கடவுள் என்பவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். எல்லா மதங்களையும் நேசிக்கக் கூடியவர் தான் கடவுள். அவருக்கு தான் அந்த தகுதி.
உண்மையான பக்தன் எந்தக் கடவுளை வணங்குகின்ற பக்தனாக இருந்தாலும், அந்த பக்தன் அல்லது அந்த மத போதகன் எந்த கடவுளையும், பழித்து, இழித்து பேச மாட்டான். கடவுள் மீது நம்பிக்கை இல்லாத இவர்கள் இயேசுவைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை .இயேசுவின் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கிறிஸ்துவ மக்கள் அது கூட தெரியாமல் ,முட்டாள் ஜனங்களாக இவர்களிடம் மாட்டிக் கொண்டு ,இவர்கள் சொல்வது தான் வேதம் இவர்கள் சொல்வது தான் கடவுள் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடவுளுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் மதபோதகன் என்று சொல்லிக் கொள்கிறான். இது மோகன் சார்லஸ் முதல் இந்த கிருத்துவ மத வியாபாரிகள் அனைவரையும் இயேசுவை காட்ட சொல்லுங்கள். அவர் எங்கே இருக்கிறார்? ஜெபத்தால் அவரை வரவழைக்க சொல்லுங்கள்? இவர்களுடைய திறமை என்னவென்று தெரிந்து விடும் .கதை சொல்லி சபித்து விடுவோம் என்று ஏமாற்றிக்கொண்டு, சாபம் விடுவோம் என்று ஏமாற்றிக் கொண்டு ,ஒரு முட்டாள்கள் கூட்டம் மதத்தின் பெயரால் கிருத்துவ மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .கடவுள் எல்லா மதத்திலும் இருக்கிறார். எல்லோருடைய நம்பிக்கையிலும் கடவுள் இருக்கிறார். அவர் எல்லாமாக இருக்கிறார்.
தெரியாதவனுக்கும் கடவுள், தெரிந்தவனுக்கும் கடவுள், படித்தவனுக்கும் கடவுள், படிக்காதவனுக்கும் கடவுள், ஏமாற்றுபவனுக்கும் கடவுள்,திருடனுக்கும் கடவுள், நல்லவனுக்கும் கடவுள், கெட்டவனுக்கும் கடவுள், தன்னையே ஏசு பேசுபவனுக்கும் கடவுள், தன்னை புகழ்ந்து பாடுபவனுக்கும் கடவுள் ,அவன் நிலை தெரியாமல் ஏமாந்து ,இந்த மத போதகர்களிடம் தங்களுடைய வாழ்க்கையை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
மதம் என்பது கடவுளை அடைவதற்கு தான், கடவுளுடைய கருணையை பெறுவதற்கு தான் மதம். அங்கே போய் ஒரு மதத்தை இழிவு படுத்தி, வேறொரு மதத்தை புகழ்ந்து, அந்த இயேசுவே அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் .மேலும் இவர்களையெல்லாம் பாராட்டி எத்தனையோ பத்திரிகை கம்பெனிகள், தொலைக்காட்சி கம்பெனிகள், காசு வாங்கிக்கொண்டு, இவர்கள் மக்களை முட்டாளாக்கி பேசுவதற்கு சில தொலைக்காட்சிகள் இதையும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். அதனால் மக்கள் தான் இனி விழிப்புடன் இருக்க வேண்டும். மதம் மாற்றி மக்களை ஏமாற்றுவது, ஒரு மதத்தின் வேலை அல்ல. இது மத போதகர்களின் வேலையும் அல்ல .
இப்படிப்பட்ட மத புரோக்கர்கள் கிருத்துவ மதத்தின் கௌரவத்தையும், அந்த மக்கள் ஏசு மீது வைத்துள்ள நம்பிக்கையும், சீர்குலைக்கும் வேலை. அது மட்டுமல்ல, இது போன்ற மத அரசியல் வியாபாரிகள் சர்ச்சுகளில் ஆடுகின்ற ஆட்டம் மிகவும் கேவலமானது. இதையெல்லாம் இயேசு எப்படி சகித்துக் கொள்கிறார்? என்பது தெரியவில்லை .மேலும் மக்களை ஏமாற்றுவது போல, சமூக நன்மைக்காக போராடுகின்ற பத்திரிகைகள் இப்படிப்பட்ட அவலங்களை பார்த்துக் கொண்டு கேட்டுக்கொண்டு சும்மா இருக்காது.
மேலும், திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட கிருத்துவ மத வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இவர்கள் அலட்சியமாக, அனாசியமாக, தேவையில்லாத பேச்சுக்களை எல்லாம் கடவுளை இழிவு படுத்தியும் ,இந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தியும், பேசிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்படி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே யாராவது இந்துக்கள், கிறிஸ்துவ மதத்தையும், கடவுளையும் இழிவு படுத்தினால் அல்லது இழிவு படுத்தி பேசினால் அவர்கள் சும்மா இருப்பார்களா? இது மத மோதலை ஏற்படுத்துகின்ற கருத்துக்கள் .
இப்படி பேசிய இந்த மத போதகர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது இனி அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாட்டில் மதக்கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை தமிழக அரசு முதலிலேயே தடுத்துக் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. ஏனென்றால் ,இவர்களுடைய வாக்குக்காக, இவர்கள் எப்படி பேசினாலும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்காதீர்கள்.
இந்த சிறுபான்மை மக்கள் போட்டு ஜெயித்து விடுவோம் என்ற கனவிலும் இருந்து கொண்டிருக்கிறீர்கள். வரும் தேர்தலில் பெரும்பான்மை ஓட்டுக்கள் ஜெயிக்கப் போகிறதா? அல்லது சிறுபான்மை மக்கள் ஓட்டுகளை நம்பி இருக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு சிறுபான்மை ஓட்டுக்கள் ஜெயிக்கப் போகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? மேலும், இதற்கு தமிழ்நாடு சமூக நலப் பத்திரிகையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது .