
மாவட்ட அளவிலான சவுடு மண், கிராவல், கல்குவாரி, போன்றவற்றில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால், இந்த குவாரிகளை உடனடியாக ஆய்வு செய்ய தமிழக அரசு அனைத்து மாவட்ட கனிம வள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது ஏனென்றால்? சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் நேற்று நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக குவாரிகளில் முறையாக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப் படுகிறதா?

அல்லது முறைகேடாக குவாரிகள் செயல்படுகிறதா? இது பற்றி உடனடியாக ஆய்வு செய்து மாவட்ட கனிமவள அதிகாரிகள் அரசுக்கு ரிப்போர்ட் அனுப்ப உத்தரவு.