மே 05, 2024 • Makkal Adhikaram
நாட்டில் கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குறியாகி தான் வருகிறது. ஆட்சி ,அதிகாரம் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறதா? என்பதை உச்ச நீதிமன்றமும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவும் ஆய்வு செய்ய வேண்டும் .
அரசியல் கட்சிகளில் மேடைக்கு, மேடை ஒரு கட்சியை பற்றி இன்னொரு கட்சியினர் எத்தனையோ, பொய்களை பேசிக் கொள்கிறார்கள். செய்யாததை எல்லாம் செய்ததாக சொல்லிவிடுகிறார்கள். அதையும் இந்த பத்திரிகைகள் போட்டுக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் விற்பனை, ஊழல், இதையெல்லாம் ஸ்டாலின் நிர்வாகத்தால் சரி செய்ய முடியவில்லை. இது மக்களாட்சி ,மன்னர் ஆட்சி அல்ல .
மேலும், சவுக்கு சங்கர் ஒரு சாமானிய மனிதர், அவருடைய ஒரு சில தனிப்பட்ட மனிதர்களின் அல்லது காவல்துறையினரின் மீது சொல்ல கூடிய கருத்து ஏற்புடையது அல்ல, யாராக இருந்தாலும் அது தவறுதான். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும். அது நமக்கு தேவையில்லை. ஆனால், சவுக்கு சங்கர் காவல்துறை ஏடிஜிபி பற்றி சொன்னது தவறுதான். ஆனால், அரசியலில் சொன்ன விஷயங்கள் அது ஏற்புடையது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலே வெளியிட்டார். அவரை கைது செய்ய முடியவில்லை .அவர் மீது பொய் வழக்கும் போட முடியவில்லை .
ஆனால், சவுக்கு சங்கர் அரசியல் கட்சி பின்புலம் அவருக்கு இல்லை. ஒருவேளை மறைமுகமாக கூட இருக்கலாம். அது சொல்வதற்கு இல்லை. இங்கே சவுக்கு சங்கர் நேரடியாக ஸ்டாலின் குடும்பத்தை பற்றி அடிக்கடி செய்திகள் வெளியிட்டு வந்துள்ளார். இது ஒரு பக்கம் அவருடைய தைரியம், துணிச்சல் இருந்தாலும், ஆட்சி, அதிகாரம் ஸ்டாலின் இடம் இருப்பதால், எந்த விதத்திலும் அவருக்கு சட்டத்தின் மூலமோ அல்லது ரவுடிகள் மூலமோ நெருக்கடியை கொடுக்க முடியும் .
இது ஒரு தனிப்பட்ட மனிதன் மீது திமுக அரசு தாக்குதல் நடத்தி இதை சரி செய்து விட முடியாது. மக்கள் ஒவ்வொரு நாளும், ஆட்சியாளர்களை பற்றி, ஆட்சியின் நடவடிக்கைகளை பற்றி, தெரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதைப் பற்றி இந்த தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு திமுகவிற்கு தெரியும் .மேலும், எத்தனையோ கோடிகளை செலவு செய்து, உச்சபட்சமாக மீடியாக்களுக்கே பிரசாந்த் கிஷோர் சொன்னது போல 2600 கோடி செலவு செய்து இருக்கிறார் என்றால், வேட்பாளர்கள் எத்தனை கோடி செலவு செய்திருப்பார்கள்?
இதில் எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகைகளுக்கு ஒரு ரூபாய் விளம்பரம் கொடுக்கவில்லை என்பதுதான் எங்களைப் போன்ற பத்திரிகைகள் வேதனை தெரிவிக்கின்றனர் . இருக்கட்டும், எத்தனை நாளைக்கு இந்த கார்ப்பரேட் பத்திரிகைகள் திமுக அரசை காப்பாற்றும்? எங்களுடைய பத்திரிகைகளின் செய்திகள் நிதானமாக மக்களிடம் போய் சென்றடைந்தாலும், உண்மையை மக்கள் சிந்திக்காமல் இருக்க மாட்டார்கள். அதனால், மக்கள் மாற்றத்தை நோக்கி விரும்பும் போது, எத்தனை கார்ப்பரேட் பத்திரிகைகள் எவ்வளவு பொய்? சொன்னாலும், மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை .
அது கடந்த ஆட்சியில் வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்ற வாசகங்கள் அதற்கு சாட்சி .மேலும், இது பற்றி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து இப் பிரச்சினையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.நாட்டில் பத்திரிக்கை துறை, காவல்துறை, நீதித்துறை இவை எல்லாம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலகட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது . மக்கள்தான் மக்களாட்சியில் எஜமானர்கள் என்பதை புரிந்து ஆட்சி, அதிகாரம் செயல்படுத்த வேண்டும் . நல்லாட்சி மக்களுக்கு யார் கொடுக்கிறார்களோ, அவர்களை நோக்கி மக்கள்……..!