சனாதனத்தை வைத்து அரசியல் ஸ்கெட்ச் போடும் திமுகவிற்கு சாதகமா? அல்லது பாஜகவிற்கு சாதகமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்களுக்கு தான் அரசியல் தெரியவில்லை பாடம் எடுக்க வேண்டி இருப்பதால் திமுக விற்கும். ஆட்சியாளர்களுக்கும் கூட இந்த நிலைமையா?

அரசியலில் மக்களிடம் அரசியல் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பலமுறை சொல்லியும் சனாதனம், இந்து தர்மம், ஜாதி வேற்றுமை வைத்து அரசியல் செய்வது கேவலமானது. ஜாதிக்குள் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை வைத்து, இந்த தருமத்தையும், இந்துக்களையும், கோயில்களையும், கடவுள்களையும், இழிவு படுத்தி அரசியல் செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

https://www.youtube.com/shorts/dGl6I_FgRXo?feature=share

 மேலும் ,திமுக  சனாதனத்தை எதிர்ப்பதால், அது பாஜகவிற்கு மிகவும் சாதகமானது. தமிழ்நாட்டில் பிஜேபி வளர்கிறது. திமுக தேய்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பிஜேபி நடத்திய திமுகவின் சனாதன எதிர்ப்பு கூட்டங்களில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்யவில்லை என்று இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டனர். கைது செய்து இருந்தால், இன்னும் பிஜேபியின் வளர்ச்சி அதிகரிக்கத்தான் போகிறது.

 தமிழ்நாட்டில் பிஜேபியின் வளர்ச்சியை திமுக தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ, அத்தனை வேலையும் செய்து பார்க்கிறது .அதற்காக சில youtube சேனல் நடத்துபவர்களை கூட கைது செய்து பார்த்துள்ளது. முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்து இருக்கிறார்கள். மேலும், மாநிலத் தலைவர் அண்ணாமலையும், என் மீது கை வைத்து பார் என்று தைரியமாகத்தான் பேசுகிறார். அந்த தைரியம் மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு வருமா ? என்பதும் சந்தேகம். இதனால், பிஜேபியை தமிழ்நாட்டில் வளர விட முடியாமல் செய்துவிட முடியாது.

 தவிர ,தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் போன்ற அனைத்து கட்சிகளும் பிஜேபியை தான் குறி வைத்து தாக்கி கொண்டு, பேசிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் செய்வது அரசியலா ? அல்லது சனாதனத்தை ஒழிப்பதா ? எதுவும் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சனாதனம் வேறு ,அரசியல் வேறு,அரசியலுக்கும், சனாதனத்திற்கும் சம்பந்தமில்லை. சனாதனம் இறை நம்பிக்கை, மத நம்பிக்கை, நீங்கள் மக்களுடைய மத நம்பிக்கையில் கை வைக்கிறீர்கள் .

அதுவும் விநாயகர் சிலை இங்க வைக்கக் கூடாது. விநாயகர் சிலைக்கு கட்டுப்பாடுகள், தேவையற்ற சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டு வருகிறீர்கள் .அவரைப் பற்றி விமர்சனம் செய்கிறீர்கள். இது எல்லாம் மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவது. இதனால், மக்களுக்கு திமுகவின் மீது வெறுப்பு தான் ஏற்படுமே ஒழிய, ஒரு காலும் நல்ல உறவு ஏற்படுத்தாது. இதனால், இந்துக்களின் வாக்கு நிச்சயம் சிதறும்.

 நீங்கள் பெரியார் சிந்தனையாளர்களாக இருந்தால், நீங்கள் ஏன் கடவுளை வழிபடுகிறீர்கள்?  உங்கள் குடும்பத்தில் ஏன் கடவுளை வழிபடுகிறார்கள்?  ஊருக்கு உபதேசம் என்று, உங்களுக்கு ஓட்டு போட்டதனால், நீங்கள் ஆட்சி செய்து கொண்டிருப்பதால் ,எதை சொன்னாலும் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டுமா?  இதுதான் மக்களின் கேள்வி?  மேலும் உங்கள் கொள்கையை மக்களிடம் திணிக்க கூடாது. அது இனி உங்களுக்கு தான் பாதகமாக முடியும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *