கவர்னர் ஆர் என் ரவி சீர்காழி சட்டநாதர் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு சிதம்பரம் வழியாக சென்று கொண்டிருக்கும்போது, இடையில் ஆளுநருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கவர்னர் சென்றது கோயிலுக்கு, வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாலும் பரவாயில்லை. அவர் சாமி கும்பிட சென்றிருக்கிறார் .அங்கே இவர்கள் கருப்புக்கொடி காட்டி, ஆளுநரே திரும்பிப் போ என்று கோஷம் எழுப்பினார்கள். இதற்கும், இவர்களுடைய கோஷத்திற்கும், என்ன சம்பந்தம்? ஏன்? இவர்கள் ஆளுநரை திரும்பப் போ என்று கோஷம் போட வேண்டும்? ஆளுநர் கும்பாபிஷேகத்திற்கு செல்கிறார். இதனால், இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆளுநர் வேறு அரசு விழாவாக இருந்தாலும் பரவாயில்லை .ஆனால், சாமி கும்பிட சென்றவருக்கு ஏன்? இவர்கள் கருப்புக்கொடி காட்டி, திரும்பப் போ என்ற கோஷம் போட வேண்டும் ? தமிழ்நாட்டில் பல சங்கங்கள் ,அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற புள்ளி விவரங்கள் ஆளுநர் கையில் இருக்கிறது.
எத்தனை அமைப்புகள் இல்லீகள் ஆக்டிவிட்டி – யில் (Tamil Nadu till illegal activities) ஈடுபட்டுள்ளனர் ?அந்த பிரச்சனையை மையமாக வைத்து தான் இவர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பி இருக்கலாம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. மேலும் ,இவர்களுக்கும், ஆளுநருக்கும் எந்த ஒரு செயல்பாடும் இல்லாதபோது, இவர்கள் எதற்காக ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும்? இதுவரையில் எந்த ஆளுநருக்கும், இந்த அமைப்புகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை காட்ட வில்லை. இப்போது காட்ட வேண்டிய அவசியம் என்ன ?இதுதான் பொது மக்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு,அரசியல் கட்சியினருக்கு, உள்ள சந்தேகம் என்கின்றனர்.மேலும்,
ஆளுநர் தமிழ்நாட்டின் அனைத்து அரசியலமைப்புகள், அதை சார்ந்த அமைப்புகள், அவர்களுடைய செயல்பாடுகள்? அவர்களுக்கு வருமானம்? எப்படி பணம் எப்படி வருகிறது? இது எல்லாம் ஆளுநர் மொத்தம் தோண்டி எடுத்து இருப்பார் என்பதுதான் எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து. மேலும் ,இப்படிப்பட்ட சங்கங்களுக்கு ,அமைப்புகளுக்கு அரசியல் கட்சிகளுக்கு, எப்படி பணம் வருகிறது? இதை எல்லாம் நிர்வாகம் செய்ய என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது?
மேலும், இவையெல்லாம் எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறது? மக்களுக்காக செயல்படுவது போல் இருந்தாலும், பொது நலத்தில் அக்கறை காட்டுவது போல் இருந்தாலும், நோக்கங்கள் வேறு திசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மைகளை ஆளுநர் அறிந்திருக்க வேண்டும். அதேபோலத்தான், தமிழ்நாட்டில் பல அமைப்புகள், இயக்கங்கள் இவர்களுக்கு இதையெல்லாம் நடத்த எங்கிருந்து பணம் வருகிறது? இதை மத்திய உளவுத்துறை கையில் எடுத்திருக்க வேண்டும்.
இல்லை என்றால், இவர்கள் இவ்வாறு கொதித்து ஆர்ப்பாட்டம், கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியம் என்ன? ஆளுநர் தமிழ்நாட்டை ஆளவில்லை. அவரே இல்லை என்றால் ,தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமாக இருக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை .ஏதோகெட்டதிலும் ஒரு நல்லது, தமிழகத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி இருப்பது, அப்பாவி மக்களுக்கு, பாமர மக்களுக்கு கிடைக்கின்ற ஒரு பாதுகாப்பு என்று தான் சொல்ல வேண்டும். அதனால், இப்படிப்பட்ட போராட்டங்கள், நாட்டில் நடத்தி எந்த பிரயோஜனமும் இல்லை.
அரசியல்வாதிகளின் ஊழல்களை எதிர்த்து போராடவில்லை. அவர்களின் அடாவடித்தனங்களை எதிர்த்து போராடவில்லை .மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களுக்கு எதிராக எதிர்த்து போராடவில்லை. இதற்கெல்லாம் காரணத்தை தேடிக் கொண்டிருக்கும் கவர்னரை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி?