சில கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள், திமுகவிற்கு சொந்தமானதாகவும், கூட்டணி சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், சில சிறிய, நடுத்தர பத்திரிகைகள் கூட அண்ணாமலையின் பேட்டியை அலட்சியமாக செய்தி போட்டு இருக்கிறது.
இந்த அதி புத்திசாலி பத்திரிகைகளை படித்துப் பார்த்தால், அண்ணாமலை பற்றி குறை சொல்லி இருக்கிறது. ஊழல்வாதிகளை புகழ்வதற்கு பத்திரிகைகள் தேவை. ஆனால், ஒரு உண்மையை எடுத்துச் சொன்ன ஒருவரை அலட்சியமாக்கி செய்தி போட தகுதி இல்லாமல் இருக்கும் பத்திரிகைகள் பற்றி ,அவையெல்லாம் எப்படி பத்திரிகை என்று சொல்வது தெரியவில்லை . மேலும்,
அண்ணாமலை சொன்ன விஷயம் ஏற்கனவே, ஒரு ஆங்கில பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது .அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல , அடுத்தது இவர்களெல்லாம் வருமான வரி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களுடைய பூர்வீக சொத்து எவ்வளவு என்பதை இந்த பத்திரிகைகளுக்கு தெரியுமா? தவிர , கல்யாணத்திற்கு சமையல் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் இன்று மந்திரி ஆகி இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கு 5000 கோடி சொத்து எப்படி வரும்?
அதுபோல் எத்தனை மந்திரிகள் சாராயம் காசியிருந்தவர்கள்? எத்தனை பேர் என்பது இவர்களுக்கு எல்லாம் அவர்களுடைய பூர்வீகம் தெரியாது. அதை எல்லாம் போய் தெரிந்து கொண்டால், இந்த பத்திரிகைகளுக்கு நல்லது. மேலும், அண்ணாமலை, நீங்கள் எந்த கேள்வியும் இப்போது கேட்க கூடாது. ஒரு வாரம் பொறுத்து தான் கேட்க வேண்டும் என்று பிரஸ்மீட்டில் சொல்லிவிட்டாராம்.
முதலில் ஊடகங்கள் மக்களுக்கா அரசியல் கட்சியா? கட்சிக்காக மக்களா ? என்பதை புரிந்து கொண்டு பேசலாம், எழுதலாம், உங்களுக்கு புரியவிட்டால் மக்களுக்கு எப்படி உண்மையை புரிய வைக்க போகிறீர்கள்?