
தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக ஓட்டப் படும் சவடு மண் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும்,
திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில், சட்டத்திற்கு புறம்பாக சவுடு மண் குவாரியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நிறுத்தி வைத்தார். இருப்பினும், இந்த குவாரி மீண்டும் இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இந்த சவுடு மண் குவாரிக்கு கொடுக்கப்பட்ட 55 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் ஓட்டுகிறார்கள்.தவிர, கொடுக்கப்பட்ட 5000 லோடு மண்ணுக்கு மேலும், எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் நீர்வளத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிறுத்தியும் மீண்டும் இந்த குவாரி மண் ஓட்டி கிராம மக்களுக்கு பணம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இது போன்று தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது முறைகேடு என்று தெரிந்தும் இதற்கு அரசு அதிகாரிகள் துணை போகிறார்களா? என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்,தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டும், இது போன்ற சட்டத்திற்கு புறம்பான (illegal mining) செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், இங்கே நடவடிக்கை இல்லை என்பதுதான் பொதுமக்களின் வேதனை.
எனவே, இதை தேர்தல் ஆணையர் அர்ச்சனாபட் நாயக் உடனடி நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.