காலமே!உனக்கு ஒரு கவிதை எழுதினேன்! அந்த கவிதைக்கு! உன் காதல்! நீ கொடுக்கும் பரிசு புதிய வாழ்க்கையா …..?

ஆன்மீகம் உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பயணங்கள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மனித வாழ்க்கை காலத்தின் கையில்! ஆனால், மனிதன் நினைப்பது அதிகாரத்தின் கையில்! இதில் எது வெற்றி பெறுகிறது? அதுதான் , வாழ்க்கையின் வெற்றி! தோல்வியா?

எவரும் உன்னை வென்றதில்லை! உன்னை வெல்பவர்கள் யார்? எல்லோரும் நீ போட்ட பிச்சை தான் வாழ்க்கை! அதன் ஏற்றத்தாழ்வு புரியாமல், தெரியாமல் வாழ்ந்து இறந்த மனிதர்கள் பல கோடி! கொடுப்பதும் நீ ! எடுப்பதும் நீ! காலமே! உலக வாழ்க்கையை நீ தந்த பரிசு!

ஹே !மனிதா !வாழ்க்கை உனக்கு எளிமையாக இருக்கும் போது ,!அது எவ்வளவு சந்தோஷமானது? அதுவே, ஆடம்பரமாகும் போது, அது எவ்வளவு வேதனைகளை அனுபவிக்கிறது? அந்த வேதனைகள் உனக்குள்ளே முள்ளாக குத்தும்போது ,அதன் வலிகள் தாங்கும் சுகமான சுமைகளா?

இல்லை உன் !ஆடம்பர வாழ்க்கையின் சுகமான வலிகளா? காலன் உன்னை பார்த்து சிரிக்கிறான் .எதற்கு ?இந்த வாழ்க்கை? இயற்கையோடு வாழும்போது ,உன் மனதுக்கு எத்தனை சந்தோஷம் ?எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அது கிடைக்கும்?

உன் அம்மாவின் அன்பும், அப்பாவின் உறவும், உடன் பிறந்த சகோதரர்களோடு பாசத்தின் வாழ்வும், பகையும், வெறுப்பும். இனி காலம் அதை உனக்கு கொடுக்குமா? நாளெல்லாம் விவசாயத்தின் பெருமை, சந்தோஷத்தில் வாழ்ந்த நீ!

ஏட்டினில் எழுதி வைத்து! எத்தனை செய்திகள் சொன்னாலும், அந்தக் காலத்தின் சுவை கண்முன்னே வரும்போது, எதற்கு இந்த வேஷம்? காலமே வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டால்! காலமே சந்தோஷமும், துக்கத்தையும், கொடுக்கும்போது, வாழ்க்கை! உன்னை புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கிறதா? இல்லை

இல்லை!என்னை காலம் அதன் பெருமைகளை கவிதை எழுத சொல்லுகிறதா? நான் என்ன காலத்தின் கருவியா? காலமே உன் பெருமையை உணர்ந்து விட்டேன். நான் எழுதும் கவிதை! உனக்கு! பணம் அதுக்கு ஈடு ஆகுமா?

சத்யம், தர்மம் சாகாமல்! உலகை வழி நடத்தும் உன் ஆட்சிக்கு! மனிதனின் அதிகாரம்! உன் கையில் அல்லவா? பிறப்புக்கும், இறப்புக்கும்! வாழ்க்கை பயணத்தின் உன் கால சட்டத்தில்! வெற்றி பெற்றவர் எவர்? காலமே!உனக்கு ஒரு கவிதை இது! என்னை வாழ வைப்பாயா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *