கார்த்திக் சிதம்பரம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியும், பிஜேபியின் 15 லட்சமும் அப்படித்தான் – தமிழ்நாட்டின் அரசியல் இதுதானா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கார்த்திக் சிதம்பரம் அரசியல் விளம்பரத்திற்காக எதையாவது ஒன்று சொல்ல வேண்டும் என்று பேசுகிறாரா? அப்படி பேசினாலும் நடிகர் வடிவேலு சொல்வது போல் எதையாவது புதுசு,புதுசா, கண்டுபிடித்து அல்லவா?பேச வேண்டும்.

ஏற்கனவே,பேசிய டயலாக்கை பேசிக் கொண்டிருக்கிறாரே!, பிஜேபி எப்போ தேர்தல் அறிக்கையில் 15 லட்சம் கொடுப்பதாக சொன்னது? அந்த அறிக்கையை கொஞ்சம் வெளியில் விட்டால் ஆவது மக்களுக்கு தெரியும்..

திமுகவின் தேர்தல் அறிக்கை 600 பக்கங்கள் கொண்டது. அதை இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும் திமுக செய்ய முடியாது. இருப்பினும்,,திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்ன நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துவிட்டார்.

அதனால் தேர்தல் வாக்குறுதிகள் என்பது மக்களுக்கு அதை படித்துப் பார்க்க தான் நிறைவேற்றுவதற்கு அல்ல.

காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தபோது சொன்ன தேர்தல் அறிக்கையில், ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார்களா? அதனால் மக்களுக்கு புதுசு, புதுசா பொய்யை சொல்லி அரசியல் செய்வதுதான் இந்த காலத்தின் அரசியல். பழைய டயலாக் அரசியலையே சொல்லிக் கொண்டிருந்தால்,மக்களுக்கு அது அலுத்து போய் இருக்கும்.

திமுகவின் கூட்டணியில் இருந்து கொண்டு, ஒரு பக்கம் மறைமுகமாக திமுகவை தாக்கியும், மற்றொரு பக்கம் பிஜேபியை தாக்கியும்,இந்த அரசியல் மக்களுக்கு அலுத்து போய்விடுகிறது. எத்தனை நாளைக்கு தான் நீங்கள் ஒருவரை ஒருவர் தீட்டிக்கொண்டு,அரசியல் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்?

மேலும், எதிர்க்கட்சிகள் அனைவரும் பிஜேபியை குறை சொல்கிறீர்கள். இப்படி ஒருத்தரை, மாற்றி குறை சொல்லிக் கொள்வதும் திட்டிக் கொள்வதும் மக்கள் அதை பார்த்து ஆறுதல் அடைவதும் இதிலேயே யார் உத்தமர்கள் என்று நீதிமன்றத்திற்கு போய் விசாரணை வைக்க முடியாது.

மேலும், கார்ப்பரேட் ஊடகங்கள் உங்களுக்கு கொடுக்கின்ற நல்ல சர்டிபிகேட் வைத்து அரசியலில் யார் நல்லவர்கள்? என்று கணிக்க முடியாது.

அதனால், மக்களை ஏமாற்ற, எப்படி எல்லாம் பேசுவது? தான் தமிழ்நாட்டின் அரசியல்.

மக்கள் விழித்துக் கொண்டால்!பிழைத்துக் கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *