சாமானிய மக்களின் ரியல் எஸ்டேட் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களின் துறையாக மாற்றிய அதிமுக, திமுக அரசு.

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் சாமானியர்கள் சம்பாதித்து பல கோடிகளை ஈட்டியுள்ளனர். இதில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அறிய அதிக அளவில் மீடியேட்டர் இருந்துள்ளனர். இந்தத் துறையில், அதாவது ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை சாமானிய மக்களுக்கு எதிராக பல சட்ட விதிகளை மாற்றி விட்டனர் .

எடப்பாடி ஆட்சியிலிருந்து பலமுறை விதிமுறைகளை மாற்றி கார்ப்பரேட் நிறுவன கம்பெனிகளுக்கு சாதகமாக டிடிசிபி அப்ரூவல், இல்லாமல் வீட்டு மனைகளை விற்க முடியாது. அந்த நிலைமைக்கு விதிமுறைகளை மாற்றிவிட்டனர். அதுவும் இவருக்கு வேண்டியவர்களை நீதிமன்றத்தில் வழக்கு தொடர வைத்து, அதற்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றத்தின் மூலம் வாங்கி விட்டனர். இதில் ஒரு முக்கிய உண்மை அடங்கி இருக்கிறது.

 அது என்ன என்றால், இந்த டிடிசிபிக்கு ஆகும் செலவு , வீட்டு மனைகளை வாங்கும் சாமானிய மக்களிடம் தான் ,அதை ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வசுலிப்பார்கள். அதாவது, இவர்கள் சொல்லும் அங்கீகாரம் அற்ற வீட்டுமனை பிரிவு, இதில் புறம்போக்கு நிலம் இருந்தால் பரவாயில்லை, பட்டா நிலத்தில் வீட்டுமனை பிரிவுகளை போட்டவர்கள், குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்தார்கள்.

 அதுவே டிடிசிபி அப்ரூவல் வாங்கும் போது, அதனுடைய விலை 10 மடங்காக ஏற்றி வைத்து விட்டனர். இதற்கு காரணம் டிடிசிபி அலுவலகம் முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை, இதற்கு பணம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியாது. அப்படி செய்தால் அதில் பல குறைகள் இருக்கிறது என்று சொல்லி அலைக்கழித்துக் கொண்டிருப்பார்கள். இதில் இது சரி இல்லை, அதை இப்படி மாற்றுங்கள், அதை இப்படி செய்யுங்கள்  என்று சம்பந்தப்பட்ட நபரை வருட கணக்காக சுற்றி விடுவார்கள். அதனால், அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு தான் வேலையாகும்.

 இப்படி பணம் கொடுத்து, இடமும் 10% பூங்காவிற்கு ஒதுக்கி ,ரோடு இவர்கள் கேட்கும் அளவிற்கு ஒதுக்கி ,அதில் வேண்டிய மரம், குடிநீர் வசதி, தெருவிளக்கு எல்லாம் செய்தால் , இதையெல்லாம் வாங்குபவர் தலையில்தான் கட்டுவார்கள். இது தவிர, ஊராட்சி மன்றங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க விட்டால், அவர்கள் கையெழுத்து போட மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். இப்படி பல இடங்களில் கொடுத்துவிட்டு, இதை எல்லாம் செய்து வெளி வருவதற்குள் இந்த வீட்டுமனை பிரிவு போட்டவர்களின் நிலைமை, போட்ட இடத்தில் பாதி இவர்களுடைய செலவுக்கு சரியாகிவிடும்.

 மீதி பணம் இவர்களுக்கு லாபம் வருமா? என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வி ?அதனால், சாமானிய மக்களுக்கு ரியல் எஸ்டேட் துறை நஷ்டத்தை ஏற்படுத்துவதால், தற்போது யாரும் வீட்டுமனை பிரிவு போடுவதில்லை. அதை போடுபவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே, தற்போது இந்த ரியல் எஸ்டேட் துறையை செய்து கொண்டிருக்கிறது .இது பெரும்பாலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் உடைய பினாமி பணம் தான் இதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த பினாமிகளின் கருப்பு பணம் பல எம்எல்ஏ, எம்பி, மந்திரி, மாவட்ட செயலாளர், என்று பல கார்ப்பரேட் நிறுவன ரியல் எஸ்டேட் கம்பெனிகளில் முதலீடாக வலம் வருகிறது. இது வருடத்திற்கு பல ஆயிரம் கோடிகளை இந்த ரியல் எஸ்டேட் கம்பெனிகள் லாபம் பார்க்கிறது. இது ஒரு பக்கம், மறுபக்கம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொண்டிருக்கிறது. இரண்டு வேலைகளையும், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது.

மேலும், தற்போது அங்கீகாரம் அற்ற வீட்டுமனை பிரிவுகளை வன்முறை படுத்த மீண்டும், ஆறு மாத காலம் கால நீடிப்பு செய்துள்ளதாக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது .இதை பயன்படுத்தி வரன்முறை படுத்தாத வீட்டுமனை பிரிவுகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழக அரசு அறிவித்துள்ளது .

தவிர, இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், அரசின் விதிமுறைகள் சாமானிய ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அதிமுக அரசும், திமுக அரசும் செய்துள்ளதை மறுக்க முடியாது. அதனால், வேதனையில் சாமானிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *