சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தவரின் சொத்து முடக்கி ,வழக்கும் தொடர்கிறது? இது பற்றி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மோசடி பேர்வழிகள் ,அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சிந்திக்கிறார்களா?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அமலக்கத்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை ,வருமானவரித்துறை போன்ற துறைகள் இல்லை என்றால், நாட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, கள்ள நோட்டுகள் ,ஊழல்கள், மோசடிகள், சொத்து குவிப்பு ,வரியைப்பு  போன்ற எந்த குற்றங்களும் கண்டுபிடித்து, அதற்குரிய தண்டனையை சட்டப்படி கொடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வருவது இந்த துறைகளாகும். இப்படிப்பட்ட துறைகள் நாட்டு மக்களின் நலன்களில், அக்கறை செலுத்த வேண்டிய துறைகள்.

 இவர்கள் ஒழுங்கான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாட்டில் ஊழல்வாதிகள், சட்டத்தை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் ரவுடிகள் தண்டிக்க படவில்லை என்றால் நாட்டில் ரவுடிசம் தலை தூக்குகிறது. நீதிமன்றம் இவர்களுக்கு சரியான தண்டனை சட்டப்படி வழங்கவில்லை என்றால், குற்றவாளிகள் சமூகத்தில் பெருகுகிறார்கள். பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இவர்களை நல்லவர்களாக மக்கள் முன் அடையாளம் காட்டினால், சமூகத்தில் நேர்மையானவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் இந்த மோசடி பேர்வழிகளுக்கும், வித்தியாசம் தெரியாமல் மக்கள் ஏமாந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பதவி என்பது அதிகாரம் என்பது மக்களால் கொடுக்கப்பட்ட அதிகாரம் .அந்த அதிகாரத்திற்கு இவர்கள் கௌரவமாக நடந்து கொள்கிறார்களா? அல்லது கிரிமினல்களாக நடந்து கொள்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்துவது ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கி வரும் மேற்படி துறைகள்தான் .மேலும் இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், எவ்வளவு ஆதாரங்கள் அவர்கள் திரட்ட வேண்டி இருக்கிறது? எப்படிப்பட்ட பொய் கணக்குகளை எழுதி வைக்கிறார்கள். அதையெல்லாம் தோண்டி பார்க்க வேண்டிய அவசியம் இந்த துறைக்கு உள்ளது. தவிர,

எவ்வளவு ஆதாரங்கள்? சேகரித்து அவர்களுடைய சொத்து கணக்கு, ஊழல் கணக்கு, அதில் அசையும் ,அசையா சொத்து, இவை அனைத்தையும் தோண்டி எடுத்து விடுகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட தவறுகளை செய்யக்கூடாது. நாம் நிம்மதியாக வாழ வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும் என்று யாராவது அதிகாரத்திலும், அதிகாரப் பின்னணியில் இருப்பவர்களும், அரசியல் கட்சி சார்ந்த இருப்பவர்களும் நினைக்கிறார்களா? இல்லை.

 எப்படியாவது சட்டத்தை ஏமாற்றி விடலாம். சமுதாயத்தை ஏமாற்றி விடலாம். சட்டத்தை ஏமாற்றும் போது, நீதிபதிகள் சரியான தண்டனை கொடுத்தால் நிச்சயம் இதற்கெல்லாம் நாட்டில் தீர்வு கிடைக்கும். ஆனால் எப்படிப்பட்ட தவறு செய்தாலும் ,அவர்கள் எல்லாம் பணத்தை கொடுத்து, நீதியை விலைக்கு வாங்கி விடலாம் .சட்டத்தை சாட்சியம் இல்லாமல் செய்து தப்பித்து விடலாம். அல்லது சாட்சிகளை விலைக்கு வாங்கி விடலாம். அல்லது நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விடலாம் .இப்படி தான் இவர்களுடைய கணக்கு போய்க்கொண்டிருக்கிறது.

 ஆனால், கடவுள் என்ற ஒரு சக்தி சிலரை தப்பிக்க வைக்கிறது.சிலரை தண்டனை அனுபவிக்க வைக்கிறது. அப்போது தண்டனை அனுபவிக்கும் போது தவறு செய்தவர்கள் ஏன்? இப்படி சம்பாதித்தோம் என்று வருத்தப்படுவார்கள். ஆனாலும், அதிலிருந்து எப்படி தப்பிப்பது? அது ஒரு பக்கம் ஒரு மன உளைச்சலை ஏற்படுத்தும், அடுத்தது அவர்களுடைய சொத்து முடக்கப்பட்டு, பல பேருக்கு இவருடைய சட்ட மோசடிகள் சமுதாயத்திற்கு தெரிந்து விடுகிறது.

 அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் 20 நாட்களுக்கு மேலாக இருந்தார். அதேபோல் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர். தவிர அதிமுக, திமுகவில் இன்று பல அமைச்சர்கள்,  எம்பிக்கள் ,எம் எல் ஏக்கள் ,அரசியல் கட்சியினர் இந்த சட்ட வளையத்திற்குள் வந்து விடுகிறார்கள். இது தவிர, தற்போது சட்டவிரோத லாட்டரி விற்பனையில் சம்பாதித்த கோவை மார்ட்டின் அமலாக்க துறையால் விசாரிக்கப்பட்டு

 சட்ட விரோதமாக சம்பாதித்த 457 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று தன்னுடைய twitter இல் பதிவு செய்துள்ளார். மேலும்,

 அமலாக்கத்துறை இவருக்கு சொந்தமான வீடுகள், தொழில் நிறுவனங்கள், அனைத்திலும் சோதனை செய்துள்ளது . இப்படி சட்டத்துக்கு சமூகத்துக்கு எதிரான குற்றங்களை செய்பவர்கள் அனைவரும் அரசியல் பின்னணியில் நல்லவர்கள் வேஷம் போட்டுக் கொண்டு, உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இது பற்றிய உண்மை பாமர மக்களுக்கு தெரியாது. இதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மீண்டும் ,மீண்டும் அரசியலில் ஊழல்வாதிகளுக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்த விழிப்புணர்வு மற்றும் உண்மைகள் மக்களுக்கு தெரியாதது தான் இன்றைய அரசியல். மேலும்,

இந்த தவறை செய்யும் முதல் குற்றவாளிகள் பத்திரிகை ,தொலைக்காட்சிகள் தங்கள் சுய லாபங்களுக்காக அல்லது இவர்களுடைய சொந்த அரசியல் கட்சி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் எப்படி இதையெல்லாம் வெளிப்படுத்தும்? ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தால் வெளிப்படுத்தும் .தவிர, இன்று நடுநிலையான சமுக ஊடகங்கள் மிக மிக குறைந்துவிட்டது.

ஆனால், போலித்தனமான பத்திரிகைகள், சங்கங்கள், சோசியல் மீடியாக்கள் இன்று இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் தமிழக அரசின் செய்தித்துறைக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது செய்தி துறை அதிகாரிகள் இதற்கெல்லாம் அரசியல் சாயத்துடன் ஒத்து ஊதுகிறார்களா?

 மேலும், அரசியல் சட்டம் இப்படிப்பட்ட ஊடகத்தின் இழிவான செயல்களுக்கு தான் சலுகை, விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளதா? சட்டத்தின் முன் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இன்றைய ஊடகத்துறையும், அதிகாரிகளும் உள்ளனர்.

மேலும்,ஆட்சி அதிகாரத்தின் சுயநலம் மற்றும் பேராசையால் இவர்களின் சந்தோஷம், நிம்மதி, கௌரவம் கேள்விக்குறியாவதை இனியாவது சிந்திப்பார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *