை வைத்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களிடம் அரசியல் செய்வது ஒரு புறம் இருந்தாலும், உயிர் பிரச்சனை என்பதுதான் இங்கே முக்கியமாக பார்க்க வேண்டி உள்ளது. ஒரு மனித உயிரை அலட்சியமாக பார்க்க முடியாது.

மேலும், இது திமுக அரசுக்கு தலையில் விழுந்த முதல் அடி என்று தான் சொல்ல வேண்டும். எந்த திமுக கட்சி, மதுவை வைத்து ஆரம்பத்தில் சம்பாதித்தார்களோ, அதிலிருந்து தொடர்ந்து இன்று வரை அந்த மதுவை தமிழ்நாட்டில் வளர்த்தது தான் மிச்சம். எடப்பாடி ஆட்சியில் மு க ஸ்டாலின் கருப்புக் கொடி ஏந்தி கருப்பு துணி அணிந்து மதுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து விட்டார் .தேர்தல் அறிக்கையில் நாங்கள் வந்தால் மதுவை ஒழிப்போம் என்றார்கள். அதுவும் இல்லை அதனால், இந்த மதுவே இந்த ஆட்சியை ஒழித்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.மேலும்,

எம் எல் ஏ வேல்முருகன், விசிக எம்எல்ஏ ,காங்கிரஸ் செல்வ பெருந்தகை, முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் ஜூவாகருல்ல பலர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் கூட்டணி கட்சியில் இருந்தாலும், அரசியல் தெரிந்து பேசுகிறார்களா? இல்லை தெரியாமல் பேசுகிறார்களா? தெரியவில்லை. ஆட்சி அதிகாரம் எல்லாம் திமுக விடம் இருக்கிறது. திமுக தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

 இதில் யார்? கட்சிக்காரர்கள் தவறு செய்தார்களா? அல்லது அதிகாரிகள் தவறு செய்தார்களா ?அல்லது எம்எல்ஏ, எம்பி ,மந்திரிகள் தவறு செய்தார்களா? ஒட்டுமொத்தமாக அதிகாரிகள் தலையில் போட்டுவிட்டு, ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொள்வது இயற்கை. அதேபோல் தான் இவர்கள் பேசி இருக்கிறார்கள். இது ஒரு முக்கியமான தமிழ்நாட்டு பிரச்சனை. 

இந்த பிரச்சனை அதிகாரிகள் அனைவரும் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனை என்று வந்தால் அரசியல் கட்சிகள் அதிகாரிகள் மேல் தூக்கிப் போட்டுவிட்டு, இவர்கள் தப்பித்துக் கொள்வது வழக்கம். அதையே தான் திமுக இதில் செய்ய பார்க்கிறது. அதனால், இப்ப பிரச்சனை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் தான் உண்மை வெளிவரும் .மேலும், திமுக அரசியல் வட்டாரத்தில் இப் பிரச்சினையை எப்படி சமாளிக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *